"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, July 18, 2016

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல் |Home Remedies For WhiteDischarge


இந்த நோய் பொதுவாக பெண்களுக்கே ஏற்ப்படும். ஆனால் ஆண்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. கீழ்காணும் முறைகள் இரண்டு பேர்க்கும் பொருந்தும்.
  • புளியிளைச்சாறும், நல்லெண்ணையும் சமன் கூட்டிக்காய்ச்சி வடித்து, காலை மாலை அருந்த நாளான வெள்ளை,நீர்சுருக்கு தீரும்.
  • நல்ல நயம் சந்தன பொடியும் , கசகசாவும் சமமாக சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவாக, பாலுடன் குடிக்க வெள்ளை, வயிற்றுகடுப்பு, சிறுநீர் துர்நாற்றம் இவை நீங்கும்.
  • பொரித்த படிகாரவும், வால்மிளகும் சமன் கூட்டிய சூரணம் 5-கி வீதம் தேனுடன் தர வெள்ளை தீரும்.
  • அருகம்புல்லை வேருடன் அரைத்து சரியிடை வெண்ணையில் சேர்த்து, 10-கி அளவில் உட்கொண்டு வர உட்சூடு. தளர்ச்சி, வெள்ளை நீங்கும்.
  • நன்றாக கழுவிய சோற்றுக்கற்றாழை சதை-50-கி,வெந்தயம்-10-கி, சீரகம்-10-கி கலந்து ஊறியபின் எடுத்து 2 வேளை சாப்பிடவும். தொடர்ந்து உண்ண வெள்ளை

Tuesday, July 12, 2016

வெள்ளைபடுதல்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 
பெண்கள் பருவம் அடைந்தது முதல் அனுபவிக்கும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் அவர்கள் இதை பெரிதாக கருதுவதில்லை. அதனால் ஏற்படும் சிரமங்களையும் சாதாரணமாக விட்டு விடுகின்றனர். வெள்ளைப்படுதல், கேன்சர் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிகுமார். பருவம் அடையும் வயதில், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னர், கருவுற்றிருக்கும் போதும் வெள்ளை படுவது சாதாரண விஷயம். முட்டை உருவாகும் நேரத்திலும் 5 நாட்களுக்கு வெள்ளைப்படுதல் இருக்கலாம். இது தானாக சரியாகி விடும். பொதுவாக வெள்ளைப்படுதல் என்பது கிருமி தொற்றினால் ஏற்படுவது. கொனோரியா, டிரைகோமோனஸ், மொனிலியாசிஸ் ஆகிய பாக்டீரியாக்களின் தாக்குதலால் வெள்ளை படுதல் உருவாகிறது.

வெள்ளைபடுதல் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் அலர்ஜியின் காரணமாகவும் வெள்ளை படுதல் ஏற்படலாம். மேலும் கருப்பை பகுதியில் உள்ள கோழைப்படலம் அரிக்கப்படுவதாலும் அங்கிருந்து திரவம் வெளிப்படுகிறது.  உள் பகுதியில் சின்னச் சின்ன சீழ் கட்டிகள் உருவாகலாம். அரிப்பு ஏற்படலாம். வெள்ளைப்படுதலின் போது எரிச்சலான உணர்வு ஏற்படும். இத்துடன் கர்ப்பப்பை உள்ளே புண் இருந்தாலும் வெள்ளைப் படுதல் ஏற்படலாம். இந்த நேரத்தில் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மேலும் உடலுறவு கொண்ட 4 முதல் 48 மணி நேரத்துக்குள் வலி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொண்டால் ஆணுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது.

இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடலாம் அல்லது இளைக்கலாம். அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். இந்த பிரச்னை உள்ள பெண்கள் எப்போதும் எரிச்சலுடன் இருப்பார்கள். நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் திறனை இழந்து காணப்படுவர். கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த கிருமித் தொற்று சிறுநீர்ப்பாதையை பாதித்து கிட்னி வரை செல்ல வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பப்பையில் உள்ள நாள்பட்ட புண்களால் வெள்ளை படுதல் இருப்பின் அது பின்னாளில் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் வெள்ளைப்படுதலை உடனடியாக சிகிச்சை மூலம் குணமாக்க வேண்டியது அவசியம் என்கிறார் சசிகுமார்.

