"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label வர்மகலை. Show all posts
Showing posts with label வர்மகலை. Show all posts

Thursday, December 1, 2016

"நினைவாற்றல் அதிகரிப்பதற்கு வர்மக்கலை மருத்துவம்

"நினைவாற்றல் அதிகரிப்பதற்கு வர்மக்கலை மருத்துவம்"
கீழ்காணும் மூன்று வர்மங்களை அதிகாலை நேரத்தில் இயக்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்
திலர்தகாலம்:-
                         இந்த வர்மம் நெற்றியில்  இருபுருவ மத்தியிலிருந்து நெல்லிடை கீழாக அமைந்துள்ளது
                        
இயக்கும் முறை:-
                                கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தி மேல்நோக்கி மூன்று முறை தூக்கவும்
உள்ளங்கை வெள்ளை வர்மம்:-
                                                        இந்த வர்மம் இரண்டு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து இரண்டு விரல் மேலாக அமைந்துள்ளது(விரலை நோக்கி)
          
இயக்கும் முறை:-
                             கட்டைவிரலை வைத்து அழுத்தி மணிக்கட்டை நோக்கி மூன்று முறை இழுக்கவும்
உள்ளங்கால் வெள்ளை வர்மம்:-
                                                         இந்த வர்மம் இரண்டு கால்களிலும் பெருவிரலுக்கு அடுத்த விரல் கீழே நான்கு விரலளவில் அமைந்துள்ளது
இயக்கும் முறை:-
                              கட்டைவிரலை வைத்து அழுத்தி மேல் நோக்கி மூன்றுமுறை தேய்க்கவும்
நன்றி

Sunday, April 3, 2016

சக்திகூர் அடைங்கள்


வர்மக்கலை மருத்துவ ரகசியம்"
1. சக்திகூர் அடங்கல் :
இந்த வர்மம் உள்ளங்கால் பள்ளத்தில் அமைந்துள்ளது, இந்த இடத்தில் கட்டைவிரலை வைத்து வலது புறம் மூன்று சுற்று சுற்றுவதால் மயக்கம், காக்கை வலிப்பு, உள்ளங்காலில் அதிக வியர்வை, உள்ளங்கால் எரிச்சல், வலி, குரல் இழப்பு, கண்பார்வை மங்கல், சிறுநீர் பிரிவதில் தொந்தரவு, தொண்டைப்புண், நாக்கு வறட்சி, உச்சந்தலை வலி, ஆகியவை தீரும். மன அமைதி கிடைக்கும். இந்த வர்மம் இரண்டு கால்களிலும் அமைந்துள்ளது.

கண் புகைச்சல் வர்மம்



"வர்மக்கலை மருத்துவ ரகசியம்"

2.கண் புகைச்சல் வர்மம் :
இந்த வர்மம் அமைந்துள்ள இடம் வெளிப்புற கணுக்கால் மூட்டின் ஒருவிரல் கீழே.
இந்த இடத்தில் கட்டைவிரலை வைத்து மெதுவாக மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
தலைவலி, தலை கிறுகிறுப்பு, தூக்கமின்மை, கவலை, மனஅழுத்தம், மனநோய்கள், கணுக்கால் வலி, வலிப்பு நோய்கள், கால் வலி, முதுகு வலி, போதைப் பழக்கம், கணுக்கால் வலி, ஆகிய நோய்கள் குணமாகும்.

குடுக்கை வர்மம்


"பெண்களுக்கான அற்புதமான வர்மம்"

தொப்புளிலிருந்து பத்து விரல் அளவு நேர் கீழே அமைந்துள்ள வர்மம் "குடுக்கை வர்மம்" ,இந்த வர்மத்தில் கட்டை விரலைக்கொண்டு லேசாக மூன்று முறை அழுத்தி விடவும் ,அதன் பின் அடிவயிற்றை மூன்று முறை தடவி விடவும் ,இதன் பயன்: பெண்களுக்குக்கு வரக்கூடிய மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும், அதிக இரத்தப்போக்கு சீராகும், மாதவிடாய் வயிற்று வலியை போக்கும், கர்பப்பையில் உள்ள நீர் கட்டிகள் நீங்கும்,கரு முட்டை முதிர்ச்சி அடைய உதவியாக இருக்கும்,பெண் இன உறுப்பு குறைபாடுகள் நீங்கும்.


