"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts

Tuesday, November 8, 2016

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!


கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்

Tuesday, August 2, 2016

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய சில இயற்கைவழிகள் :-

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய சில இயற்கைவழிகள் :-
உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும். ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். இதோ அதனை சரிசெய்வதற்கான டிப்ஸ்குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம். அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம். அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம். ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம். ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும். சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும். தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.






Monday, July 18, 2016

மலச்சிக்கல்

மலச்சிக்கல் | Home Remedies For Constipation


  • அகத்தி கீரை வாரம் ஒரு நாள் சாப்பிட தீரும்.
  • முளைக் கீரை அடிக்கடி சாப்பிட மலச்சிக்கல் வராது.
  • பப்பாளிப் பழம் ஒரு 100 கிராம் அளவு தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட தீரும்.
  • ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணம், வைச்னாவர சூரணம்,அவிபத்தி சூரணம் போன்றவை மருத்துவரின் அறிவுரைப்படி தினமும் எடுத்து கொண்டால் நல்லது.

பித்தம் குறைய

பித்தம் குறைய | Home Remedies For Pitta

  • இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து   41  நாட்கள் சாப்பிட பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
  • இஞ்சி சாறு, வெங்காய சாறு தென் கலந்து குடிக்க பித்த மயக்கம் தீரும்.
  • ரோஜா பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தம் தணியும்.
  • விளாம் பழம் கிடைக்கும் காலத்தில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
  • பனங்கிழங்கு சாப்பிட பித்தம் நீங்கி உடல் பலம் பெருகும்.
  • எலுமிச்சம் இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்த பித்த சூடு தணியும்.
 

Sunday, July 17, 2016

- மருத்துவ பயன்கள்!


[17/07 11:55 PM] DR.A.ANANTH:
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!
நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.
...
வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் �
[18/07 12:03 AM] DR.A.ANANTH: இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:
துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
...
அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

Tuesday, July 12, 2016

வீட்டு மருத்துவக் குறிப்புகள்

வீட்டு மருத்துவக் குறிப்புகள் - II- Home Medicine - II

வீட்டு மருத்துவக் குறிப்புகள் - II
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரித்தல், பாகம் - II.
கீழே உள்ள பெயர்களை 'க்ளிக்' செய்வதன் மூலம் அவற்றை குணமாக்குவதற்கான விபரத்தைக் காணலாம்.

ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளிமூலிகை ஷாம்புமரு, காலாணி
மூலிகைக் கண்மை
வெள்ளைப்படுதல் உடல் பருமனைக் குறைக்க
இளைத்த உடல் பருமனாக பேதி நிற்க தேமல் மறைய
மலச்சிக்கல் மூலிகை காஸ் முகப்பரு
வீட்டு மருத்துவக் குறிப்புகள்:
01: ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர

1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

02:மூலிகை ஷாம்பு

செம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு கினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.

03:மரு, காலாணி குணமாக

கற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்.

04:கண் பார்வையை மேம்படுத்தி கண்நோய் வராது காக்கும் 'மூலிகைக் கண்மை'

வயல் ஓரங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசாலைச் சாற்றில் சுத்தமான சிறிய வெள்ளைத் துணியை நன்கு மூழ்கி காயவைக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த துணியை திரும்ப திரும்ப மூழ்கி குறைந்தது 8 அல்லது 10 முறை செய்ய வேண்டும். ஒரு சிறு நெய் விளக்கில் இத் துணியை எரித்து சாம்பலாக்க வேண்டும். இச்சாம்பலை எடுத்து போதிய அளவு சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்கு அரைத்து பசையாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும் தேவைக்கேற்ப, தேவையான அளவு எடுத்து முறைப்படி கண்களுக்கு மைதீட்ட கண் எரிச்சல், இமை வீக்கம், இமை முடி உதிரல் உள்ளிட்ட நோய்கள் தீருவதுடன் கண் பார்வை கூர்மைப்படும். இதை ஆண், பெண் இரு பாலாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

05:வெள்ளைபடுதல் நிற்க

1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.



 

06: உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள்

1. காலை மாலை நடைப் பயிற்சி
2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்
3. பகல் தூங்காதிருத்தல்
4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்
6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்
7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்
8. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்
9. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல்
10.பசி அதிகம் இருந்தால் அதைக் குறைக்கும் வகையில் திரிபலாச்சூரணம், மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதி சூரணம் போன்றவற்றை முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உண் ணல்.

