"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, April 12, 2016

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:



வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வ...ருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும்.

'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்' என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.

குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார். ''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.

இவர்களை எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? வழிக்காட்டுகிறார் சென்னை, விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி. ''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே. சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன், முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், நன்றாகப் பசித்து சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும். உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம். ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்' என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்'' என்றார் அறிவுடை நம்பி.

குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால், குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்! போதை ஏறினால்... பாதை மாறினால்... 1,30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்... மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).

மது 'உள்ளே' சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது? அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார். ''நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும் மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம், சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம். மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும். அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!'' பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...

குடிக்கும் நேரம் வரும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம், பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி, குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்' என்று திடமாகக் கூற வேண்டும்.

பெற்றோர்களின் கவனத்துக்கு... நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து வைக்கவும் . பார்ட்டி, ஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள், மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லி, உங்களுடைய கனிவான கண்காணிப்பில் அவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நட்பு வட்டாரத்தினால், மகன் பாதை மாறுவது தெரிந்தால், ஒரிரு வாரங்கள், குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும் மகத்தான பலனைத் தரும். வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால், அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்' என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்; தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.

மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்! "மது தீமைகளின் தாய்" -என்று ஒரு மகான் சொல்லி இருக்கிறார். ஒரு நல்லவன் மது அருந்த ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவான், கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது, நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு வேண்டுமேன்றே சண்டைக்கு போவது, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, etc முடிவில் அடிதடி, தஹரார், கொலை, விபச்சாரம், கற்பழிப்பு, போலீஸ் கேஸ், ஜெயில் வாழ்கை, அவனது குடும்பம் நடுத்தெரு, வறுமை, தற்கொலை, அடிக்கடி கணவன் மனைவி சண்டை, அதனால் குழந்தைகள் பாதிப்பு, அதனால் விவாகரத்து.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்





மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்

இதனால் தான் இஸ்லாம் இதை தடை
செய்கிறது

வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே
மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.

இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல்
இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ்
பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர
சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை
கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

''ஆரம்பத்தில்
வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு
அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில்,
இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும்.
எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக
இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.


அடுத்து, குடிப்பதைக்
கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில்
சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக்
குடிப்பார்கள். கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை;
தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய்
பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல்
மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும்.
'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்' என்கிற உச்ச நிலை
உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே.
மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.



குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே.
மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.


''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு
வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20
சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி
கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற
அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது,
புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல்
எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு
அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட
குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை
நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம்,
பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள்
உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய
வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி
குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத்
துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல்
என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது.
குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப்
பாதிப்புகளுக்கும் உள்ளாகும்.

மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.



இவர்களை எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

வழிக்காட்டுகிறார் சென்னை, விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி.


''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும்.
குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள்.
சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என
அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன்,

முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே
உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், நன்றாகப் பசித்து சாப்பிடவும்,
ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல்,
மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும்
பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி,
மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு
சிகிச்சைகள் அளிக்கப்படும்.

உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து
சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள்,
பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய
சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க
ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற
உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும்
சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம்.

ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று
மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்' என்ற உறுதியான
எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற
பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான்
செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது
குடிநோயாளிதான்'' என்றார் அறிவுடை நம்பி.

குடிநோயிலிருந்து
ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல்
காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால், குடிபோதைபற்றிய விழிப்பு
உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி
செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!


போதை ஏறினால்... பாதை மாறினால்...

1,30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின்
எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது.

உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான
காரணம்... மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம்
என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).

மது 'உள்ளே' சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?

அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

''நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு
கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும்.
இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக்
ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில்
கலக்கிறது. இவை மூன்றும் மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம்,
சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும்.
இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான்
வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது.

குறிப்பாக, நம்முடைய
மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி
பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது
ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம்,
கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே
இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும்.
எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது
அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது.

மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ
ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ
டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள்
இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல
நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள்
குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும்.
குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.

மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு
மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள்
இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு
மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு
என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி
விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத்
தாமதமாகும்.
அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க
விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும்
பாதிக்கப்படும்!''
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...



குடிக்கும் நேரம் வரும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம்,
பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி, குடும்ப உறுப்பினர்களுடன்
நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது, விளையாட்டுகளில்
ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.


ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.


எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்' என்று திடமாகக் கூற வேண்டும்.

பெற்றோர்களின் கவனத்துக்கு...

நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து வைக்கவும் .


பார்ட்டி, ஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக்
கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல்
மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள்,
மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லி, உங்களுடைய கனிவான கண்காணிப்பில்
அவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.



நட்பு வட்டாரத்தினால், மகன் பாதை மாறுவது தெரிந்தால், ஒரிரு வாரங்கள்,
குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும்
மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும்
மகத்தான பலனைத் தரும்.

வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால்,
அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள
குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான்
இருக்கிறோம்' என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம்
அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்; தவறான
செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.



மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!

"மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்

ஒரு நல்லவன் மது அருந்த ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவான்,

கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது,
நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு வேண்டுமேன்றே சண்டைக்கு போவது,
வாகனத்தை வேகமாக ஓட்டுவது, etc முடிவில்

அடிதடி, தஹரார், கொலை, விபச்சாரம், கற்பழிப்பு, போலீஸ் கேஸ், ஜெயில் வாழ்கை,
அவனது குடும்பம் நடுத்தெரு, வறுமை, தற்கொலை, அடிக்கடி கணவன் மனைவி சண்டை, அதனால் குழந்தைகள் பாதிப்பு,
அதனால் விவாகரத்து etc

நபிகள் நாயகம் "மது தீமைகளின் தாய்" என்று சொன்னது எவ்வளவு பொருத்

போதை தடுப்பு மறுவாழ்வு மையம்

வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்சிறப்பு

குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால்உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூடத் தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவதுறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது.[1] 19 ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலும், மது சார்புள்ளமை என்ற நோய்டிப்சொமேனியா (மதுப் பித்து) என்று அழைக்கப்பட்டது; பிறகு அச்சொல்குடிப்பழக்கம் என்ற சொல்லால் மாற்றியமைக்கப் பெற்றது.[2] 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்புஇதனை மது சார்பு கூட்டறிகுறி எனக் குறிப்பிடலானது.[3]

குடிப்பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உயிரியல் கோட்பாடுகள் உறுதியற்றதாக இருப்பினும் சமூகச்சூழல், மனத்தகைவு[4], மன நலம்,மரபியல் முற்சார்பு, வயது, இனம்,பாலினம் ஆகியவை வாய்ப்பு அளிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.[5][6]நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை மற்றும் பொருண்மச்சார்பு போன்ற உடலியக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால்மூளையில் ஏற்படும் வேதியியல்மாற்றங்கள் விடாப்பிடியான மதுப்பழக்கத்தை வலுப்படுத்துவதோடு மது குடிப்பதை நிறுத்தும்பொழுது, மது நிறுத்த நோய்க் கூட்டறிகுறி ஏற்படுகிறது.[7] மது மூளை உட்பட, நமதுஉடலில் இருக்கும் ஏறத்தாழ அனைத்துஉறுப்புக்களையும், சேதமடைய வைக்கிறது; கடுமையான, தொடர் மது அருந்தும் பழக்கம் காரணமாக உடலில்நச்சுத்தன்மை ஏறிக்கொண்டே சென்று மது அருந்துவோர் பல விதமான மருத்துவ மற்றும் மன நல சீர்கேடுகளுக்கு ஆளாகிறார்கள்.[8]குடிப்பழக்கம் காரணமாக மதுப் பழக்கம் கொண்டவர்களுக்குச் சமுதாயத்திலும், அவர்களது குடும்ப மற்றும் நண்பர்களிடையேயும் அதீதமான பாதிப்புகள் ஏற்படும்.[9][10]