விருத்தி அடங்கள்



"வர்மக்கலை மருத்துவம்"
"விருத்தி அடங்கல்"
இந்த அடங்கல் அமைந்துள்ள இடம் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடைவெளியயிலிருந்து மூன்று விரல்கள் மேலே அமைந்துள்ளது.

இது ஒரு முக்கியமான அடங்கல் இவ்விடத்தில் கைபெருவிரலால் மேல்நோக்கி அழுத்தம் தர உடல் ஆரோக்கியம் ஏற்படும், உடல் தசைகளின் இறுக்கத்தினால் ஏற்படும் வலிகள் நீங்கும்,தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம், தலைவலி, கண்நோய் ,கல்லீரல் பாதிப்புகள், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை ,ஹெர்னியா,மூச்சுப்பிடிப்பு,குழந்தைகளின் வலிப்பு,சிறுநீர் தேக்கம்,சிறுநீர் தானாக வெளியாதல் ஆகிய நோய்கள் தீரும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது 7 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்தவும்

மாரடைப்பு நீக்கும் வர்மக்கலை


"மாரடைப்பு நீக்கும் வர்மக்கலை வைத்திய ரகசியம்"

"திடீரென்று மாரடைப்பு (Heart attack) வந்து அவதியுரும்போது மேற்காணும் வர்ம புள்ளிகளில் அழுத்தம் கொடுத்தால் மார்வலி நீங்கும் தொடர்ந்து பத்து நாட்கள் அழுத்தம் கொடுத்து வர பூரணமாக மாரடைப்பு குணமாகும்.

கொண்டய்கொல்லி வர்மம்


"வர்மக்கலை அடிமுறை ரகசியம்"

'கொண்டக்கொல்லி வர்மம்'

வகையான தலைமுகிந்த கொண்டக் கொல்லி
வகுப்பாக கொண்டிடுகில் குணத்தைக்கேளு
துகையான கொண்டையது குழைந்து போகும்
தோகையரே ஸ்திரீபோகம் விழுந்து போகும்
பகையான சன்னி சீதங்கள் வந்து
பழிகேடு செய்திடுமே பாங்காய்க் கொண்டால்
தகையான பெரியோர்கள் வந்திட்டாலும்
தப்பாது மரணம்வரும் சார்ந்து கேளே.

பொருள்:-

சரியாக உச்சி நடுவில் கொண்டைகொல்லி வர்மம்.முறையாக அதில் தட்டோ,முட்டோ,அடியே பட்டால் தலை நிமிர்ந்து நிற்காது.லிங்கம் தளர்ந்து போகும்.உயிர்க்குப் பகையான சன்னி,குளிர்ச்சி இவை ஏற்பட்டு மரணமும் ஏற்படலாம்.மாசறக் கற்ற பெரியோர்கள் வந்து சிகிச்சை செய்தாலும் மரணம் வரும் என்பதை மேற்சொன்ன குறி குணங்களால் அறிந்துகொள்.


சென்னி வர்மம்


"வர்மக்கலை அடங்கல் ரகசியம்"

அடியிடிகள் படுவதாலோ அல்லது கீழே விழுவதாலோ ,வாய் திறந்து விடும் வாயை மூட முடியாது அதற்குரிய வர்மக்கலை அடங்கல் முறை:-

'வல்லா வாயது திறந்திடுகில் வழுத்தும் சென்னியில் அழுத்திடபோம்'

அதாவது சென்னியில் அமைந்துள்ள சென்னி வர்மத்தில் இருபுறமும் கட்டைவிரல்கொண்டு அழுத்திவிட வாய்மூடி இயல்பு நிலைக்குவரும்.

