"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label சிறுநீரகம். Show all posts
Showing posts with label சிறுநீரகம். Show all posts

Saturday, October 22, 2016

சிறுநீரகங்கள்

டயாலிசிஸ்' என்ற வார்த்தையை இப்போது எல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாரோ ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம். "சர்க்கரை நோய் முற்றினால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்", "சிறுநீரகங்கள் பழுதுபட்டால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்",
"டயாலிசிஸ் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றினால் ஆள் அவ்வளவுதான். காப்பாற்றுவது கஷ்டம்" என்று ஆளாளுக்கு ஒரு புரிதல். இவற்றில் எவை எல்லாம் உண்மை? டயாலிசிஸ் என்றால் என்ன? கடந்த தலைமுறையைவிட இப்போது மூன்று மடங்குக்கும் அதிகமானவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? டயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு ஆயுள் குறைவா? இப்படிப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் 24 மணி நேரமும் ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கும் சிறுநீர், சொட்டுச் சொட்டாகச் சிறுநீர்க் குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
தினமும், இரண்டு சிறுநீரகங்களுக்குள்ளும் 180 லிட்டர் ரத்தம் செல்கிறது. சிறுநீரகங்களில் உள்ள 140 மைல் நீளம்கொண்ட சல்லடை போன்ற நுண்ணியக் குழாய்கள் வழியாக ரத்தம் பயணித்து, அதில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
இந்தச் செயல்பாடு 15 சதவிகிதத்துக்குக் கீழ் குறையும் வரை எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். சிறுநீரகம் செயல்திறன் 15 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும்போது, அளவுக்கு அதிகமான நீர் வெளியேறாமல் கால், நுரையீரலில் தங்கும். நச்சுக்கள் வெளியேறாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையே சிறுநீரக செயல் இழப்பு என்கிறோம். இதை, திடீர், நாட்பட்டது, முற்றியநிலை என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
திடீர் சிறுநீரகச் செயலிழப்பு (Acute kidney failure)
*****************************************************************
நன்கு வேலை செய்துகொண்டிருந்த சிறுநீரகங்கள், திடீரென செயலிழந்துவிடக்கூடும். விபத்தில் ரத்த இழப்பு, அதீத ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகங்களில் கிருமித் தொற்று, சில வகை மருந்துகளுக்கு எதிர் விளைவு, சிறுநீரக குழாய் கல் அடைப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் சிறுநீர் அடைப்பு போன்றவற்றால் இது ஏற்படலாம். இவர்களுக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சைத் தேவைப்படலாம். பெரும்பாலான சமயங்களில் இரண்டு முதல் நான்கு வாரங்களில் சிறுநீரகங்கள் சரியாகி வேலை செய்யத் தொடங்கும். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தகுந்த சிகிச்சை எடுப்பதன்மூலம் முற்றிலும் பழைய நிலைக்கு சிறுநீரகங்கள் திரும்பிவிடும்.
நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic kidney failure)
************************************************************************
மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியாகப் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இதற்கு சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக இருக்கின்றன.
முற்றிய, நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு (End stage kidney failure)
*************************************************************************************
சிறுநீரகங்கள் மீண்டும் வேலை செய்ய வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்னை ஏற்பட, நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, மரபணுக் கோளாறுகள், சிறுநீரகங்களில் கட்டி, சிறுநீரக நாள அழற்சி ஆகியவை முக்கியக் காரணங்கள்.  சிறுநீரகம் முற்றிலும் செயல்இழந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற செயற்கை முறையில் சுத்தப்படுத்தும் சிகிச்சை தேவைப்படும்.
இதில், ஹீமோடயாலிசிஸ், பெரிட்டோனியல் டயாலிசிஸ் என இரண்டு வகை உள்ளன. இவை இரண்டும் தற்காலிக தீர்வு மட்டுமே. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே இவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis – எந்திர ரத்தச் சுத்திகரிப்பு)
***********************************************************************************
அசுத்த ரத்தத்தைச் செயற்கைமுறையில் சுத்தப்படுத்துவதுதான் ஹீமோடயாலிசிஸ். டயாலிசிஸ் சிகிச்சையின்போது, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், நீர் உள்ளிட்டவை எந்திரங்கள் உதவியுடன் நீக்கப்பட்டும். இதற்கு, உடலில் இருந்து ஒரு ட்யூப் வழியாக ரத்தம் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் அனுப்பப்படும். அங்க அது சுத்திகரித்து, மற்றொரு குழாய் வழியாக உடலுக்குள் திரும்ப அளிக்கப்படும்.
ஹீமோடயாலிசிஸ் செய்யப்படும் முறை
**********************************************************
முதன் முறையாக டயாலிசிஸ் செய்யும்போது, தற்காலிகமாக கழுத்துப் பகுதியில் சிறு துளையிட்டு குழாய்கள் பொருத்தப்படும். அதேநேரத்தில், கையில் ஆர்டீரியோவீனஸ் ஃபிஸ்டுலா (Arteriovenous fistula) எனும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
அதாவது, இவர்கள் இடது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, சிறிய இயந்திரம் பொருத்தப்படும். இது, ரத்தத்தை போதுமான அழுத்தத்தில் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் செலுத்த உதவும்.