குடிப்பழக்கம் என்பது சகிப்புத்தன்மை, நிறுத்தம், பின் மிகையான குடியென மீள் சுற்றாகத் தொடர்வது; குடியின் கேடுகள் அறிந்திருந்தும் அதனை விட முடியாதிருப்பது, அளவைக் கட்டுப்படுத்த இயலாமை ஆகியவை மூலம் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதை அறியலாம்.[11]குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களையும் அவர்களது தன்மைகள் குறித்தும் அறிய கேள்வித் தொகுதிகள் பயனாகின்றன. .[12] ஒருவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மது நச்சு முறித்தல் மருத்துவமுறை முயல்கிறது; பொதுவாக எதிர் சகிப்புத்தன்மையுடன் கூடிய, எடுத்துக் காட்டாக 'பென்ஸோடியாஸெபைன்' வகையைச் சார்ந்த தூக்கமருந்துகளால்நிறுத்தல் விளைவுகளை மேலாண்மை செய்வதாகும்.[13] மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, குடிப்பழக்கத்திற்கு மீளாதிருக்க குழு மருத்துவம், அல்லது சுய உதவிக் குழுக்களின் உதவி போன்றவை தேவையாகும்.[14][15] சில நேரங்களில், மது அருந்துவோர் பிற மருந்துகளுக்கும் அடிமையாக இருக்கலாம், குறிப்பாகப் பென்ஸோடியாஸெபைன் வகைமருந்துகள். அவ்வாறாயின் கூடுதலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.[16]மது அருந்தும் பெண்கள், ஆண்களைவிட, மது சார்ந்த அதன் தீய பாதிப்புகளுக்கு அதாவது உடல் ரீதியான, மூளை பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு மற்றும் சமூகத்தில் அவரைப் பற்றிய தவறான மதிப்பீடுகள் போன்ற இடர்களுக்குக் கூடுதலாக ஆட்படுவர்.[17][18] உலக அளவில் சுமார் 140 மில்லியன் குடிகாரர்கள் இருப்பதாகஉலக சுகாதார அமைப்புமதிப்பிட்டுள்ளது.

மது ஏன் குடீக்க கூடாது



மது ஏன் குடிக்க கூடாது?

மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும்.  வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.

மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.

குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

கர்ப்பப்பை நீர்கட்டிகள் (pcod)பாதிப்பு மற்றும் தீா்வுகள் !!!



. மாத விடாய் ஒரு பெண் பருவமடையும் போது ஆரம்பிக்கிறது. பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெண்ணின் இனப்பெருக்க சுழற்சியை நிறுத்துகிறது. மாதவிடாய் இரத்தப்போக்கு சேர்ந்து கருப்பை (கருப்பையக சவ்வின்) புறணி உதிர்தல் ஆகிறது. இது கர்ப்ப காலத்தில் தவிர, ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கை முழுவதும் சுமார் மாதாந்திர சுழற்சிகள் ஏற்படுகிறது
இந்த மாதவிடாய் சுழற்சிகள் சாதாரணமாக சுமார் 25 முதல் 36 நாட்கள் வரை இருக்கும். பெண்கள் 10 முதல் 15% சரியாக 28 நாட்கள் என்று சுழற்சிகள் வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 20% பெண்களுக்கு , சுழற்சிகள் ஒழுங்கற்ற இருக்கின்றன. .
மாதவிடாய் இரத்தப்போக்கு 5 நாட்கள் சராசரியாக, 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். ஒரு சுழற்சி போது இரத்த இழப்பு பொதுவாக 1/2 2 1/2 அவுன்ஸ் வரை இருக்கின்றன.
.மாதவிடாய் சுழற்சி சாதாரண உடலியல் பருவமாற்ற நிகழ்வுதான்.
மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. LH மற்றும் FSH ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பி மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன, இது தான் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் உற்பத்தியை கருப்பைகளில் தூண்டுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் தான் கருப்பையை கருத்தரித்தலுக்கு ஊக்குவிக்கின்றன.
கருமுட்டை யானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப் படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. "பாலி சிஸ்டிக் ஓவரி" என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(PCOS)

ஓவரி(OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன.
cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrom எனப்படுகிறது.