பாதுகாப்பு முறைகள்

வெள்ளைப் படுதல் பிரச்னை உள்ள பெண்கள் அதன் தன்மையை அறிய வேண்டும். பெண்கள் மாதவிலக்கு காலத்தில் சுகாதாரமான முறையை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் நாப்கினை மாற்ற வேண்டியது அவசியம். துணி நாப்கினை தவிர்க்கலாம். ஒரு சில நேரங்களில் வெள்ளைப் படுதல் பால்வினை நோயின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கவனிக்காமல் விட்டால், கணவன் & மனைவி இருவரையும் பாதிக்கும். பெண்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும். கழிவறையில் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. வெள்ளைப்படுதல் இருக்கும் போது  தொற்று உள்ளதா அல்லது கர்ப்பப்பை பகுதியில் புண் உள்ளதா என்பதையும் பரிசோதனையில் அறியலாம். பிரச்னையை ஆரம்பத்தில் கண்டறிந்து சரி செய்வதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கவும் வாய்ப்புள்ளது. பெண்கள் சுகாதாரமாக இருப்பதும் பிரச்னை ஏற்பட்டால் உடனடி சிகிச்சையும் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.

ரெசிபி

சுண்டைக்காய், மணத்தக்காளிக் குழம்பு:

நல்லெண்ணெயில் சுண்டைக்காயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். புளி எலுமிச்சை அளவு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக்கி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள் கலந்து எண்ணெயில் வதங்கிய பின்னர் புளியைக் கரைத்து ஊற்றவும். கொதித்த பின்னர் உப்பு மற்றும் வறுத்த சுண்டைக்காய் அல்லது மணதக்காளி போட்டு ஒரு கொதி வந்த பின் இறக்கலாம். சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளியில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து உள்ளது.

வெஜ் வீட் ரொட்டி:

கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொள்ள வும். பச்சைப் பட் டாணியை தனி யாக வேக வைத்து மசிக்கவும். கோதுமை மாவை ரொட்டி பதத்துக்கு பிசைந்து அதில் காய் துருவல், பட்டாணி, கரம் மசாலா, உப்பு மற்றும் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம். சாப்பிட சுவையாக இருப்பதுடன் முழுமையான சத்தான உணவாக இருக்கும்.

அரைக்கீரை துவையல்:

அரைக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. அரைக்கீரையை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள் ளவும். சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். சீரகம், வெந்தயம், மிளகு 2 ஆகியவற்றை தனியாக வதக்கி பொடித்துக் கொள்ளவும். அரைக்கீரை, வதக்கிய வெங்காயம், தக்காளி, பொடிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம்.

பாட்டி வைத்தியம்

¥ அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

¥ அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியவற்றில் தலா 20 கிராம் எடுத்து தட்டிச் சாறு பிழிந்து அதில் படிகார பஸ்பம் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.

¥ சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.

¥ உளுந்து, பார்லி இரண்டிலும் தலா 100  கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்.

¥ எலிக்காதிலையுடன் கடுக்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.

¥கீழா நெல்லி இலை, கோவை இலை, அசோகமரப்பட்டை, நாவல்பட்டை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மோரில் கலந்து குடிக்கலாம்.

¥சாணாக்கி கீரையுடன், சீரகம் சிறிதளவு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.

¥சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும்.

¥சிவப்பு நிற தண்டுக் கீரைத் தண்டுடன் துத்தி இலையை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.

¥துத்திக் கீரையில் ஒரு கடுக்காயை தட்டிப் போட்டு கஷாயம் வைத்து குடிக்கலாம்.

டயட்

வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ரத்த சோகை இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் கால்சியம் சத்தும் உடலில் குறைவாக இருக்க வாய்ப்புண்டு. நாம் உட்கொள்ளும் உணவில் இரும்புச் சத்தை உடல் உட்கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி உள்ள பழச்சாறுகள் எடுக்க வேண்டும். பீசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் இரும்புச் சத்தை உடல் எடுத்துக் கொள்வதைத் குறைக்கும்.

சத்தான உணவுகள் சாப்பிட்டாலும் மாலை சிற்றுண்டியாக இது போன்ற பாஸ்ட் புட் சாப்பிடுவதால் உணவில் இருந்து உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துகள் தடுக்கப்படுகிறது. கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கலாம். முருங்கைக் கீரை, பருப்பு வகைகள், சுண்டல், அவல், முட்டை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும். மாதுளை மற்றும் கருப்பு திராட்சை நிறைய சாப்பிடலாம். சுண்டக் காய்ச்சிய பால் இரண்டு வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கும்.

மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...

மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...