இந்த அறுவைசிகிச்சை செய்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, கழுத்துப் பகுதியில் குழாய் வழியாக டயாலிசிஸ் செய்யப்படும். ஃபிஸ்டுலா தயாரானதும், கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே டயாலிசிஸ் செய்யப்படும்.
இந்தமுறையில், மணிக்கட்டு பகுதியில் உள்ள நல்ல ரத்தம் செல்லும் பெரிய ரத்தநாளத்திலும் (Artery), அசுத்த ரத்தம் செல்லும் சிறிய ரத்தநாளத்திலும் (Vein) ரத்தம் ஏற்றுவதுபோல ஊசி குழாய் செலுத்தப்படும். உடலில் இருந்து வரும் கெட்ட ரத்தம், டயலைஸர் (Dialyzer) இயந்திரத்துக்குள் செல்லும்.
இந்த இயந்திரத்தின் உள்ளே டயாலிசேட் (Dialysate) எனும் திரவம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். டயலைஸரின் உட்பகுதியில் உள்ள ஃபைபர்கள், வேண்டாத சிவப்பணுக்கள், நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டும். சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மட்டும் மீண்டும் உடலுக்குச் சென்றுவிடும்.
நோயாளிகளின் பாதிப்புக்குத் தகுந்தவாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டும். டயாலிசிஸ் செய்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தாலும், சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான் நிகழும். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டயாலிசிஸ் முறை ஏற்றது. ஆனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு டயாலிசிஸ் உகந்தமுறை அல்ல. இவர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது.
பெரிடோனியல் டயாலிசிஸ்
(Peritoneal Dialysis – வயிற்று ஜவ்வு வழி திரவச் சுத்திகரிப்பு)
*********************************************************************************
சிறு அறுவைசிகிச்சை மூலம் வயிற்றில் ட்யூப் ஒன்றை நிரந்தரமாகப் பொருத்தி, அதனுள் டயாலிஸேட் எனும் சுத்திகரிப்பு நீரைச்செலுத்தி, நோயாளிகளே டயாலிசிஸ் செய்துகொள்வது பெரிட்டோனியல் டயாலிசிஸ். பொதுவாக, நமது நாட்டில் இந்த சிகிச்சைமுறை மேற்கொள்ளப்படுவது இல்லை. எனவே, ஹீமோடயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்றால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை (Kidney transplantation)
*****************************************************************************
தொடர்ந்து டயாலிசிஸ் செய்வதால் ஏற்படும் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்கவும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகப் பெற்றோ, விபத்து போன்ற காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாகப் பெற்றோ பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரகத்தைப் பொருத்தலாம்.
பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி, சிறுநீரகத்தை   தாக்காமல் இருப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும்.
சிறுநீரகம் செயலிழப்பு நோயாளிகளுக்கான டயட்
**********************************************************************
தண்ணீர் அளவாகக் குடிக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால், கால், நுரையீரலில் நீர் கோத்து பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் நச்சுக்கள் அளவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அன்றாட உணவில் உப்பைத் தவிர்க்க வேண்டும். உப்பு சேர்க்கப்பட்ட கொழுப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். உப்பு தாக்கத்தை அதிகரிக்கும்.
ஜூஸ், குளிர்பானங்கள், காபி, டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிகம் நீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புரதச்சத்துள்ள உணவை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்க…
*******************************************
சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மருந்தே தேவை இல்லை. நமது உணவுப் பழக்கத்தின் வாயிலாகவே அதனைச் சரி செய்துகொள்ள முடியும்.
ரத்தத்தில் கலந்திருக்கும் யூரியா, கிரியாட்டினின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் நீர் சமநிலையைக் காக்கும் பணியையும் சிறுநீரகம் செய்கிறது. எனவே, அதன் பணியைக் குறைக்கும் பொருட்டு எளிமையாகச் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி, வெள்ளரிக்காய், தர்பூசணி என நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மசாலாக்கள் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உப்புகள் உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.
அதிகாலையில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்யும்போது ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சிறுநீரக ரத்த நாளங்கள் வலுவாகின்றன.
சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்
****************************************************
சிறுநீரகங்கள் படிப்படியாகச் செயலிழக்கும்போது, ஒருகட்டத்தில் அவற்றின் செயல்திறன் 70 சதவிகிதத்துகுக் கீழ் குறையும்.அது வரை பெரும்பாலானவர்களுக்கு பெரிய தொந்தரவு என்று எதுவும் வராமலும் இருக்க வாய்ப்பு உள்ளது. கீழ்கண்ட அறிகுறிகள் சிறுநீரகச் செயலிழப்பினால் ஏற்படலாம்.
சிறுநீர் வழக்கத்தைவிடக்  குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கழித்தல்
கை, கால், முகத்தில் திடீர் வீக்கம்
உயர் ரத்த அழுத்தம்
பசியின்மை, குமட்டல், வாந்தி
வாயில் கசப்புத்தன்மை
உடல் சோர்வு, களைப்பு, மயக்கம்
எதிலும் ஆர்வமின்மை, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம் போன்ற உளவியல் பிரச்னைகள்
தலைவலி, உடல்வலி, எலும்புகளில் வலி.
********************************************************************************************
நடராஜன் செழியன்,
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்