ஒற்றை தலை வலி

"ஒற்றை தலைவலிக்கு அனுபவ வைத்தியம்"

அதிகாலை வெறும் வயிற்றில் அரை டம்ளர் திராட்சை சாறும், அதே அளவு கறிவேப்பிலை சாறும் கலந்து பருகிவிட்டு ,காலில் அமைந்துள்ள விருத்திக்கால அடங்கல் வர்மத்தில் பெருவிரல் கொண்டு அழுத்திவிட ஒற்றைதலைவலி பூரணமாக குணமடையும

வர்மகலை


''வர்மக்கலை மருத்துவம்''
`பிடரிக்காலம்`

இந்த வர்மப்பகுதி அமைந்துள்ள இடம் உச்சியில் இருந்து கீழாக பன்னிரண்டு விரல் அளவில் அமைந்துள்ளது இந்த இடத்தில் கால் மாத்திரை அளவு அழுத்தம் கொடுத்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் ,பெண்களுக்கான உதிரப்போக்கு குறையும்,விந்து கட்டும், கண் சிவப்பு நீங்கும் ,நாக்கின் நரம்புகளை சீர் செய்யும்.

வர்மகலை




"வர்மக்கலை மருத்துவ ரகசியம் "

"ஆக்ரண குருத்து குத்தி வர்மம்"

இவ்வர்மமானது நுனிநாசியிலே அமைந்துள்ளது

நடுவிரல்நுனிகொண்டு மூன்றுமுறை லேசாக அழுத்திவிட்டால் நுரையீரலுக்கும் இருதயத்திற்கும் பித்தப்பைக்கும் ஆற்றல் கொடுக்கும்.கைகால், உடல் ,காது ,கண் ,மூக்கு இவைகளுக்கு சக்தி தரும்.

வர்மகலை

"வர்மக்கலை மருத்துவ முத்தோட நேர ரகசியம்"

காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை வாதத்தின் நேரம்.

காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை பித்தத்தின் நேரம்.

மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை சிலேத்துமத்தின் நேரம்.

மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை வாதத்தின் நேரம்.

இரவு 10 மணிமுதல் பின்னிரவு 2 மணிவரை பித்தத்தின் நேரம்.

பின்னிரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை சிலேத்துமத்தின் நேரம்.

இந்த நேரங்களை கருத்தில் கொண்டு வாத பித்த சிலேத்தும வர்மங்களை இயக்கி நோய்களை தீர்க்க முடியும். அவ்விடங்களில் அடித்து நோயை உண்டாக்கவும் முடியும்.
இந்நேரங்களில் அந்தந்த தோடங்களுக்குரிய மருந்துகளை உட்கொள்வதன் மூலமாக நோய்களை எளிதில் நீக்க முடியும்.

Wednesday, March 30, 2016

வர்மகலை வரலாறு


" வர்மக்கலை மருத்துவம்"

"வர்மக்லையின் வரலாறு":

தமிழக பாரம்பரிய மருத்துவ முறைகளுள் ஒன்றான வர்மக்கலை சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆதி முதல் சித்தனாம் சிவபெருமான் தன மனைவி பார்வதிக்கும் தன்னுடன் இருக்கும் நந்திக்கும் வர்மத்தைக் கற்றுக் கொடுத்தார். பார்வதி தன் மகன் முருகனுக்கும் முருகன் அகத்தியருக்கும், போகமுனிக்கும் கற்றுத்தந்தார். அகத்தியர் புலத்தியருக்கும் தேரையருக்கும் கற்றுதந்தார், போகமுனி புலிப்பணிக்கும் கொங்கனவருக்கும் கற்றுத்தந்து இவ்வர்மக்கலையை வளர்த்துள்ளனர். தமிழ்பெருமக்கள் இக்கலையை ஒரு தற்காப்புக்கலையாகவும் நோய் நீக்கும் மருத்துவ கலையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

"சக்திகூர் அடங்கல் வர்மம்'":

கால் பாதத்தின் நடுமையத்தை அளந்து இரண்டு விளிம்புகளிலும், ஒரு விரல் உட்புறமாக அமைந்து உள்ளது.

"இயக்கம் முறை":

நடு மூன்று விரல்களால் அழுத்தம் தர வேண்டும். அதிகமாக அழுத்தக்கூடாது. இரத்தப்போக்கு நிரந்தரமாக ஆகாமல் போய்விடும். உள்ளங்கை இரண்டும் படங்காலில் பதித்து வைத்து அழுத்தவும்.

