கஞ்சா (Cannabis) (
/ˈkænəbɪs/;
Cán-na-bis) பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை,
கனாபிசு சற்றைவா (Cannabis sativa),
[1] கனாபிசு இன்டிகா(Cannabis indica),
[1] மற்றும்
கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.
[2]
பயன்கள்[தொகு]
கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ
9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும்.
சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.
கஞ்சா இலையின் புறநரம்புகளைக் காட்டும் அமைப்பு