Monday, July 18, 2016

நெருஞ்சில்:

நெருஞ்சில்:Tribulus Terrestris


இதனால் சொட்டு மூத்திரம், சுரவெப்பம், கல்லடைப்பு, நீரடைப்பு, நீரெரிவு, வெள்ளை, முக்குற்றம், நீர்வேட்கை, முடக்குவாயு, சதையடைப்பு, உடலெரிவு,அழல்,தாது நட்டம், இருதய வீக்கம், காமாலை, மூத்திரகடுப்பு முதலியவை தீரும். உடல் வலிமை பெற்று, ஆண்மை பெருகும்

Thursday, June 30, 2016

சிறுநீர் கற்களைக் கரைக்கும்வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும்
வெங்காயம்!
  • வெங்காயத்தின்
காரத்தன்மைக்குக் காரணம்…
அதில் உள்ள 'அலைல்
புரோப்பைல் டை சல்பைடு'
என்ற எண்ணெய். இதுவே
வெங்காயத்தின் நெடிக்கும்,
நமது கண்களில் கண்ணீர்
வருவதற்கும் காரணமாக
அமைகிறது. வெங்காயத்தில்
புரதச்சத்துக்கள், தாது
உப்புக்கள், வைட்டமின்கள்
ஆகியவை உள்ளன. அதன்
பலன்களை இங்கே பார்ப்போம்,
வெங்காயம் ஒரு நல்ல
மருந்துப் பொருள். இதை
இதயத்தின் தோழன் என்றும்
சொல்லலாம். இதிலுள்ள
கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில்
கொழுப்பு சேர்வதை
இயல்பாகவே கரைத்து,
உடலெங்கும் ரத்தத்தை
கொழுப்பு இல்லாமல் ஓட
வைக்க உதவி செய்கிறது.
குளவியோ, தேனீயோ
கொட்டிவிட்டால் பயப்பட
வேண்டாம். அவை கடித்த
இடத்தில் வெங்காயத்தை
எடுத்துத் தேய்த்தாலே
போதும். வெங்காயத்தில் உள்ள
ஒரு வகை என்சைம்,
கொட்டியதால் ஏற்படும்
உடலில் வலியையும்,
அழற்சியையும்
உண்டாக்குகின்ற
ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற
கூட்டுப் பொருளை சிதைத்து
விடுகிறது. விஷத்தையும்
முறித்து விடுகிறது.
சிறுநீர் அடக்கிவைக்கும்
பழக்கம் ஆண்களைவிட
பெண்களிடம் அதிகம் உண்டு.
அவ்வாறு சிறுநீரை
அடக்குவதால் அதில்
நுண்ணுயிரிகளின் உற்பத்தி
அதிகமாகி, நோய் உண்டாகும்
வாய்ப்பு அதிகரிக்கும். இந்த
பழக்கத்தை தொடர்பவர்களுக்க
ு சிறுநீர்த்தாரைத் தொற்று
வரும். இவர்கள்,
வெங்காயத்தை உணவில்
அதிகமாகச் சேர்த்துக்கொண்ட
ால் போதும். வெங்காயம்
கழிவுப் பொருட்களை கரைத்து,
அழற்சியைக் குறைத்து
கழிவுகளை வெளியே
தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த்
தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக
சிறுநீர்ப் பையில் சேர்ந்தால்
கற்கள் தோன்றும்.
வெங்காயத்தை அடிக்கடி
சாப்பிட்டால் அந்த கற்கள்
கரைந்துவிடும்.
முதுமையில் வரும் மூட்டு
அழற்சியை கட்டுப்படுத்தும்
ஆற்றல் வெங்காயத்திற்கு
உண்டு. இதற்கு
வெங்காயத்தையும், கடுகு
எண்ணெயையும் சேர்த்து
மூட்டு வலி உள்ள இடத்தில்
தடவினால் போதும். வலி
குறைந்துவிடும்.
செலனியச் சத்து
இருப்பவர்களுக்குத்தான்
கவலை, மன இறுக்கம்,
களைப்பு போன்ற பிரச்சினை
தோன்றும். இதைத் தவிர்க்க
சுலபமான வழி வெங்காயத்தில்
இருக்கிறது. வெங்காயத்தை
தொடர்ந்து உணவில் எடுத்து
வந்தாலே போதும்.
தேவையான செலினியச்சத்து
கிடைத்துவிடும். வெங்காயம்
தவிர, பூண்டையும் இதற்காக
பயன்படுத்தலாம்.
சீதோஷ்ண நிலை
மாறும்போது அடிக்கடி
இருமல் வரும். நுரையீரல்
அழற்சி, மூக்கு எரிச்சல்
போன்றவையும் ஏற்படும்.
சிறிது வெங்காயச் சாற்றில்
தேன் கலந்து சாப்பிட்டால்
மேற்கண்ட பிரச்சினைகள்
நீங்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
மருந்துப்பொருள்
வெங்காயத்தில் இருப்பதாக
சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகைபிடித்தல், காற்று
மாசுபடுதல், மன இறுக்கம்
போன்றவற்றால் ஏற்படும் செல்
இறப்புகள், செல் சிதைவுகளை
இது சரிசெய்து விடுகிறது.
நாலைந்து வெங்காயத்தை
தோலை உரித்து அதோடு
சிறிது வெல்லத்தைச் சேர்த்து
அரைத்து சாப்பிட பித்தம்
குறையும், பித்த ஏப்பம்
மறையும்.
வெங்காயத்தை வதக்கிச்
சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும்
ஆசனக் கடுப்பு நீங்கும்
வெங்காயச் சாறு சில
வயிற்றுக் கோளாறுகளை
நீக்கும். இதை மோரில் கலந்து
குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும்,
வெந்நீரையும் கலந்து வாய்
கொப்பளித்து, வெறும்
வெங்காயச் சாறை பஞ்சில்
நனைத்து பல் ஈறுகளில்
தடவிவர பல்வலி, ஈறுவலி
குறையும்.
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள்
வெங்காயச் சாற்றை நாள்
ஒன்றுக்கு அரை அவுன்ஸ்
வீதம் மூன்றுவேளை
சாப்பிட்டு வர நுரையீரல்
சுத்தமாகும்.