             பெண்கள் இந் நாட்டின் கண்கள் என்றார் பாரதி.  ஒரு பெண்ணின் நலமே குடும்பத்தின் நலம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

பொதுவாக பெண்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுப்பது மாதவிலக்கும் வெள்ளைப்படுதலும் தான். அதில் வெள்ளைபடுதலைப் பற்றியும் அதன்பாதிப்புகளைப் பற்றியும் விரிவாக அறிவோம்.

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்று. ஆனால் இந்த இயற்கையான சுரப்பிலிருந்து வெள்ளை படுதலுக்கு உள்ள வித்தியாசங்களை உணர்வது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகிறது. சாதாரணமாக இந்த சுரப்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படும். எப்படி வியர்வை சுரப்பு வித்தியாசப்படுகிறதோ அதுபோல. மாதவிலக்கு வந்து 10 லிருந்து 15 நாட்களுக்கு இந்த சுரப்பு அதிகமாகும். பின் திரும்ப மாதவிலக்கு வரும் 5 நாட்களுக்கு முன் சிறிது அதிகப்படும். இது இயற்கையானது. இது தவிர வெள்ளைப்படுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிப்பது. வெள்ளைப்படுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகுவலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும்.இவை அனைத்தும் இருந்தால் வெள்ளைபடுதல் நோய் என்று உணரலாம்.

வெள்ளைப்படுதல் இருப்பது உணரப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

காரணம்:

வெள்ளை படுதலுக்கு  நிறைய காரணங்கள் உள்ளன.  சித்த மருத்துவத்தில் கூறப்படும் காரணம்,வெள்ளைப்படுதல் நோய் ஒருவருக்கு திடீரென்று ஒரு நாளில் வருவது இல்லை.  பித்தம் மிகுந்து முன்னத்தண்டு கோர்வையை பற்றி குய்யம், மூலாதாரம் இவைகளில் கனல் மிகுந்து, நாடி, நரம்பு, ரத்தக்குழாய்கள் மூலமாக எலும்பைப் பற்றியும், சுரோணிதத்தில் கலந்தும், நீர்ப்பை, நீர்துவாரம் இவற்றில் ரணத்தையும் சூட்டையும் உண்டாக்கி சீழ் பிடித்து வலியுண்டாக்கி ஒழுக்கு ஏற்படும். 

அல்லது, சாதாரண நிலையில் உடல் இருக்கும்போது பிறப்பு உறுப்பை ஒட்டிக் காணப்படும் தசைப்பகுதிகளில் உட்புறச்சுவர்கள் வழுவழுப்பாக வைத்துக் கொள்வதற்காக உடல் கூற்றின் இயல்பான பல நிலைகளுக் காகவும் ஒரு திரவம் சுரக்கிறது. இத்திரவம் பட்டினி கிடத்தல், காரம், புளிப்பு, உப்பு நிறைந்த பொருட்களை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதாலும், மூலாதாரத்தில் வெப்பம் மிகுந்து தாது கேடு அடைவதாலும் அத்திரவம் அதிகளவில் சுரந்து வெள்ளை போக்காக மாறுகிறது.

தவறான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் அதிக நச்சுத்தன்மை உடலில் ஏற்படுகிறது. அவை தோல் மற்றும் வயிறு, நுரையீரல், சிறுநீரகங்கள் இவற்றின் மூலமாக வெளியேற்றப்படாமல் பெண்களின் கர்ப்பப்பை மூலமாக சளி சவ்வின் வழியாக வெளியேற்றப் படுகிறது.

இளம் வயது பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிவதால் அதிகம் ஏற்படுகிறது. மேலும் காம உணர்வு சுய இன்பம் காணுதல் இவைகளாலும் வெள்ளைப்படுதல் உண்டாகலாம். முறையாக மாதவிடாய் ஏற்படாத சில பெண்கள் மாதவிடாயை தூண்டும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் ஏற்படுகின்றது. சில பெண்கள் செயற்கையான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படும். கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களுக்கும், பால்வினை நோய்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவைகளின் அறிகுறியாகவும் இந்த நோய் ஏற்படலாம். அதிகமாக உடலுறுவில் ஈடுபடும் பெண்களுக்கும், கோபம், வருத்தம், வெறுப்பு மன உளைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும்.

திருமணமான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அடிக்கடி கருக்கலைப்பு  செய்வது, கிருமி தொற்று ஏற்படுவது. குழந்தை பேற்றின் போது கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், கருப்பையில் புண், கட்டி முதலியன உண்டாகி வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

நோயின் அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும் ஏற்படுவதுண்டு.

ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும் இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்த சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.

நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.

பாக்டீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைப்படுதல் என்றால் அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவத்தில் மூலிகைகளை கொண்டு குணப்படுத்த இயலும்.

மணத்தக்காளி சூப்

சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறை

·    அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
·    உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
·    தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
·    உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

வெள்ளைபடுதல்

பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்கள் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வெள்ளைப்படுதலும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயும் அவர்களுக்கு
உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றுதான். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்கள் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வெள்ளைப்படுதலும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயும் அவர்களுக்கு
உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றுதான். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பெண் உறுப்பில் பூஞ்சை வளர்ந்து தொற்றினை உண்டாக்கும். நீரிழிவு வியாதி, உடல் பருமன் காரணமாகவும், கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது. இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது. வெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளைப்படுதல் நிற்க காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும். மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும். சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும். வால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம். யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம். அதேபோல் மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும். வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.



 என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பெண் உறுப்பில் பூஞ்சை வளர்ந்து தொற்றினை உண்டாக்கும். நீரிழிவு வியாதி, உடல் பருமன் காரணமாகவும், கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது. இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது. வெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளைப்படுதல் நிற்க காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும். மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும். சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும். வால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம். யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம். அதேபோல் மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும். வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.











வெள்ளைபடுதல் - வீட்டு மருத்துவம்


வெள்ளைபடுதல் - வீட்டு மருத்துவம்.......

 பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் 'கான்டிடா அல்பிகான்ஸ்'  எனும் காளானின் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.

இது எதனால் ஏற்படுகிறது?

• குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.

• இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.

• கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

• நீரிழிவு வியாதி, உடல் பருமன்.

• இந்த காளான்கள் சாதாரணமாக குடலிலும், தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.

• இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

• சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.

இந்த நோயின் அறிகுறிகள்......

• பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்

• யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு

• புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்

• எரிச்சல்/ சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

• உடலுறவின் போது வலி.

சிகிச்சை முறைகள்........
1. தனக்குதவி

• நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.

• மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.

• குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.

• உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

2. ஆயுர்வேத மருந்துகள்... அசோகரிஷ்டம், திராக்ஷதி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.

3. இதர குறிப்புகள் உணவு முறைகள்.........

• வெள்ளைப்படுதல், நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள்.

• மன உளைச்சலை குறைக்கவும்.

• உடற்பயிற்சி உதவும்.

• இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால்  அதிகரிக்கவும்,  கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.

வீட்டு மருத்துவம்.......
• சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.

• மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.

• சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.

• லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

ஆயுர்வேத மருத்துவம்.......

வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைபடுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மணத்தக்காளி சூப்

சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறை

·    அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
·    உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
·    தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
·    உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். 

வெள்ளைபடுதல் நிற்க

1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.


2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.  


உணவே மருந்து.....

அன்னாச்சி பழத்தை எடுத்து தோல் சீவி  சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குறையும்.

வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம்

வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம

பெண்களே வெள்ளைப்படுகிறதா உஷார் - கவனக் குறைவாக இருந்தால் கார்பப்பை இழக்க நேரிடும்.

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்று கூறுகிறார் சித்த மருத்துவர் டாக்டர் சங்கர்.

இது குறித்து மாமல்லன் சித்த மருத்துவமனையின் டாக்டர். சங்கர் இதோ விளக்குகிறார்.

இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.

இந்த நோய் வருவதற்கான காரணங்கள

* தவறான உணவுப் பழக்கங்கள
* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல
* சுகாதாரமற்ற உள்ளாடைகள
* சுய இன்பம் காணுதல
* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல
* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள
* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள

மேற்கூறிய காரணங்களாலேயே இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள

* இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.

* உடல் மெலிந்து இடுப்பு, ை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.

* உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.

* பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

* மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.

* இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.

வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம

* கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.

* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.

* தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறைகள

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

* மசாலா பொருட்கள், காபி, ீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல மருந்துகள் உள்ளன. என்னிடம் வரும் நோயாளிகளில் இந்த வெள்ளைப்படுதலை குணப்படுத்த வரும் பெண்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெள்ளைப்படுதலை அலட்சியப்படுத்தாமல் உடன் தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும். சித்த வைத்தியத்தில் வெள்ளைப்படுதலை கணப்படுத்த எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Saturday, July 2, 2016

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்

 

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?


பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.

ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.

சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்

கர்ப்ப கால ஆயுர்வேத மருத்து

கர்ப்ப கால ஆயுர்வேத மருத்து

கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந் துரைக்கப்படுகிறது. இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும்.

முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும்.

இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட் கொண்டால் பிரசவ வலி குறையும்.

ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது

Wednesday, June 22, 2016

சுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும்

சுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும்
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்…
சுகப்பிரசவத்தில் ஏற்படும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.
பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும்.
முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.
3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.
இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், 'ஸ்லிங்' எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது… இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள் ஆகும்.
*''பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு எலும்புத் தசைகள் தளர்ந்து போகும். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேத்தறது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்… இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை லூசாக்கும். பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாம இருக்கிறது, எடை தூக்கறது, ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்யறது மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை தன்னோட இடத்துலேர்ந்து இறங்கிடும்.
*கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றோட ஒரு முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தச்சிட்டா, கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.
கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலேயே கவனிக்காம விட்டா அது தனக்கு பக்கத்துல உள்ள மூத்திரப் பை, மலப்பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர் பை இறங்கத் தொடங்கினா அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர அந்தப் பைக்குள்ள எப்போதும் சிறுநீர் தங்கி இன்ஃபெக்ஷன் உண்டாக்கும்.
*எப்போதும் சிறுநீர் தங்கி, இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் வரும். கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யறப்ப, சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும்.
*எதையுமே கவனிக்காம விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம்.பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள்
பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும்'' என்கிறார் மாலா ராஜ்.
கருப்பை இருக்கும் இடத்தில் இல்லாமல், சற்று அல்லது அதிகமாக கீழிறங்கி இருக்கும் நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பை என்பது ஒரு உள்ளுருப்பாகும். இது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. கருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில், பல்வேறு அரண்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
பல காரணங்களால், கருப்பையை தாங்கிக் கொண்டிருக்கும் தசைகள் தளர்வடைந்தாலோ, கருப்பை அரண்கள் வலுவிழந்தாலோ, உள்ளுருப்பாக இருக்கும் கருப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குகிறது.
இதுவே கருப்பை இறக்கம் எனப்படும். இது நான்கு வகைகளில் அமைகிறது.
  1. எப்போதாவது முக்கும் போதும், இரும்பும் போதும், தும்பும் போதும் சிறிதளவு அடி இறங்குவது.
  2. மற்றொன்று நாக்கின் நுனி போல எப்போதுமே ஓர் சதைப் பகுதி அடியில் தோன்றும். இந்த நிலையில் படுத்துக் கொள்ளும் போது அது உள்ளே சென்று விடும்.
  3. மூன்றாவதாக, சற்று வெளியில் தொங்கும் சதையானது,எப்போதுமே வெளியே தொங்கியவாறு இருத்தல். இந்த நிலையில், சிறுநீர் கழிக்கவும் சிக்கல் ஏற்படும்.
  4. நான்காவது நிலைதான் மிகவும் மோசமான நிலையாகும். இதில், கருப்பை வெளியே தொங்கும்.
இதனால் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பெண்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது. முதல் கட்டத்திலேயே பெண்கள் மருத்துவரை அணுகுவதால், சில தகுந்த உடற்பயிற்சிகள் மூலமாக சரி செய்யலாம் என்பது ஆறுதலான விஷயமாகும்.
யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்
''சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. நீண்டநேரம் வலியுடன் அவதி, கஷ்டப்பட்டு, முக்கி, குழந்தையை வெளித்தள்ளுவது, பிரசவத்துக்குப் பிறகு ஓய் வெடுக்காதது என இதற்குப்  பல காரணங்கள். பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல் வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத்  தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.
கருப்பை இறக்கம் (uterovaginal prolapse)என்பது வயதான பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதன் போது கருப்பைப் பையானது பெண்ணின் யோனி வழியே கீழ் இறங்கும்.
கீழிறங்கிய கருப்பை பெண்ணின் பிறப்பு உறுப்பினுள்ளே (vagina)இருக்கலாம் அல்லது சற்று தீவிரமடையும் போது பெண்ணுறுப்பின் வெளியே கருப்பையின் ஒருபகுதி வெளியே வரலாம், இந்தப் பிரச்சனை தீவிரமடையும் போது கருப்பை முழுமையாக வெளியேறலாம்.
முற்று முழுதாக கீழிறங்கிய கருப்பை
இந்தப் நோயானது அதிகமான குழந்தைகளை சாதரணமாக பெற்று எடுத்தவர்களிலேயே பொதுவாக ஏற்படும். அதாவது சீசர் முறை மூலம் குழந்தைகளை பெற்று எடுத்தவர்களுக்கு
இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு.
மேலும் அதிகமான குழந்தைகளைபிறப்பு வழியே பெற்றெடுக்கும் போது இந்த கருப்பை இறக்கம்
ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். சிலவேளை இந்த கருப்பை இறக்கத்தோடு மூத்திரப்பையும்(blader) சேர்ந்து கீழ் இறங்கலாம். சில பெண்களுக்கு கருப்பையோடு குடலின் ஒரு பகுதியும் சேர்ந்து கீழ் இறங்கலாம்.
கருப்பையின் ஒரு பகுதியோடு சிறுகுடலின் ஒரு பகுதியும்இறங்கியுள்ளது
அரிதாக கருப்பை இறக்கம் இல்லாமல் மூத்திரப்பை மட்டும் கீழ் இறங்கலாம். இப்படி கருப்பை பை
இறக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் யோனி வழியே pessaryஎனப்படும் வளையங்களை
உட்செலுத்தி தற்காலிக தீர்வு வழங்கப்படலாம்.
தற்காலிக தீர்வு வழங்கும் வளையங்கள் பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன்
வேலையைக் காட்டத்தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெ ளியே வருகிற உணர்வு இருக்கும். கசிவும் அடிக்கடி இன்ஃபெக்ஷ னும் முதுகு வலியும் இருக்கும். முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப் பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.
3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப்போகிற சிறு நீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுத டைவது போன்றவையும், மலச்சிக்கலும்,மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.
இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின்,'ஸ்லிங்' எனப்படுகிற  அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது… இவையெல்லாம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்…''
ஆனாலும் நிரந்தரமாக இந்த பாதிப்பில் இருந்து மீள வேண்டுமானால் சத்திர சிகிச்சை மூலம் கருப்பைப் பை நிரந்தரமாக அகற்றப் பட வேண்டும்.