"பயன்கள்:"

மயக்கத்தை ஒழுங்கு செய்யும், தலை ஆற்றலை சரி செய்யும். பெண்களின் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் தளர்ச்சியை நீக்கும்.



தூக்கதில் விந்து கலிவதற்கும்

"தூக்கத்தில் விந்து கலிவதற்கும் ,உடலுறவின்போது விந்து சீக்கிரமாக கலியாதிருக்கவும் வர்மக்கலை வைத்தியமுறை"

அதிகாலை நேரத்தில் பின் கண்ணாடிக்கால வர்மத்தில் கட்டைவிரல் மையப்பகுதியை வைத்து மூன்று முறை மிதமாக அழுத்தவும் ,அதன் பின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கருவேலம் பிசினை வாங்கி பொடித்து நெய் விட்டு வதக்கி சாப்பாட்டிற்கு முன் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரவும்,விந்துகலிதம் நின்று நெடுநேரம் புணர்ச்சி செய்யும் சக்தி கிடைக்கும் , தொடர்ந்து நாற்பதெட்டு நாட்கள் செய்யவும் ,

பின் கண்ணாடிகாலம் அமைந்துள்ள இடம்;- பிடரிக்குழிக்கு ஒரு விரல் மேலாக அமைந்துள்ளது .

வர்மகலை


"முடி உதிர்வதை தடுக்கும் வர்மக்கலை ரகசிய வைத்தியம்"

காதும் தலையும் இணையும் இடத்திலிருந்து ஒருவிரல் பின்புறமாக தலையின் இருபுறமும் அமைந்துள்ளது 'பொறிச்சான் காலம் '

இவ்வர்மத்தை இயக்க நடுவிரல் கொடுத்து லேசாக அழுத்தி அரைவட்டம் அடித்து காதின் பின்புறம் முடிக்கவும்,இதுபோல் மூன்று முறை செய்யவும். தொடர்ந்து இவ்வர்மத்தை இயக்கினால் முடி உதிர்தல் தீரும்.