Sunday, May 22, 2016

சிறுநீர் பிரிய

சிறுநீர் பிரிய
* முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
* புதினா இலையை ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.
* வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கி சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.
* முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
* கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.
* சதகுப்பைக் கீரையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். கால் வீக்கமும் குணமாகும்.

Wednesday, May 18, 2016

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

 [IST] How to deduct kidney problems in earlier stage? அமெரிக்க நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல், முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.இதில் பெரும்பாலானவர்களுக்கு, அவர்களுக்கு சிறுநீரக வியாதி இருப்பதே தெரிந்திருப்பதில்லை. சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது. 1. சிறுநீரக வியாதி உள்ளதா இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது? ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. 2.நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா? இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80% அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் உடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. 3. சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன? திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் தெரியாமல் போகலாம். சிலருக்கு கீழ்கண்ட அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல். உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும். 4. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா? அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்). பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான். ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீரகங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும். 4. இந்த ஆரம்ப பரிசோதனைகளைத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா? மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்து கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை, கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம். 5. சரி! இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பு,செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது எனில் என்ன செய்ய வேண்டும்? வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம். இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம் வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம். 6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம். 1. ஆரம்ப கட்டம் (நிலை-1): சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால், உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம். 2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம். 3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாக்கும் இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (ஃபிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-B என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 4. முற்றிய சிறுநீரக செயலிழப்பு (நிலை-4): இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.

Sunday, April 24, 2016

சித்த மருத்துவம் சிறுநீரகக்கல் கரைத்துவிடும் பீன்ஸ்



சித்த மருத்துவம்
சிறுநீரகக்கல் கரைத்துவிடும் பீன்ஸ்..!



( ¼ ) கால் கிலோ பீன்ஸ் , விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீரும்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


கல்லும் மெல்லக் கரையும்


பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன். உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா?
அரிசியில் சரிபாதி கல்லு!
அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?

இப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும். ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.
சிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம். கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம். சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம். இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும். இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும். அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல்! இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.

சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும். மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும். சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும். சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும். சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும். 2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம். சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம். 2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

உணவு உட்கொள்ளும் முறை:

பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம். வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் தினமும் 10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம். தினமும் இரண்டு வேளை காபி போதும். தேநீர் அறவே வேண்டாம். நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும். அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது. கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம். முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம். மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி. காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம். பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுநீரக கல்



சிறுநீரக கல்

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம்.

* சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

* சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது நல்லது.

பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்னைகள் தோன்றலாம், அது வேலைநிறுத்தம் வரை சென்றுவிடலாம் என்றாலும் முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தமாக இருக்கும்.

மற்றொரு முக்கியக் காரணம் சர்க்கரைநோய்.

கருவில் உண்டான பிரச்னைகளால் சிலருக்குப் பிறவியிலேயே சிறுநீரக நோய்கள் உருவாகிவிடும். வேறு சிலருக்கு மரபணுவின் காரணமாக, அதாவது முன்னோர்களின் 'அருட்கொடை'யாக சிறுநீரக நோய்கள் தோன்றும். இதை என்பார்கள். மூன்றாவது 'வந்து சேர்ந்த சிறுநீரக நோய்கள்'. அதாவது இந்த மூன்றாவது வகையின் கீழ் வருகிற நீண்டகால சிறுநீரக நோய்க்கு முக்கியக் காரணங்களாகத்தான் அதிக ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அமைகின்றன.