கர்ப்பப்பை கோளாறுகள்:

Uterus Problems (Tamil)


கர்ப்பப்பை கோளாறுகள்:
இன்று கர்ப்பபை சம்பந்தமான பிரச்சினை மிக அதிகரித்து கர்ப்பப்பையில் புற்றுநோய்வரை ஏற்பட்டு பின் கர்ப்பபையையே எடுத்துவிடுகிறார்கள்.
அவ்வாறு எடுக்கப்பட்டாலும் அந்த பெண் தொந்தரவுகளில் இருந்து வெளிப்பட்டு நிம்மதியாக இருக்கிறாரா? இல்லை அதன் பின் மற்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறாரா? என்றால் அவர் மேலும் மேலும் தொந்தரவுகளுக்கு ஆளாவதைத்தான் பார்க்க முடிகிறது.
Uterus

ஆம் தவறான செயலை செய்தால் தவறான விளைவுகள்தான் ஏற்படும்.கர்ப்பப்பையில் என்ன மாதிரியான தொந்தரவுகள் ஏற்படும்
1. ஒழுங்கற்ற மாதவிடாய்
2. அதிக இரத்தப் போக்கு
3. அதிகநாட்கள் இரத்தப் போக்கு
4. அதிக வலி
5. வெள்ளைப்படுதல்
6. புண்கள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதற்கு காரணம் என்ன? இதை ஏதாவது ஒரு ஆங்கில மருத்துவரிடம் சென்று கேட்டால் அவர்கள், அவர்கள் பங்கிற்கு ஏதேனும் சொல்வார்கள்.
ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம், தெரியாத அதே சமயம் குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் 15 ஆவது வரிசையில் இருப்பது "கர்ப்பப்பை சம்மந்தமான அனைத்து நோய்களும்".
எனவே மூலகாரணமும் தெரியாமல், குணப்படுத்தவும் இயலாத ஒரு மருத்துவத்தை நாம் நாடும்போது அந்த நோய் முற்றுவது என்பது இயற்கையே. தவறான செயலை செய்தால் தீங்கு நிச்சயம் நேரும் என்பது உண்மைதானே. அதுதான் இங்கும்.
சரி இதற்கான வழியை பற்றி இங்கு கொஞ்சம் பார்போம்.
நமது முன்னோர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது அது எத்தனை நாட்களில் குணமடைந்தது?
தற்போதைய பெண்களுக்கு எத்தனை நாட்களில் குணமடைகிறது?
முன்னோர்களென்றால் நமது பாட்டியையே எடுத்துக்கொள்ளலாம்.
அவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டதா என்றால் பெரும்பாலும் ஏற்பட்டு இருக்காது. ஆனால் தற்போதைய பெண்களுக்கு ஏன் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது?
முதலில் மாதவிடாயை சுருக்கமாகப் பார்க்கலாம்.
மாதவிடாய் என்பது ஒரு பெண் பருவம் அடைந்த நாள் முதல் எற்படும் ஒரு இயற்கையின் சுழற்சி. அந்த பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டை ஆனது கருக்குழாய்மூலம் கருப்பையை அடைந்து ஆணின் உயிரணுவிற்காக காத்திருக்கும்.
இந்த கருமுட்டையை தாங்கிப் பிடிக்க இரத்தத்தினால் ஆன ஒரு பை உருவாகி அதில் இந்த கருமுட்டையானது இருக்கும். ஆணின் உயிரணு கிடைக்காத பட்சத்தில் அந்தக் கருமுட்டை மற்றும் இரத்தத்தால் ஆன பை இரண்டும் உடைந்து உடலைவிட்டு வெளியேறிவிடும்.
இது இயற்கையாக நடக்கும் ஒரு செயல். இந்த செயல் 28 நாட்களில் நடந்து முடிந்து அடுத்த சுழற்சி ஏற்படும். இது இயற்கை. அதேபோல் இந்த வெளியேறும் செயல் மட்டும் மூன்று நாட்கள் நடக்கும்.
ஆனால் இன்றைய கால பெண்களுக்கு அவ்வாறு நடக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாட்களில் வெளியேற வேண்டிய இந்த கழிவு 5/6 நாட்கள் வரை தொடர்ந்து வெளியேறுதல்,குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வெளியேறுதல்,
குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் வெளியேறாமல் இருத்தல், அதிக வலி, அதிக உதிரப்போக்கு, சில சமயங்களில் ஒரு நாள் மட்டும் வெளியேறுதல், தொடர்ந்து பல நாட்கள் உதிரப்போக்கு இருத்தல், தொடர்ந்து சில மாதங்கள் கழிவு வெளியேறாமல் இருந்தல் போன்றவை ஏற்படுகிறது.
நம் பாட்டி ,அம்மாக்களுக்கு இல்லாத இந்த சிக்கல் ஏன் நமதுகால பெண்களுக்கு? காரணம் நமக்கு உடலைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனது ஒருபுறம், நமது வாழ்க்கை முறை ஒருபுறம். இங்கே இந்த பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோர்கள் வாழ்ந்தது எப்படி? மிக எளிது.