இந்த நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

இந்த திரவக் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அசாதாரணமாக ஹோர்மொன்களை சுரப்பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பிரச்சனை ஏற்படுகிறது. PCOD என்பது PCOS-ன் முந்தைய நிலைதான்.
கருப்பையில் கட்டிகள்,இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள். உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.. . .

பிசிஓஎஸ் உள்ள பெண்களில், சினை முட்டைகன் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் (அண்டவிடுப்பின்) நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனால் ஒவியுலேசன் தடைப்படும்.

பொதுவான அறிகுறிகள்
சோர்வு
மனப்பதற்றம்
தூக்கமின்மை
குழப்பமான மனநிலை
மன அழுத்தம்

கண்ணால் பார்க்கக்கூடிய அறிகுறிகள்
உடல் எடை அதிகரிப்பு
முகப்பரு
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல்
முகத்தில் ரோம வளர்ச்சி
முகத்தில் கரும்புள்ளி
மார்பகங்கள் குழாய்போல் சுருங்குதல்
சருமத்தில் மருக்கள்
உடலுக்குள் ஏற்படும் அறிகுறிகள்
ஓவரியில் கட்டிகள்
இன்சுலின் செயல்திறன் பாதிப்பு
குழந்தையின்மை
ஒழுங்கற்ற மாதவிலக்கு
ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு
காரணங்கள்
உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் மிகக் குறைந்த அளவில் ஆன்ட்ரோஜென் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது சினைப்பையில் முட்டை உருவாதல் பாதிக்கப்பட்டு, சீரற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான இன்சுலின் சுரத்தலும்கூட ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது. தவிர, மரபியல் ரீதியாக அம்மாவுக்கு இருந்தால்கூட பெண்ணுக்கும் பி.சி.ஓ.எஸ். ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறும்போது சினைப்பை அல்லது கர்ப்பபை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
தடுக்க
உணவு, உடல் உழைப்பின் அளவைச் சீராக்குவதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்.
உடல் எடை
இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அதிக அளவில் சுரப்பதைக் கட்டுப்படுத்தலாம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

உணவுப் பழக்கம்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே, உணவில் கார்போஹைட்ரேட் சத்து அதிக அளவில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மொத்தமாக கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்துவிட வேண்டாம். அதற்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதால், செரிமானத்தைத் தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படும். இது இன்சுலின் அதிக அளவில் சுரந்து ஆன்ட்ரோஜென் அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுப்பதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் நீர்க்கட்டிகள் இருந்தால் அறிந்து கொள்ள முடியும் மற்றும் நீங்கள் இருந்து சினைப்பையில் முட்டை உற்பத்தி அளவு, வெளியேற்றம் பற்றியும், அறிந்து கொள்ள முடியும்.இரத்த பரிசோதனைகள், FSH, LH மூலம் PCOS பிரச்னை அறிய முடியும்.(LH / FSH விகிதம் - இந்த விகிதம் பொதுவாக பெண்களுக்கு 1:1 இருக்க வேண்டும்., ஆனால் PCOS பெண்களுக்கு இந்த விகிதம் அதிகமாக 2:1 அல்லது 3:1 என்ற விகிதத்தில்இருக்கும்.)

எடுத்துக்கொள்ள வேண்ய உணவுகள

பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படுத்தும்
முடிந்தவரை சுத்தமான சாப்பிடுகளை சாப்பிட வேண்டும்
3. ஓட்ஸ்,தினை,முளைக்கீரை, போன்ற ஆக்ஸிஜனேற்ற(antioxidants) அதிக அளவு கொண்ட உணவுகளை எடுத்து வேண்டும்
4. உருளைக்கிழங்கு, அரிசி, வெள்ளை suger மற்றும் பாஸ்தா போன்ற எளிய கார்போஹைட்ரேட் தவிர்க்க வேண்டும்.
5. தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.
6. பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.
7. சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவு எடுத்துக்கொள்வதும் நல்லது.
8. மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும்.
9. சிறிய வெங்காயமும் தினசரி 50 கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் PCOD பிரச்சினையை போக்கிட உதவும்.
10.கீரைகள் -
குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவு. தினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதில் சோம்பல் வேண்டாம். குறிப்பாய் பசலை, முருங்கை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவ பாடல் கூறுகிறது. மகவிற்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.
தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப்பருப்பு இவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினை களைக் குறைக்க கண்டிப்பாக உதவிடும்.