07:இளைத்த உடல் பருமனாக

1. நேரம் தவறாமல் உணவு உண்ணல்
2. மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம்
3. இரவில் நீர்ச்சத்துள்ள உணவு உண்ணல்
4. உணவில் பூசணிக்காய், தடியங்காய் (வெண்பூசணி), வெண்ணெய் சேர்த்துக் கொள்ளல் 5. உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல். காய்கறி சூப், கஞ்சி வகைகளை உண்ணல், மலச்சிக்கல் இல்லாதிருத்தல், கடும் வெயிலில் அலையாதிருத்தல், இரவில் வெகு நேரம் விழிக்காதிருத்தல்.

08:பேதி நிற்க

1. வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்த பொடி 50 கிராம், ஓமம் பொடி 10 கிராம் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு தேக்கரண்டி மோரில் உட்கொள்ள உடன் தீரும்.
2. மாசிக்காய் பொடி (100 கிராம்), காய்ச்சுக் கட்டி (100 கிராம்), இலவங்கப்பட்டை (25 கிராம்) மூன்றையும் பொடித்து ஒன்றாகக் கலந்து மேற்கூறியபடி உண்ணவும்.

09:தேமல் மறைய

தேங்காய் எண்ணெய் (200 மிலி), தேன் மெழுகு (15 கிராம்), தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.



 

10:மலச்சிக்கல் தீர

1. கடுக்காயத் தோல் பொடி(100 கிராம்), ஓமம் பொடி (20 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் 1 1/2 - 2 தேக்கரண்டி (5-10 கிராம்) இள வெந்நீரால் பருக மலச்சிக்கல் தீரும். சிறியவர்களுக்கு அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
2. குப்பைமேனிச் சாறு (100 மிலி), விளக்கெண்ணெய் (500 மிலி) - இரண் டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சிச் சாறு வற்றியவுடன் இறக்கி வடிகட்டி 1 1/2 - 2 கரண்டி (5-10 மிலி) வீதம் உட்கொள்ள நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
3. அகத்திக்கீரைச் சாற்றை இரவு படுக்கும் முன் சர்க்கரை கலந்து 50-60 மிலி வரை பருக வயிற்றுப்புழுவுடன் மலச்சிக்கல் தீரும்.

11:மூலிகை காஸ்
gauze
நாட்பட்டப் புண்களின் மீது துணியினால் ஆன காஸ் வைப்பதற்கு பதிலாக எருக்கிலை, ஊமத்தை இலை, வெற்றிலை, வேலிப்பருத்தியிலை போன்ற மூலிகைகளின் ஏதாவது ஒன்றின் இலையை புண்களின் மீது வைத்து அதன் மேல் துணி கொண்டு கட்டிவர புண்கள் விரைவில் ஆறி வரும். புண்களை முறைப்படி சுத்தம் செய்து மருந்து வைத்து அதன்மேல் இலையை ‍வைக்க வேண்டும்.

12:முகப்பரு

1. கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு தீரும்.
2. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் முல்தாணி முட்டி என்னும் சரக்கை பொடித்து அதை பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகப்பரு குணமடையும்.

3. நல்லெண்ணெய் 100 மி.லி., மிளகு 10 எண்ணம் நன்கு ‍சூடு செய்து மிளகு கருகியவுடன் வடிகட்டி, சூடு ஆறியவுடன் முகத்தில் தேவையான அளவு எடுத்து குளிக்கும் முன் தடவி வர குணமாகும்.








 

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்


எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்
ஆரோக்கியமாக வாழ்வோம்

Saturday, July 2, 2016

ஒரு வரி மருத்துவம்

ஒரு வரி மருத்துவம்....!
ஒரு வரி மருத்துவம்
ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.
பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்
கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்
ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்
எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்
பால் + கசகசா : துõக்கம் வரும்
கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்
கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்
ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்
வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்
வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்
மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்
ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்
புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்
சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்
குப்பை மேனி : மலேரியா தீரும்.
பேரிச்சை : கொழுப்பை நீக்கும்
டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்
கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்
செம்பருத்தி : உடல் சூடு தணியும்
காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.
முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்
மருதாணிப்பூ : சுகமான துõக்கம் தரும்
நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்

எளிய மருத்துவக் குறிப்புகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

இளநீர் மருத்துவகுணம்...!

இளநீர் மருத்துவகுணம்...! 
இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.


மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..

பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.

கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

Friday, June 24, 2016

எளிய வீட்டு வைத்தியம்

எளிய வீட்டு வைத்தியம்
கீழாநெல்லி இலையுடன் கரிசாலை இலையை சேர்த்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே காமாலை நோய் நீங்கும்.

கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

ஆடாதோடா இலைக்கஷாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.

உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து விடுவது உண்டு. இதை குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டுவந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.

வெள்ளைப் பூண்டை நைத்து அதன் சாறு உடலில் ஊறும்வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலை படை உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவிய பின் இந்த விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும்.

அசோக மரத்தின் உட்பட்டையையும், அத்தி மரத்தின் உட்பட்டையையும் கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி அரை குவளை வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும்.

சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி வெல்லம், தேன் கலந்து அம்மியில் அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்கு நீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர்க்காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றுக்கு ஓமம் அருமருந்தாகும்.

திடீரென காயம் ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சர்க்கரையில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவ ரத்தப் போக்கு நிற்கும். காயமும் சீக்கிரம் ஆறும்.

வாய்வுக் கோளாறு காரணமாக இடுப்பு வலி இருந்தால், சுடுசோறு ஒரு கை அளவு எடுத்து மெல்லிய வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும்.

மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.

வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.

பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.

கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.

தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.

பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.

பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்.

Monday, June 20, 2016

கிராம்பு மருத்துவ குணங்கள்

#கிராம்பு மருத்துவ குணங்கள்
கிராம்பில் #கார்போ #ஹைட்ரேட், ஈரப்பதம், #புரதம், வாலடைல் எண்ணெய்,: கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், #தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், #வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் #காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி #தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட #ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, #வாய் #நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட #ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* #கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

Thursday, June 16, 2016

உங்களுக்கு பல் சொத்தைப் இருக்கா?

உங்களுக்கு பல் சொத்தைப் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

மின்சாரத் தைலம்

அனைவரின் வீட்டிலும்
அவசியம் இருக்க வேண்டிய
மின்சாரத் தைலம்

தைமால்' மெந்தால் பச்சக்
கற்பூரம் சம அளவு.

ஒவ்வொன்றிலும் பத்து
கிராம் ஒவ்வொரு வீட்டிற்கும்
போதுமானது.

இது எல்லா நாட்டு மருந்துக்
கடைகளில் கிடைக்கும்.

ஒவ்வொன்றையும் தனித்
தனியாக நுணுக்கி ஒரு
கண்ணாடி சீசாவில் போட்டு
ஒரு குலுக்கு குலுக்கி வைத்து
விட வேண்டும். சுமார் நான்கு
மணி நேரத்திற்குள் தைலமாக
மாறிவிடும்.

பல்வலிக்கு:- ஒரு சொட்டு
தைலத்தைப் பல்வலி உள்ள
இடத்தில் பஞ்சில் தொட்டு
வைத்து ஐந்து நிமிடம் கழித்து
சோற்றுப்பில் சுடு தண்ணீர்
கலந்து வாய் கொப்பளிக்க
ஐந்து நிமிடத்தில் பல்வலி
குணமாகும்.

எங்சள் வைத்திய சாலையில்
பல்வலிக்கு இலவசமாக மருந்து கொடுத்து வருகிறோம்.

மூச்சுத் திணறலுக்கு
அதிகமாக மூச்சுத் திணறல்
உள்ளவர்களும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கும் மூன்று
சொட்டு தைலத்தை ஐம்பது
மில்லி லேசான சுடு தண்ணீரில்
குடிக்க இரண்டு நிமிடத்தில்
நோயின் தன்மை குறைந்து
விடும். மேலும் அவர்களுக்கு
இளைப்பு வராமல் இருக்க
தினம் காலையும் இரவும்
உணவு உண்ட அரைமணி
நேரம் கழித்து மூன்று சொட்டு
தைலத்தை ஐம்பது மில்லி
லேசான சுடு தண்ணீரில் குடித்து வர நோயின் பாதிப்பு
குறையும்.

தலைவலிக்கு
ஒரு சொட்டு தைலத்தை..பெரு
விரலிலும் ஆள்காட்டி விரலி
லும் படும்படி தொட்டு மூக்கில்
நன்றாக உறிஞ்சி பின் நெற்றி
யிலும் புருவத்திலும் தடவ
உடனே தலைவலி குறையும்.

உடம்பு குளிர்ச்சி ஏற்பட்டால்

அதிகமான நோய் பாதிக்கப்
பட்டவர்களுக்கு திடீரென்று
கால் கே குளிர்ச்சி ஏற்படும்.
உடனே அவர்களின் உள்ளங்
காலிலும் உள்ளங்கையிலும்
அழுத்தி தேய்த்து விட உடல்
முழுவதும் உடனே சூடறும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு நெஞ்சில்
சளி இருந்தால் ஐந்து சொட்டடு
தைலமும் பத்து சொட்டுத்
தேங்காய் எண்ணையும் கலந்து முதுகிலும் மார்பிலும்
லேசாக தேய்த்து விடவும்.