Uterus 1
1.அந்தக் காலங்களில் மாதவிடாய் சமயத்தில் அவர்கள் குளிக்கமாட்டார்கள்.
2.எந்த வேலையும் செய்யாமல் தீட்டு என்று வீட்டிற்கு ஒதுக்குபுறம் ஒதுக்கிவிடுவார்கள்.
3.எந்த வித நாப்கினும் அவர்கள் பயன்படுத்தவில்லை. பருத்தி துணிகளையே பயன்படுத்தினார்கள்.
இந்த செயல்களில் மறைந்திருக்கும் சூட்சும விஞ்ஞானம் என்ன தெரியுமா?
1. நாம் முன்னமே பார்த்த அந்தக் கழிவானது வெளியேற உடலின் சூடு மிகவும் துணைபுரிகிறது. அதனால் அவர்கள் குளிப்பதைத் தவிர்த்தார்கள். அதன் விளைவு உடலின் சூடு குறையாமல் கழிவை வெளியேற்ற அந்த சூடு பயன்பட்டது.
ஆனால் இப்போது பெண்கள் அவர்கள் சூழ்நிலை காரணமாக தினமும் வழக்கம் போல் குளித்துவிட்டு வருவதால் உடல் சூடு குறைவதால் கழிவு வெளியேற்றம் தடைபடுகிறது.
2.அந்த காலங்களில் தீட்டு என்று ஓரமாக அமர்ந்து ஓய்வில் இருந்தார்கள். அதனால் உடலில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் வேலை செய்யும்போது ஏற்படும் சக்தி பரிமாற்றம் ஏற்படாமல் முழு இயக்க சக்தியும் கழிவு வெளியேற்றத்திற்கே செலவு செய்யப்பட்டதால் எளிதில் கழிவு வெளியேறியது.
மற்றபடி அதில் தீட்டு என்றும், தீண்டத்தகாதவர் என்றும் ஏதும் இல்லை. இந்த இரண்டு செயல்களும் நம் முன்னோர்கள் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஆனால் இன்றைய பெண்கள் சூழ்நிலையின் காரணமாக உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை செய்வது அவர்கள் உடலில் உள்ள மாதவிடாய் கழிவை வெளியேற்றவிடாமல் தடுக்கிறது.
3.அந்தக்காலங்களில் நமது அம்மா, பாட்டி போன்றோர்கள் இன்றைய பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் பயன்படுத்தியது இல்லை. எனவே அவர்களுக்கு கர்ப்பப்பை தொடர்புடைய சிக்கல்கள் இருந்தது இல்லை.
இதை சொல்லும்போது நாப்கின் பயன்படுத்துவது தவறா என்று கேட்கலாம். இன்றைய விளம்பரங்களில் பாருங்கள், நாப்கின் அணிந்துகொண்டு மலை ஏறலாம், மரம் ஏறலாம், ஓடலாம், ஆடலாம், பாடலாம் என்று சொல்லப்படுகிறது.
இது சரியா என்று மேலே சொல்லப்பட்ட கருத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஓய்வில் இருந்தால்தான் கழிவுகள் வெளியேறும். ஓய்வு இல்லாமல் மலையும், மரமும் ஏறினால் என்ன நடக்கும். கழிவுகள் உடலிலேயே தங்கும். மேலும் நாப்கின்களில் இருக்கும் திரவத்தை உறிஞ்சும் ஜெல், மாதவிடாய் கழிவுகளை வெளியேற்ற விடாமல் தடுக்கிறது. அதனால் கழிவுகள் முழுதும் வெளியேறாமல் உடலிலேயே தங்குகிறது.
4. இதுபோன்று தங்கிய கழிவுகளாலேயே கர்ப்பப்பையில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.
இதுபோக இந்த சிக்கல்கள் சரியாக வேண்டி எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள், அதுவும் பெண்கள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளும் நோயை பெரிதுபடுத்தி கர்ப்பப்பையில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.
உடனே கேள்வி எழும்… என்ன மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் கூட சிக்கல்களை பெரிதுபடுத்துமா? ஆம். ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம் தெரியாது, அதேசமயம் குணப்படுத்தவும் முடியாது என்று உலக சுகாதர நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்திருக்கும் பட்டியலில் 15 ஆவது இடத்தில் "கர்ப்பப்பை தொடர்புடைய அனைத்து நோய்களும்" என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த காரணத்தாலேயே ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் சாப்பிடுவது கர்ப்பப்பையை எடுக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது. சரி இந்த சிக்கல்கள் வராமல் இருக்கவும், வந்தவர்கள் இதை சரி செய்யவும் என்ன செய்யவேண்டும்.