போகம் விளைவிக்கும் கீரைகள் என சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவேளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றை கண்டிப்பாய்ச் சமைத்து சாப்பிட வேண்டும்.

குழந்தைப் பேறு நெடு நாளாகத் தள்ளிப்போகும் மகளிர், கொத்துமல்லி கீரை 2 ஸ்பூன் அளவில், டீ ஸ்பூன் அளவில் வெந்தயம் சேர்த்து இளங்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு 'அகர்அகர்' எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்.
உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசித்து மருத்துவம் செய்வித்துக் கொள்வது அவசியம். அதிகம் கடுகு, முட்டைகோஸ் எடுப்பதும் தைராய்டு அளவைக் குறைக்கக் கூடும் என்கிறது இன்றைய ஆய்வுகள்.
உணவில் அதிக முளைகட்டிய பயறு வகைகளும், இலவங்கப்பட்டை, சாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களுடன் நிறைய சேர்க்கவேண்டும்.
புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவிற்கு விந்து அணுக்களை அதிகரிக்கவும் இதன் இயக்கத்தை கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கிறது இன்றைய விஞ்ஞான ஆய்வுகள். கூடியவரை வீட்டில் தயாரித்த, எண்ணெய் சத்து அதிகமில்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முதலிடம் கொடுங்கள். ரெடிமேட் உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது.
கருத்தரிக்க முயலும் போது, காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை ஸ்மூத்தி : மாதுளையில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை தினமும் பருகி வர வேண்டும். இதனால் விரைவில் கர்ப்பமாகலாம்.
சால்மன் க்ரில் : கருத்தரிப்பதை அதிரிப்பதில் சால்மன் மீன் முதன்மையானது. அதிலும் அந்த சால்மன் மீனை கழுவி, அதில் இஞ்சியை துருவி போட்டு, வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைத்து, க்ரில் செய்து சாப்பிட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
பசலைக் கீரை சாலட் : பசலைக் கீரையில் வைட்டமின் கே அதிக அளவில் நிநைந்துள்ளது. ஆகவே கேல் கீரையை சாலட் அல்லது கடைந்து சாப்பிடுவது விரைவில் கர்ப்பமாவதை உறுதியாக்கும்.
சீஸ் சாண்ட்விச் : சீஸில் பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான கால்சியம் சத்தானது அதிகம் இருப்பதால், இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது.
க்ரில்டு கடல் சிப்பி : கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்தது. அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் ஆயில், மிளகாய் தூள் மற்றும் பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் க்ரில் செய்து சாப்பிட்டால், சுவையுடன் இருப்பதோடு, விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
மூலிகை ஜூஸ் : கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்ஸ்லி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, மாலையில் குடித்து வந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மருத்துவ குறிப்பு


பண்டையச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.

அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

வாதம்,பித்தம்,கபம்

வாதம்-பித்தம் -கபம்

"எதை உண்டால் இந்த 'பித்தம்' தெளியும்? ஒருவேளை 'வாதக்'க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் 'கபம்' கட்டியிருக்கு...",என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய 'கூகிள்' தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த "வாதம் பித்தம் கபம்" எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

"வாதம், பித்தம், கபம்" -அல்லது "வளி, அழல், ஐயம்" என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. "ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது," என்ற அறிவை வளர்க்கும் நாம், "உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது"-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
"முத்தாது" என்று தமிழ் சித்தத்திலும் "த்ரீதோஷா" என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று"- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு "காமன் வெல்த்"திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்" நான்"-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து "2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,' என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

இரத்த சோகை பீர்க்கங்காய்

இரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்!

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன.

இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்­ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும்.

பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

இடுப்புவலி

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி.

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

காயகற்பம்



காயகற்பம்

கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

'அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே'
- திருமந்திரம். செய்.

கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ணவேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.

கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே! என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.

இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்? தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது.

நங்கை மூலிகை

பயன் தரும் மூலிகைகளும் செடிகளும்..!

நங்கை மூலிகை:

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். 'சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்' என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மூலிகை பொடி

  • மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சிறுநீரகம்


சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு.

*சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. <

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.