"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label குறட்டை. Show all posts
Showing posts with label குறட்டை. Show all posts

Tuesday, July 12, 2016

குறட்டை


 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 
எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு குறட்டையை தடுப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.கற்பூர துளசி இலைகளை பயன்படுத்தி குறட்டையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூர துளசி, தேன். கற்பூர துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர குறட்டை குறையும். இந்த தேனீர் நுண்கிருமிகளை அழிக்கும். நோய்களை போக்கும் தன்மை உடையது. வீக்கத்தை வற்ற செய்யும். கற்பூர துளசி வயிற்று கோளாறுகளை போக்குவதுடன், இருமல் சளிக்கு மருந்தாகிறது. கற்பூர துளசிக்கு பதிலாக புதினா அல்லது துளசியை பயன்படுத்தலாம்.

குறட்டை மன உளைச்சலை தரக்கூடியது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது. ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது.மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன்.
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும். இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சக சளியை கரைக்கும்.
திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுக்கவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.
பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்னை தீரும்.அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம்

Tuesday, June 21, 2016

குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்


குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்


ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

    :)