Friday, March 18, 2016

வர்மம்

வர்மக்கலை பற்றிச் சில தகவல்கள்
******************************
உடலில் உள்ள தசைகள், எலும்புகள், மூட்டுகள், ரத்தக் குழாய்கள் இவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளும், அவற்றின் நரம்பு முடிச்சுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இடங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. அந்த இடங்களில் சிறு அடிப்பட்டாலும், அப்பகுதி மட்டுமோ அல்லது உடல் முழுவதுமோ இயக்கங்கள் பாதிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்துவதையே வர்மம் கொண்டுள்ளது என்கிறார்கள். அந்த இடங்களை வர்ம நிலைகள் என்றும் அழைக்கப்படுகிறது.வர்ம நிலைகளில் அடிபடும்போது, சிறு வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெறுகிறது.
வர்மம் என்பதற்கு ஜீவன்,காலம், காற்று, சுவாசம், ஆவி, கலை, உயிர், ஒளி, பிராணன், யோகம், வாயு எனப் பல பொருள்கள் உண்டு. மனித வாழ்வின் தொடக்கத்தில், காட்டு மிருகங்களிடம் இருந்தும்,பிற மனிதர்களிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள, போரிடும் பல முறைகளையும்,தற்காப்புக் கலைகளையும் பின்பற்ற நேரிட்டது. அந்த வகையில் தோன்றிய கலைகளில் ஒன்றுதான் வர்மக் கலை, மனித உடல் அமைப்பையும் உள்ளத்தையும் பற்றிய தங்களின் பேரறிவைக் கொண்டு போர்க் கலையையும் மருத்துவத்தையும் இணைத்து வர்மக் கலை எழுதியுள்ளனர் நமது சித்தர்கள்.
வர்மங்களை படு வர்மம்,தொடு வர்மம்,தட்டு வர்மம்,தடவு வர்மம்,நோக்கு வர்மம்,நக்கு வர்மம்,சர்வாங்க வர்மம்,உள் வர்மம் என பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எனினும், படு வர்மம் பன்னிரண்டும், தொடுவர்மம் தொண்ணூற்றாறும் பொதுவாக அறியப்படுபவை.
வர்மம் கொள்ளுதல் என்பது அதைத் தெரிந்தவர் பயன்படுத்தும் முறையில் மட்டுமின்றி அறியாமல் அடிபடுதல், கீழே விழுதல் போன்றவற்றாலும் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அடிபட்ட இடத்தில் வியர்வை,சில்லிட்டுப் போதல்(கரண்ட அடிப்பதுபோல்), மூச்சுவிட இயலாமை போன்றவை ஏற்படலாம். நாடித் துடிப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இவ்வாறு அடிப்பட்டவர்ளை அமர்த்தி, தட்டி, தடவி,தூக்கி அவர்களை குண்ப்படுத்தும் முறையை அடங்கல் என்று சொல்வார்கள். இவ்வாறு வர்மம் அடங்கல் செய்தபிறகு.சுக்கைத் தூளாக்கி காதிலும் மூக்கிலும் லேசாக ஊதுவார்கள். வர்ம அடங்கலுக்கு வேலிப்பருத்தி, வல்லாரை போன்ற மூலிகைகளும் பயன் படுத்துப்படுகின்றன.
பொதுவாக வர்ம முறைகள் மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் தீய விளைவுகளுக்கு அஞ்சி, பிறருக்குச் சொல்லித் தருவதில், அதை கற்றுத் தெரிந்தவர்கள் தயக்கம் காட்டியதால் படிப்படியாக மறைந்து இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் மட்டுமே இக்கலை பயன்பாட்டில் இருக்கிறது.
மனித உடல் அமைப்பும் அதில் உள்ள நாடிகள், நரம்புகள்,நரம்பு முடிச்சுகள், உடலின் ஒவ்வோர் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் பகுதிகள் இவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவுடைய சித்தர்கள் தாங்கள் அறிந்தவற்றை பாடல்களாக எழுதிவைத்தனர். வர்ம நூல்கள் வர்மத்தை விளக்கும்பொழுது உடலையும் உயிரையும் இருவகை அமைப்பாகக் கொள்கின்றன.
உடற்கலை- மெய், வாய், கண், மூக்கு, செவி, இடகலை, பிங்கலை, சுழுமுனை
உயிர்கலை - மலம்,சிறுநீர்,சுக்கிலம்,கருவிழி இவற்றை கட்டுப்படுத்தும் பிரதான நரம்புகள்.
உடற்கலையில் உள்ள எட்டு அமைப்புகளும், உயிர்கலையில் உள்ள நான்கு அமைப்புகளும் மொத்தும் பன்னிரெண்டும் சேர்ந்து படுவர்மம் என்றும், அவற்றின் வழித்தோன்றலாக ஒவ்வொரு படுவர்மமும் ஆறாகத் பகுத்து தொடுவர்மம் உண்டாகிறது என்று சொல்வார்கள்.
'படு' என்ற தமிழ்ச்சொல்லுக்கு 'அதி' அல்லது 'அதிக' என்று பொருள் 'படும்' என்றால் 'வேகம்' என்று பொருள் ஆக படுவர்மம் என்றால் அதிக வேகம் என்று பொருளாகும். அதிக ஆபத்துகளை உண்டாக்கும் உயிர்நிலைகளை படுவர்மம் எனப்பட்டன. இவற்றில் அடிப்பட்டால் உயிரிழப்போ, உணர்வு இழப்போ, கருவிழி மேல் நோக்குதலோ உண்டாகலாம்.மலம்,சிறுநீர் போகமால் அடைத்தல், விந்து வெளியேறுதல் போன்றவை அசாத்திய அறிகுறிகளாகும். ஒவ்வொரு வர்மத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இளக்கும் காலம் உண்டு அதற்குள் அடங்கல் என்னும் இளக்கும் முறையாகிய முதல் உதவியை செய்யவேண்டும் இல்லையென்றால் உயிருக்கே அபத்து ஏற்படலாம்.