எப்போதும் போல் பசி எடுக்கும்போது பிடித்த உணவுகளையும், தாகத்திற்கு தண்ணீரையும், உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வையும், தூக்கம் வரும்போது தூக்கத்தையும் உடலுக்கு கொடுத்தாலே போதும்.
மேலும் மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்து உடல் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டு, அந்த சமயங்களில் நாப்கின் பயன்படுத்தாமல் ஓய்வில் இருந்தால் போதுமானது. இந்த காலத்தில் ஓய்வா என்றால், நிச்சயம் ஓய்வுதான் தேவை.
மேலும் சொல்வதானால் பெண்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்ப்பதாலும், கர்ப்பகாலங்களில் குழந்தையை ஸ்கேன்செய்ய கருப்பையை ஸ்கேன் செய்வது, சிசேரியன் என்ற பெயரில் கர்ப்பப்பையை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பதும் கூட கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. அதைப்பற்றி அடுத்து எழுதலாம்.
இதை செய்துவந்தாலே மெல்ல மாதவிடாய் சிக்கல்கள் தீரும்.

கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!

கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!

 
பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.

இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.

பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.

காரணங்கள

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம்.

அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.

கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.

சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.

மிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.

சிகிச்சை முறைகள

ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.

கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.

மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது

கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!

 
 
பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.

இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.

பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.

காரணங்கள

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம்.

அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.

கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.

சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.

மிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.

சிகிச்சை முறைகள

ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.

கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.

மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது


Thursday, May 12, 2016

பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!


பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.


ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.
இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.
மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.

புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு...

தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே

மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும் என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.