ஏன், எப்படி என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 என்கிற அளவில் இருந்தால் அதை நார்மல் என்பார்கள். இதில் 120 என்பது 'சிஸ்டோலிக் ரத்த அழுத்தம்'. அதாவது இதயம் முழுவதுமாகச் சுருங்கும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.80 என்பது 'டயஸ்டோலிக் ரத்த அழுத்தம்'. அதாவது இதயம் முழுவதுமாக விரிவடையும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.நம் உணர்வுகளுக்கும், உணவுக்கும் தகுந்தமாதிரி அவ்வப்போது ரத்த அழுத்தம் கொஞ்சம் ஏறலாம். இறங்கலாம். தப்பில்லை. ஆனால் பொதுவாகவே ரத்த அழுத்தம் அதிகமானால் அது கவலைக்குரிய விஷயம்தான்.ரத்த அழுத்தம் அதிகமாவதற்குப் பல காரணங்கள். கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள உணவு வகைகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் இப்படி ஆகலாம். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, ரத்தக் குழாயின் உள் பக்கத்தில் படிந்துவிடுகிறது. இதனால் ரத்தக் குழாயின் உள்பக்கம் சிறுத்துவிடுகிறது. பாதை குறுகலாகிவிட்டாலும் அதே அளவு ரத்தம் அங்கு பாய வேண்டுமென்றால், அதிக அழுத்தம் அதற்குத் தேவைப்படும் இல்லையா?உணவில் அதிக உப்பைச் சேர்ப்பதாலும் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். ரத்தத்தில் உள்ள தண்ணீரை உப்பில் உள்ள சோடியம் இழுத்துக் கொள்கிறது. இதனால் ரத்தத்தின் அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகமாகின்றன.மன அழுத்தம் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உண்டு.

ரத்தக் குழாய்கள் குறுகலாகி விடுவதால், அவற்றில் செல்லும் ரத்த அளவு குறைந்துவிடும். முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், மூளை போன்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த அளவு குறையும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.கடுமையான உயர் ரத்த அழுத்தம் குறுகிய காலத்திலேயே சிறுநீரகங்களைப் பாதிக்கும். மிதமான உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி, தொடர்ந்து பல வருடங்களாக சிறுநீரகங்களைப் பாதித்து மோசமான இழப்பினை நாம் உணராமலேயே உண்டாக்கிவிடும். அதனாலேயே உயர் ரத்த அழுத்ததினை ஒரு மௌனமான உயிர்க் கொல்லி என்கிறார்கள்.

சிறுநீரகங்கள் ரத்த அழுத்தத்தினைச் சீர்செய்யும் ரெனின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன என்று குறிப்பிட்டோம். சிறுநீரகம் பாதிக்கப்படும்போது. இந்த ஹார்மோன் சுரப்பதிலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு ரத்த அழுத்தம் மேலும் சீரின்றிப் போகலாம். இதனால் சிறுநீரகங்களுக்கு மேலும் பாதிப்பு.எனவே, சிறுநீரகங்களை மனத்தில் கொண்டும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகக்கும். மாரடைப்பு, ரத்த நாளங்கள் வெடித்தல் போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கும். கண்ணில் உள்ள ரத்த நாளங்களைச் சிதைத்து, கண் பார்வை இழப்பும் நேரலாம்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி அறிவது?
ரத்த, சிறுநீர் சோதனைகள், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதனைத் தெரிவிக்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கச் சிறுநீரில் புரதம் இருப்பது தான் முக்கியமான அறிகுறி.

ரத்தத்தில் உள்ள கிரியாட்டினைன் அளவு, சிறுநீரகங்களால் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு வெளியேற்றப்படுகிறதா என்பதனைக் காட்டும்.
உங்களுக்குக் கால்களில் வீக்கம், காரணம் சொல்லமுடியாத சோர்வு, பலவீனம், தினசரி பழக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் சிரமம், பசியின்மை, குமட்டல் ஆகியவை தொடர்ந்து இருந்தால், கட்டாயமாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இப்போது சிறுநீரக நோய்களின் இன்னொரு காரணமான சர்க்கரை நோயைப் பார்ப்போம்.
விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் ஓர் உணவுப் பொருள் குளுக்கோஸ். சேர்ந்த உடலுக்கு உடனடியாகச் சக்தி தரும் விஷயம் இது.ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அப்படியே உடலுக்குத் தேவைப்படும் சத்தாக மாறிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சிலருக்கு இப்படி நடப்பதில்லை. ஏன்?ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நம் உடலிலுள்ள திசுக்கள் அப்படியே உறிஞ்சி விடுவதில்லை. நம் கணையத்தில் சில திசுக்கள் உள்ளன. 'ஐலெட்ஸ் ஆஃப் லங்கர்ஹான்ஸ்' எனப்படும் இந்தத் திசுக்கள். இன்சுலின் என்ற சுரப்பியைச் சுரக்கின்றன. இந்தச் சுரப்பிதான் குளுக்கோஸை, திசுக்கள் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுகிறது.

