"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label உணவே மருந்து. Show all posts
Showing posts with label உணவே மருந்து. Show all posts

Saturday, July 2, 2016

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறோம். சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.
எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்;தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.
இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவத.

இதனைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு பயன்படும் என்பதுதான். இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் இருப்பது தெரியாது.
மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.
உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா? இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.
நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.

உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

 

உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்


குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல் கிறோம்.
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.
பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப் படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.
மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.
பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்

Monday, May 16, 2016

உணவே மருந்து,

பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

சுக்கு




சுக்கு

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ''சுக்கு நீர்'' காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

Saturday, May 14, 2016

இயற்கை மருத்துவம் :


இயற்கை மருத்துவம் :
******************************

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் 🍈
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""

25) முகம் அழகுபெற
🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
🌱"கீழாநெல்லி"

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
"வாழைத்தண்டு".

கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..

கேழ்வரகு

கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு

கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும்.
இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.
கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும்.
மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம்.
பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.
ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும்.
பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்.
இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன.
இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ் வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும்.
அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.
இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
எடை இழக்க:-
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்.
அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது.
இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.
ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :-
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
நீரிழிவு நோயைக் குணப்படுத்த :-
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :-
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்த :
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
சோர்வைப் போக்க :-
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

Wednesday, May 11, 2016

தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா?
சிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.

உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.

இதன் மற்ற பலன்கள்,

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.
வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

தினமும் கீரை சாப்பிடுங்கள்

தினமும் கீரை சாப்பிடுங்கள்
அன்றாடம் ஏதேனும் ஒருவகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதனால், எந்தெந்த கீரையில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்துசாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்புஆகியவை குணமாகும்.

கீரைகளில்மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பைசேர்த்துச் செய்ய வேண்டும். இதுசுவையைக் கூட்டுவதோடு, உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில்அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்புசேர்த்து லேசாக வேக வைத்து,மிக்ஸியில் அரைத்து… கடுகு, காய்ந்த மிளகாய்தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாகவைக்கும்.

வயிற்றில்இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச்செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு.லேசாக வேக வைத்து பொரியல்செய்துகூட சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறிவெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
இரவுவேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு,தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிதுபருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம்,நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம்குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம்.கீரையை நிறம் மாறாமல் நன்றாகவதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டுபல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும்.

பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச்சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும்அப்படியே உடல் சேரும்.

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்!



சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்!

அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

குழந்தைகள் பீட்ரூட்டை சாப்பிட மறுத்தால், அதனை கொண்டு விதவிதமான ரெசிபிக்கள் செய்து கொடுங்கள்.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 சதவீதம், புரதம் 17, கொழுப்பு 0.1, தாதுக்கள் 0.8, நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் 0.8 சதவீதமும், கால்சியம் 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 5.5, இரும்புச்சத்து 10, விட்டமின் 'சி' 10 மில்லி கிராமும் உள்ளன.

மருத்துவ பயன்கள்

பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.

அதோடு, விட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பீட்ரூட் சாதம்

வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயைபொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகுபோட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்பு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டைநன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும்போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்துபிரட்டி அடுப்பை அணைக்கவும்.

பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதேஅதில் சிறிது சிறிதாக சாதத்தைசேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

நண்டு வறுவல் சாப்பிடுங்கள்:

நண்டு வறுவல் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமானது.

நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது.

எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நண்டில் உள்ள புரோட்டீன் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது.

எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது விட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்.

நண்டில் பல்வேறு வகையான ரெசிப்பிக்கல்செய்யலாம், இருப்பினும் இன்று நண்டு வறுவல் செய்து சாப்பிடுங்கள்.

நண்டை நன்றாக கழுவி சுத்தம்செய்த பிறகு நண்டுடன் மிளகாய்த்தூள், மிளகுத் தூள், மஞ்சள்தூள், பூண்டு விழுது, தேவையானஉப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறிஊற வைக்கவும்.

அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து ஒருமேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும்மசாலாவுடன் சேர்த்து பிரட்டி ஊற வைத்திருக்கும்நண்டை போட்டு முன்னும் பின்னுமாகபிரட்டு, மூடி போட்டு இரண்டுபக்கமும் நன்றாக வேகும் வரைவதக்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

பாசிப்பயறு

பாசிப்பயறு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைட்ரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். காய்ச்சல் குணமாகும்.

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம்.

அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

Saturday, May 7, 2016

கொத்தமல்லி


கொத்தமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா, இலங்கை முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்களை குணமாக்குகிறது

மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

Tuesday, April 12, 2016

இரத்த சோகை பீர்க்கங்காய்

இரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்!

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன.

இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்­ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும்.

பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

Monday, March 28, 2016

வெங்காயம், பூண்டு, தேன்

வெங்காயம், பூண்டு, தேன் !!!

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம்
நம்முடைய இயற்கை விதி மீறல் செயல்களால்
, நம் செல்களுக்கு உள்ளும் , வெளியேயும் தேங்கும் கழிவுகளே நோய்களுக்கு மூல காரணம்

  • 🌀 இந்த கழிவுகளை வெளியேற்ற

சின்ன வெங்காயம் 1
பூண்டு 1 பல் சாறு எடுத்து
1 டம்ளர் சுடு நீரில் கலந்து
1 ஸ்பூன் தேன் சேர்த்து
காலை மாலை அருந்தினால் செல்களுக்கு உள்ளே உள்ள கழிவுகளும் வெளியேறும்.

🌀 நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிக எளிய குறிப்பு
இரவு ஒரு மண் பாணையில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அடுப்பை அனைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி சீரகம் போட்டு மூடி விட வேண்டும்.
காலையில் அந்த தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.

உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் படிப் படியாக வெளியேறி விடும்.

செல்களில் இருந்து கழிவு வெளியேறினால்
அந்த செல் தன் வேலையை சரியாக செய்யும்
செல் சரியாக உள்ள போது, அதனால் உருவாக்கப்பட்ட திசு சரியாக இயங்கும்

திசு சரியாக இயங்கினால், அதனால் உருவாக்கப்பட்ட உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும்.

உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும் போது மனித உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது.

தகவல் நன்றி :-நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்

Wednesday, March 23, 2016

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

உடலுக்கு உகந்த பாகற்காய்!



பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.

அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை!




உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.

வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன. இதனால் தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.

எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.
எந்த வயதுக்காரரும் தினமும் அதிகபட்சம் 50 கிராம் வரை சாப்பிட்டால், செயலாற்றல் மிக்க மருந்தாக வேர்க்கடலை செயல்படும்.

Tuesday, March 22, 2016

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி.

காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.

வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.

குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

கருப்பட்டி



கருப்பட்டி..

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

• கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

• கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.

• கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

• குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

• சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.

அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

எள்ளு

  • எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்
100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ், தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.
முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது. அதனைச் சமைக்கும் முறையும் மறந்துபோய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
எள்ளிலிருந்து தய¡ரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.