"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label ஆனைக் குன்றிமணி. Show all posts
Showing posts with label ஆனைக் குன்றிமணி. Show all posts

Thursday, July 21, 2016

ஆனைக் குன்றிமணி

ஆனைக் குன்றிமணி.



ஆனைக் குன்றிமணி
.




மூலிகையன் பெயர் –: ஆனைக் குன்றிமணி.





தாவரப்பெயர் –: ADENANTHERA PAVONINA.



தாவரக்குடும்பம் –: FABACEAE.



வேறு பெயர்கள் :- மஞ்சாடி மரம். பொதுவான பெயர் Red Wood. 1. Bead Tree, 2. Circassian bean seed. 3. Coral wood, 4. Crab's eyes, 5. False sandlewood, 6. Jumbie bead.



பயன் தரும் பாகங்கள் –: வேர், விதை மற்றும் இலை ஆகியன.



வளரியல்பு –: ஆனைக் குன்றிமணி மரவகையைச் சேர்ந்தது. இது வளமான இடங்களில் நன்கு வளரும். மித வெப்ப நிலை தேவை. கந்தக மண் செம்மண்ணிலும் வளரும். இந்தியா, தென் கிழக்கு சைனா, தென்கிழக்கு ஆசிய நாடுகிளில் வளர்க்கப்படுகிறது. இது 20 மீட்டர் உயரம் கூட வளரக்கூடியது. இந்த மரம்  கெட்டியாக இருக்கும். இது வேகமாக வளரக்கூடியது. மரம் சுற்றி மிருதுவாக இருக்கும். இலைகள் பச்சையாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கும். 10 – 40 செ.மீ .நீளமும் பக்கக் கிழையில் 2-6 சதைகள் இருக்கும். ஒவ்வொரு இலையிலும் 9-15 சதைகள் இருக்கும். பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையுடையது..2 மி.மி.நீளமும் மஞ்சள் நிரத்தில் நட்சத்திரம் போன்று உச்சியில் பூக்கும். பூனை வால் போன்றும் இருக்கும். பூ வாடும் போது ஆரஞ்சு மணம் வீசும். காய் முற்றிக் காய்ந்தால் வெடித்தி கீழே விழுந்து விடும். உள்ளிருக்கும் விதை சிவப்பு நிறத்தில் இருக்கும். அது சுமார் 8-12 கெட்டியான விதை இருக்கும். சாலை யோரங்களில் ஆழகுக்காக வளர்ப்பார்கள். தங்கம் வெள்ளி எடைபோட இந்த விதைகள் பயன் பட்டன. 4 விதை ஒரு கிராம். 4 நெல் எடை ஒரு குற்றி மணி, 2 குன்றிமணி ஒரு மஞ்சாடி. விதையின் மேற்புரம் கெட்டியாக இருப்பதால் முழைக்க ஒரு விருடம் ஆகும். அதனால் விதையை சுடுதண்ணீரில் போட வேண்டும். ஒரு நிமிடம் அல்லது கந்தக அமிலத்தில் முறைப்படி ஊர வைக்க வேண்டும். நாற்றங்காலில் விதைக்க 10 நாட்களில் முழைக்கும். அது 3 மாத த்தில் 8-15 செ.மீ.உயரம் வளரும். 3 மாத த்தில் 30 செ.மீ. வளரும். இந்தியாவில் அதிகமாக கட்டிங் மூலம் இன விருத்தி செய்கிறார்கள். ஒரு வருடம் கழித்து செடி நன்கு வளர ஆரம்பிக்கும்..

.   


மருத்துவப் பயன்கள் –: முடக்கு வாதம்,வாத நோய்கள் மற்றும் சிறுநீரில் காணும் இரத்தம் நீங்கும். வேர் வாந்தியை உண்டாக்கும். அனைக் குன்றிமணியின் கொழுந்து இலைகளை உணவாக கீரையாகச் சாப்பிடலாம். விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதில் புரோட்டின் கொழுப்பு இருப்பதால் விரைவான சீரணசக்தியைக் கொடுக்கும். மரம் விரகுக்காகவும், பர்னீச்சர் செய்யவும், தரைக்குப் போடவும், வீடு கட்டவும் பயன் படுத்துகிறார்கள். படகுகள் கட்டவும் பயன் படுத்துகிறார்கள். அதன் சேகு சிகப்புச்சாயம், துணி உண்டாக்கவும் பயன்படுத்துகிறார்கள். சுத்தி செய்யாத விதை நச்சாகும்.



மரப்பட்டைத் தூள் எடுத்து தண்ணீரில் கலந்து தலைவலிக்கும், வயித்துக் கடுப்பு, வயித்துப் போக்குக்குப் பயன் படுத்துவார்கள். பட்டை மற்றும் இலையில் தயார் செய்த கசாயம் மேலை கண்ட நோயிக்குப் பயன் படுத்துவார்கள். சிகப்பு விதை பொம்மைகள் செய்யவும் தங்க நகைகளில் சேர்க்கவும் பயன் படுத்துகிறார்கள்.