முழங்கால் வலிக்கு

முழங்கால் மற்றும் உடம்பில்
எங்கு வலி இருந்தாலும் ஒரு
பங்கு தைலத்திற்கு இரண்டு
பங்கு தேங்காய் எண்ணை
கலந்து இரவில் தேய்த்து
காலையில் சுடுதண்ணீரில்
ஒத்தடம் கொடுக்க வலி
குறையும்.

கொசு தொல்லை மாற

கொசுவின் தொல்லையில்
இருந்து மீள நாம் மின்சாரத்
தில் பயன் படுத்தும் காலியான
ஆல் அவுட்டிற்குள் இந்தத்
தைலத்தை செலுத்தி கதவு
ஜன்னலை பூட்டி விட்டு ஒரு
மணி நேரம் போட்டு பின்
நிறுத்தி விட்டால் கொசு வராது
முழு நேரம் பயன் படுத்த
வேண்டாம்.

மின்சாரம் இல்லை என்றால்
ஒரு பங்கு தைலத்திற்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணை
கலந்து உடம்பில் லேசாகத்
தேய்த்து விட அன்று முழுவ
தும் கொசுக் கடியாது. இதனால்
உடலிற்கு நன்மையே தவிர
  • தீமை இல்லை.

Wednesday, June 15, 2016

காய்ச்சல்

காய்ச்சல்
காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம்
இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.

Sunday, May 22, 2016

ஜாதிக்காயின்

உடல் நலத்தை பாத்துகாக்கும் ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்
ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது.
* ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. மேலும் வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* ஜாதிக்காயில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளது. இது நம்முடைய உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
* ஜாதிக்காயை தூளாக்கி அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இந்த பேஸ்டை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உங்கள் சருமம் தூய்மையாகவும், பருக்கள் மறைந்தும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.
* பற்களை பாதுகாக்க இது மிகவும் உதவுகிறது. இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி உள்ளது. அதனால் இது பற்பசைகளில் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
* ஜாதிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

Saturday, May 14, 2016

வெள்ளை முடியை

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும்.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய்

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.

மிளகு

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்!

உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்!

பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது. தற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அளவுக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய வெப்பம் உடலில் வெப்பத்தை மட்டும்
அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே இத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு உடலில் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதிகமான
தண்ணீர் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பானங்கள் குடிப்பது என்பனவற்றை பின்பற்ற வேண்டும்.

தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால்,உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.

முலாம் பழம்

உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல்,
இருமல் போன்றவை ஏற்படும்.

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியை குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.

புதினா

இயற்கை வைத்தியத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள், புதினா ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.

முள்ளங்கி

முள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

எள்

தினமும் எள் சாப்பிட்டாலும், உடல் வெப்பமானது எளிதில் தணியும். மேலும் உடலில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கும்.

சீரகம்

சீரகத்தை இரவில் படுக்கும் போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரை காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.

இளநீர்

உடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன்
ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளை

மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தாலும், உடல் கூலாக இருக்கும்.

கசகசா

நாள்தோறும் இரவில் தூங்கும் முன், ஒரு கை கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், நல்ல நிம்மதியான தூக்கம் கிடைப்பதோ
 

 
டு, உடல் வெப்பமும்
கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

வெந்தயம்

மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியம் என்றால், அது தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது தான். இதனால் உடல் வெப்பமானது எளிதில் தணியும்.

குளிச்சியான பால்

குளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதனை ஃபெங் ஃபூ என்று அழைப்பர். சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் உள்ள ஒருசில பிரச்சனைகள் நீங்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நன்மை 1
உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியெனில் ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை தினமும் 20 நிமிடங்கள் வைப்பதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

நன்மை 2
செரிமான பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? இந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை வைத்தால், உங்களது செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராகும்.

நன்மை 3
அடிக்கடி உங்களுக்கு சளி பிடிக்கிறதா? கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து வாருங்கள். இதன் மூலம் சளித் தொல்லையில் இருந்து நிச்சயம் விடுபடுவீர்கள்.

நன்மை 4
கழுத்திற்கு பின் தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதன் மூலம், மூச்சு கோளாறு நீங்கும் மற்றும் இதய செயல்பாடு மேம்படும்.

மெலிந்த உடல் பருக்க

மெலிந்த உடல் பருக்க

1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.