துரதிர்ஷ்டவசமாகச் சிலருக்கு இன்சுலின், தேவையைவிடக் குறைவாகச் சுரக்கலாம். அப்போது என்ன ஆகும்? ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் தங்கிவிடும் ( அவை திசுக்களால் உறிஞ்சிக்கொள்ளும் விதத்தில் இல்லாதவை) அதேசமயம் தேவைக்குக் குறைவான அளவே திசுக்களால் குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் உடலில் சோர்வு, களைப்பு.இது ஒரு பக்கமிருக்க, இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாகிறது. அதிக அளவ குளுக்கோஸை வடிகட்ட வேண்டியிருக்கிறதே!அளவுக்கு மேல் பாரம் ஏற்றினால், அது மயிலிறகாக இருந்தாலும் வண்டியின் அச்சாணி முறிந்துவிடுமல்லவா? அதுபோல, எல்லை தாண்டி குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து விடுவதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.சர்க்கரைநோய் பல வருடங்களுக்குக் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மற்ற பாகங்களைவிட கண்களும் சிறுநீரகங்களும் அதிகம் பாதிப்படைகின்றன. இதற்குக் காரணம், அவற்றில்தான் நிறைய ரத்தக்குழாய்கள் உள்ளன. தவிர, அவை மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வேறு.
நம் சிறுநீரகங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தி உண்டு. பகலில் அதிகமாக வடிகட்டும் பணியைச் செய்யும் இவை, இரவில் குறைவாகவே இந்த வே¬யைச் செய்கின்றன. இல்லையென்றால் என்னவாகும்? இரவில் பலமுறை நாம் எழுதந்திருக்க வேண்டி வரும். அதனால்தான் இயற்கை, சிறுநீரகங்களை இப்படிச் செயல்பட வைத்திருக்கிறது.

ஆனால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக ஆக, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. அதிகப்படியான குளுக்கோஸ் விஷமாக மாறி, அங்கு நெஃப்ரான்களைப் பாதிக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தின் வடிகட்டும் பணியிலும் மாறுதல் ஏற்படுகிறது. காலக்கட்டுப்பாட்டோடு இயங்குவதைச் சிறுநீரகம் மாற்றிக்கொள்கிறது. இதனால்தான் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் இரவில் பலமுறை சிறுநீர் கழிக்கிறார்.சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்பதன் மூலம் அறிகுறி சிறுநீரில், மிகவும் சிறிய அளவிலான ஆல்பியுமின் என்ற புரதச்சத்து வெளியேறுவது£ன். இந்தக் கட்டத்திலேயே இதை அறிந்துக்கொண்டு, சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பைச் சரி செய்யமுடியும். இல்லையென்றால் சிறுநீரில் உப்பு அதிகமாகக் கலந்து, நாளடைவில் கைகால் வீக்கம் என்று தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பில் முடியலாம்.

அடுத்தடுத்து உடனடியாக இவை நேர்ந்துவிடுமா? நல்லவேளையாக இல்லை.புரதச் சத்துக்களை இழக்கத் தொடங்கி சில வருடங்கள் (சுமார் எட்டு வருடங்கள்) தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்கவிட்டால், சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு மிக அதிகம்.இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது செயல்திறனை இழக்கும் சிறுநீரகம், நாளடைவில் தனது வடிகட்டும் திறனை மொத்தமாகவே இழந்துவிடலாம். (அப்போது உடலுக்குத் தேவையான, புரதம் உள்ளிட்ட, பல சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் சேரும் சத்துக்கள், சிறுநீர் வழியாக வெளியேறிவிடுவதால்தான், அவர்கள் மிகவும் இளைத்துவிடுவார்கள்.)சர்க்கரைநோயைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், சிறுநீரகப் பாதிப்புகளையும் கணிசமாகக் குறைக்கலாம். பாதிப்பு நேர்ந்தபின் சிறுநீரகங்களைச் சரிசெய்வது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கியக் காரணங்கள், சர்க்கரை நோயும் அதிக ரத்த அழுத்தமும் என்பதைப் பார்த்தோம். இதே காரணங்கத்£ன். கண்களின் பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும்கூட முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.

எனவே உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டும் இருந்தால், உங்கள் பார்வை மிகுந்த ரிஸ்கில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த இரண்டு காரணிகளையும் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

கிட்னி கல்லின் அற்குறிகளும், தடுப்பு முறைகளும்:

கிட்னி கல்லின் அறிகுறிகள்:

* சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

* சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.

* தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

* சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

சிறுநீரக கல் வராமல் இருக்க தடுப்பு முறைகள்:

* அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதைவகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.

* முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல் குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.


மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட


                             மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட

                             மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட  [Image]
காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர்  .
கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்.
இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருருக்கவேண்டும், வலியில் எங்கே தூங்குவது சிரமமாக இருக்கும் ...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவரும்.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் ,
சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
நோய்வந்தவருக்கு மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது என தகவல். அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடலாம்.,  கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு `
இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள். 
1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்,.   

                            கொள்ளு
கொள்ளு -இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -கொள்ளு -கருப்பு பயிரை -இரவில் ஊறவைத்து காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .

சிறுநீரகல்


கொள்ளு -macrotyloma uniforum

கொள்ளு -
இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -
கொள்ளு -கருப்பு கானபயிரை -இரவில் ஊறவைத்து
காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .
மாவிலங்கு -creteva magna

மாவிலங்கு -
மாவிலங்க பட்டை -ஆயுர்வேதத்தில் வருண இன்று அழைக்க படுகிறது.
மாவிலங்கப் பட்டையினால் வாதமொடு சன்னிகளும்
பாவுகின்ற கல்லடைப்பும் பாருமே -அகத்தியர் குண பாடம்
சீறுநீரக கல் ,பித்தப்பை கல்லும் கூட -மாவிலங்க பட்டை யினால் கரையும்.
ஆயுர்வேத மருதுக்கடைகளில் வருனாதி கசாயமாக இது எளிதாக கிடைக்கும்
நெருஞ்சில் முள் -tribulus terrestris

நெருஞ்சில் முள் ஆயுர்வேதத்தில் கோக்ஷுர என்றழைக்கபடுகிறது
சொல்லண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டக்கால்-வல்லக்
..............................அகத்தியர் குணபாடம்..
எவ்வளவு பெரிய கல்லானாலும் நெருஞ்சில் முள்ளுக்கு முன்னே -பயந்தோடும்
சிறு பீளை

சிறு பீளை -
சிறு பீளை ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம் என்று அழைக்கப்படுகிறது -
பொங்கலுக்கு இதனை மண் பானையோடு வைத்து கட்டுவது வழக்கம்-
இது கன்னுபுள்ளை செடி என்றும் கூறுவார்.
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காகக் குடற்சூலை
பொரடரி ரக்த கணம் போக்குங் காண்-வாரிறுக்கும்
பூண் முலையே ! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை
யாமிதுகற் பேதி யறி..
இலைசாற்றால்-அல்லது சமூலக்கஷாயதால் கல் கரைந்து வெளியேறும் .
சிறு நீரகக் கல் மருத்துவம்
"சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கைவிக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவேகூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்புகாட்டிற் கழன்றோடுங்காண் "
( தேரையர் அருளிச்செய்த குணவாகடத்திரட்டு.)
சிறு கண் பீளை(AERVA LANATA) சமூலம்
"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலைபேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளையாமிது கற்பேதி யறி." (பதார்த்த குணபாடம் 291
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம்,
முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.
சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)
இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்றதனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
" சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்ப மாமிச மருகல்கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்றுநெருஞ்சின்றும் வித்தே நினை." (பதார்த்த குணபாடம் _ 876 )
பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு, மூத்திர எரிச்சல்,
துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.
மாவிலங்கப்பட்டை (CRATEVA MAGNA )
" மாவிலங்கப் பட்டையினால் வாத மொடுசந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. "
பதார்த்த குணபாடம் _ 550.
பேராமுட்டி வேர் (PAVONIA ODORATA )கல் கரையும்போது ஏற்படுகின்ற வலி காய்ச்சல் போன்ற துயர்களை நீக்க வல்லது.பேராமுட்டி வேரினால் வாதசுரம் , தாக நோய்கள் , மாந்த கணம், குளிர்ச்சுரம் பித்த நோய்கள்ஆகியவை குணமாகும்.
" வாத சுரந் தாகம் மதலைக் கணமாந்தஞ்சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலேபேரா முட்டித் தூரைப் பேசு. "
(பதார்த்த குணபாடம் _51 )
எலுமிச்சன் துளசி -ocimum grattissiumum

எலுமிச்சன் துளசி -it  is having lithotriptic properties
அட துளசி கல்லை கரைக்கும் என்கிறீர்களா ?.நிச்சயமாக மூத்திரப்பை யில் உள்ள கல்லை கரைப்பதாக பல சான்றுகள் உள்ளது
கமேல -கம்பில்லக -mallotus phillippinesis
இது ஒரு வகை மரத்தின் பழங்களின் மீது படிந்திருக்கும் சிவந்த பொடி.இது பேதியுண்டக்கும் எனவே கவனத்துடன் கொடுப்பது நல்லது.
பெருங்களர்வா-salvdora indica

பெருங்களர்வா-
இது பெரிய மரமாகும்.இந்த மரத்தின் பழம் சிறுநீரக கல்லை கரைக்கும் தன்மையுடையது .
வாழை தண்டு -musa paradisiaca-

வாழை தண்டு -
வாழை தண்டின் சாறு கல்லை கரைக்கும் .இது மிக சிறந்த மூத்திர பெருக்கி .தயவு செய்து மூன்று நாட்களுக்கு மேல் வாழைதண்டு சாறை குடிக்காதீர்கள்.அவ்வாறு குடித்தால் எலும்பின் பலமும் குறைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வாழை தண்டும்-தண்டங்கீரையும் யானைக்கு தொடர்ந்து கொடுத்தால் யானையும் படுத்துக் கொள்ளும் என்பது தென் நாட்டு பழ மொழி .
கல்லை கரைக்க வாழை தண்டை விட பல மூலிகைகள் உள்ளன.எனவே வாழை தண்டை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டா தீர்கள்

முருங்கை இலை சாறு குடித்தாலும் கல் கரைகிறது .

கல்லுருக்கி இலை - கல்லை கரைக்கிறது -இந்த செடி கண்டறிவதில் சில முரண்பாடுகள் உள்ளது.இருந்தாலும் இந்த புகைப்படம் சரி என்றே கருதுகிறேன்.எனது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு அணைக்கட்டின் அருகிலுள்ள மலையில் இந்த மூலிகை கிடைக்கிறது இது carcara sargada வை  ஒத்துள்ளது

தென்னம்பூவில் ஒரு மருந்து செய்வதுண்டு -அதுவும் கல்லை கரைத்து வெளியேற்றும்.

Saturday, April 16, 2016

சிறுநீரக செயல்பாட்டை திரும்பபெற

நீரகம் (Kidneys)

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.உணவு முறைசிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.பொட்டாசியம், பாஸ்பரஸ்: உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.புரதங்கள் (ப்ரோடீன்): புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.நீர்: நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.சேர்த்து கொள்ள வேண்டியவைஒமம்: ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.புளி: புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.மஞ்சள்: மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.காய்கறிகள்: பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.பழங்கள்: ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்தவிர்க்க வேண்டியவைகாய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்குபழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்




சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:



இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவ

Tuesday, April 12, 2016

சிறுநீரகம்


சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு.

*சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. <

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, March 29, 2016

சிறுநீரகத்தை பலப்படுத்ததும் நாயுருவி

சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் நாயுருவி...

இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு. மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, கொஞ்சங் கொஞ்சமாய் அந்தப் பாறையில் துளையிட்டு, பாறைக்கு மேலே வளர்ந்து விடும். இந்தத் தன்மையைக் கொண்டே சித்தர்கள் நாயுருவியை மருந்தாக்கினர்.

அதாவது, நம் உடலில் உண்டாகும் கட்டிகள், கழலைகள் போன்றவற்றை நாயுருவி குணப் படுத்தும் என்று நம்பி, நாயுருவியை மருந்தாக்கினர். சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி (ஈஹ்ள்ற்), கற்கள் (நற்ர்ய்ங்ள்) போன்றவற்றை குண மாக்கும் தன்மை நாயுருவிக்கே உள்ள தனிச்சிறப்பாகும்.

நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.

சித்தர்கள் அருளிய சிறுநீரகம் காக்கும் சிறப் பான மருந்தினைக் குறிப் பாய் வரைகிறேன்.

நாயுருவி வேர், சிறுபீளை வேர், சாரணை வேர், சிறுகீரை வேர், சிறு நெருஞ்சில் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து பால் விட்டு அவித்து உலர்த்திக் கொள்ளவும். பின்னர் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டுவர, சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதிசயமாய் குணமாகும்.

சிறுநீரக நோய்கள் பல வருடங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகளைக் காட்டும். அதை நுட்பமாய் உணர்ந்து சித்தர்கள் அருளிய மருந்துகளை மிகச் சிரத்தையுடன் உட்கொண்டு வந்தால், சிறுநீரகம் செயல்படும் திறனை ஒழுங்குபடுத்தி விடலாம். வரும்முன் காக்க வள மையான மருந்துகள் சித்த மருந்துகள் மட்டுமே!

காய்ச்சல் விலக...

நாயுருவி இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து, அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து விழுதாய் அரைத்துச் சாப்பிட, அனைத்து வகையான காய்ச்சல்களும் விலகும்.

தீவிரமான காய்ச்சல் தகிக்கும்போது, நாயுருவி இலையை சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, நீரை வெதுவெதுப்பாய் அடிக்கடி பருகி வர, காய்ச்சல் படிப்படியாகத் தணியும்.

வயிற்றுவலி விலக...

நாயுருவி இலைச்சாற்றுடன் துளி பெருங் காயம் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுவலி உடனே விலகும். இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி சாப்பிட்டு வர, முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.

வெள்ளைப் படுதல் குணமாக...

நாயுருவி இலைச்சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவில் சேர்த்துச் சாப்பிட்டு வர, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் உடனே குணமாகும். மேலும் பெண்களின் மர்மப் புண்களும் ஆறும்.

மூலநோய் குணமாக...

உள்மூலம், வெளிமூலம், கீழ்மூலம், ரத்த மூலம் போன்ற மூலநோயின் அனைத்து வகைகளையும் குணப்படுத் தும் அற்புத மூலிகை நாயுருவியாகும். இன்றும் கிராமங்களில் ரத்த மூலத்தை உடனே நிறுத்த நாயுருவியையே மருந் தாக்குகின்றனர்.

நாயுருவி இலைச்சாறு 60 மி.லி. எடுத்து சிறு பாத்திரத்தில் இட்டு காய்ச்சி சுண்ட வைத்து, அதில் இரண்டு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பின்னர் இரண்டு சின்ன வெங்கா யத்தையும் நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறவும். இதனைச் சாப்பிட, மூலத்தில் உண்டாகும் ரத்தக் கழிச்சலானது உடனே தீரும்.

வெட்டுக் காயங்கள் ஆற...

நாயுருவி இலையை 100 கிராம் அளவில் அலசி எடுத்து, அதை 500 மி.லி. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சவும். எண்ணெய் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி ஆற வைத்து, எண்ணெயில் உள்ள இலைகளை விழுதாய் அரைத்து மீண்டும் எண்ணெயிலேயே கலந்து விடவும். இந்த எண்ணெயைப் பூசி வர, புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள் போன்றவை உடனே ஆறும்.

உடல் இரும்பைப்போல் உறுதியாக...

நாயுருவி அரிசியை முறைப்படி சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பைப்போல் உறுதியாகும் என்று சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

50 கிராம் நாயுருவி அரிசியைச் சாப்பிட்டால் இரண்டு வேளை பசியைத் தாங்கும் சக்தி கிடைக்கிறது. நாயுருவி மிகத் திறனுள்ள ஒரு உணவாகும்.

மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும்.