"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label மருத்துவ தானியங்கள். Show all posts
Showing posts with label மருத்துவ தானியங்கள். Show all posts

Monday, April 25, 2016

வெந்தயம்


குறிச்சொற்கள் » வெந்தயம்





சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு
விருந்திலும் சரி, வீட்டிலும் சரி அதிமுக்கிய இடம்பிடிப்ப‍து சாம்பார் தான். அதிலும் துவரம் பருப்பில்

வெந்தயம் இருக்க வேறு என்ன வேணும்

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும்.
வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது.
கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது. மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
நமது வயிற்றின் அக உறை மற்றும் குடலில், வெந்தயத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இரையக குடலிய தசைகளை இதமாக்கும். அதனை உட்கொள்வதற்கு முன்பாக, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தால், அதன் வெளிப்புறம் பசைத்தன்மையை பெறும். வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலை குறைத்து, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். வெந்தயத்தின் பசைப்பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்சலையும் நீக்கும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உடலில் இருந்து வெளியேற்றும். இது பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். செரிமானத்தை ஊக்குவித்து, உடலிலுள்ள தீமையான நச்சுக்களை வெளியேற்றும். இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு போக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால், அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், பசியை அடக்கிவிடும். ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம். அதில் தீக்காயம், கொப்பளம், சரும படை போன்ற பிரச்சினைகளும் அடக்கம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும்.
வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், பொடுகை விரட்டும், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும்.

மருத்துவம்




வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?

வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?

வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?
இன்றைய சில பெண்களுக்கு தங்களது சிறிய மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள், தினந்தோறும்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி –அரை கிலோ
வெந்தயம் —கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

வெந்தயம் ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள்.
பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும் அது 50 -110 மில்லி நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும். இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது. இதை சமையல் செய்வதற்கும் மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்



சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்

சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்! — மருத்துவ டிப்ஸ்,

"என்ன அம்மணி, கோனாரைப் பாக்கப் போகணும்னு சொன்னா, உன் வீட்டுக்கே அழைச்சிட்டு வந்திட்டியே?"
 "அடியே வாசம்பா… வெந்தயக்கீரை என் வீட்டுக் கொல்லப்புறத்துலேயே கிடக்குதுடி… செடியா இருக்கிறப்பவே கீரையைப் பறிச்சிடணும். 'ஒரு காலத்துல மாட்டுத் தீவனமா இருந்த வெந்தயம், சமையலுக்குப் பயன்படுத்தப்போய், இப்ப நோய் தீர்க்கற மருந்தாவே ஆயிடுச்சு!" என்றபடியே விறுவிறுவென கோனார் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினாள் அம்மணி, கூடவே வாசம்பாவும்.
பாயோடு பாயாகக்கிடந்த கோனாரைப் பார்த்த அம்மணி, "என்ன கோனாரே, இப்படிக் குடிச்சே குடல் வெந்துபோயிக் கெடக்குற… எத்தனை முறை சொன்னேன் கேட்டியா… வயித்து வலி வராம என்ன பண்ணும்?"
"குடியை நிறுத்திட்டேன் அம்மணி அக்கா… நீ சொன்ன பத்தியத்தைத்தான் கடைப்பிடிக்காம விட்டுட்டேன். எனக்கு ஆக்கிப் போட யார் இருக்கா?" – வயிறு ஒட்டி, நாராகக்கிடந்த கோனாரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"இன்னிக்கு நீ அநாதையாக் கிடக்கறதுக்கும் நீயேதான் காரணம்… இருக்கிற சொத்தையாவது காப்பாத்திக்கலாம்னு உன் மகனுங்க… கைவிட்டதும் குடியினாலதானே" என்ற அம்மணி, உலையை வைத்து, சாதம் ஆக்கினாள். வெந்தயக்கீரையை ஆய்ந்து, பாசிப்பயறு சேர்த்து புளிக்குப் பதிலாக தக்காளி, வெங்காயம் சேர்த்து கூட்டு மாதிரி செய்தாள்.
"கையில சல்லிக் காசு இல்லாம, பேசக்கூட ஆளில்லாமப் போறப்பதான் உறவுங்க அருமை புரியுது… என்ன செய்ய?"
"உங்க உறவுல வேகுறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகுறது மேல்னு உன் மணவாட்டி மகனுங்ககூட போயிட்டா… கண் கெட்டப்புறம் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்பா…" என்றபடியே சாதத்தில், வெந்தயக்கீரைக் கூட்டைப் போட்டு தந்தாள் வாசம்பா. பசியால் மயக்க நிலையில் இருந்த கோனார், சாதத்தை வாயில் அள்ளிப் போட்டார். முகத்தில் சோர்வு நீங்கி தெம்பாய் நிமிர்ந்த கோனாரின் கண்களில் ஆறாகப் பெருகியது நீர்.
"தெனமும் வெந்தயத்தை ஊறவெச்ச மோரைக் குடி… காரத்தைக் கண்ணுலகூட பார்க்காத. நீ சாதத்தை மட்டும் ஆக்கிக்கோ. ஒருவாரத்துக்குக் கீரை, கொளம்பு, பொரியலை நான் கொடுத்தனுப்பறேன்." அம்மணி சொல்ல, வாசம்பாவும் தன் பங்குக்குப் பேசினாள்.
"வாதத்துக்குகூட மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தே இல்ல. நல்லபடியா உடம்பு தேறினதும், உன் பிடிவாதத்தை விட்டுப்புட்டு, புள்ளைகளோட போய்ச் சேர்… அதுதான் உனக்கு நல்லது" என்ற வாசம்பா, அம்மணி பக்கம் திரும்பினாள்.
"வெந்தயக்கீரை அத்தனை குளிர்ச்சியா அம்மணி?"
"ஆமா வாசம்பா… வாரத்துக்கு மூணு நாள் வெந்தயக்கீரையைச் சமைச்சு சாப்பிட்டாப் போதும். உஷ்ணத்துனால ஏற்படுற வயிற்றுவலி சரியாயிடும். குடிப் பழக்கத்துனால பாதிக்கப்படற கல்லீரல்கூட பலப்படும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து கொஞ்சம் சோம்பும் உப்பும் சேர்த்து அரைச்சு மோர்ல கரைச்சுக் கொடுக்க வயித்துப்போக்கும் குணமாயிரும்."
"வெந்தயத்துக்கு இத்தனை மகத்துவமா?"
"ராத்திரியில கொஞ்சம் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீர்ல ஊறவெச்சு, அந்தத் தண்ணியை காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, சர்க்கரை நோயோட வீரியம் குறையும்டி."
"அடிக்கிற வெயிலுக்கு கண்ட இடத்துல கட்டி வந்து அவஸ்தைப்படுதுங்களே… அதுக்கு வெந்தயத்துல வைத்தியம் இருக்கா அம்மணி"
"வெந்தயத்துக்கூட சமஅளவு சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைச்சு, நீர்ல குழைச்சுத் தணல்ல களி போல கிண்டி, கட்டி மேல வெச்சுக் கட்டினா, நல்லாப் பழுத்து உடைச்சிடும்."
"அடேடே…"
"அது மட்டுமா, வெந்தயத்தை ஊற வெச்சு அரைச்சு, பரு வந்த இடத்துல பூசினா உடனே சரியாயிரும். தலைக்குச் சீயக்காய் அரைக்கிறப்ப, வெந்தயத்தைச் சேர்த்து அரைச்சுத் தேய்ச்சுக் குளிச்சா, உடம்புக்கும் குளிர்ச்சி. முடியும் நல்லா வளரும்."
"நம்ம பார்வதிக்குப் பொம்பளப் புள்ள பொறந்திருக்கு… ஆனா, தாய்ப்பாலே இல்லியாம்… என்னாடி பண்ணுறது?"
"தாய்பால் வராத தாய்மாருங்க, அஞ்சு கிராம் வெந்தயத்தை நல்லா வேகவெச்சி, கடைஞ்சிக்கணும். இதுகூடத் தேனைக் கலந்து சாப்பிட்டுவந்தா, தாய்பால் நல்லா சுரக்கும்.'
பேசிக்கொண்டே வந்த அம்மணி சுடலைமுத்து தோட்டத்தில் பசுங்காடாக இருந்த கறிவேப்பிலைச் செடிகளைப் பார்த்ததும் வாசனையும் யோசனையுமாக வாசம்பாவை அருகே அழைத்தாள் அம்மணி. அப்புறம் என்ன… கறிவேப்பிலை  கச்சேரிதான்!



சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி –அரை கிலோ
வெந்தயம் —கால கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
:)

Tuesday, March 29, 2016

அஞ்சறைப்பெட்டி அருமருந்து

அஞ்சறைப்பெட்டி அருமருந்து
வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்!

'உணவே மருந்து; மருந்தே உணவு' என்று வாழ்ந்த பாரம்பர்யம் நமது. நம் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல. நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டில் தொடங்கி, மிளகு, கிராம்பு வரை ஒவ்வொன்றுமே உயிர் காக்கும் சஞ்சீவினிகள்!
பொதுவாக, மசாலா பொருட்கள் உடலுக்குத் தீங்கானவை என்று ஒரு பார்வை உள்ளது. எதுவுமே

அளவுக்கு மீறும்போதுதான் நஞ்சாகிறது. மசாலா பொருட்களை நேரடியாகச் சாப்பிட முடியாது. அதுபோலவே அவற்றை அடிக்கடி சாப்பிடவோ, தொடர்ந்து சாப்பிடவோ கூடாது. இவை வயிற்று மந்தத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை எதிர்க்கும் ஆற்றலைத் தரும் இந்த மசாலா பொருட்களை அறவே தவிர்க்கவும் முடியாது.
இன்று, சாம்பார் பொடி முதல், கரம் மசாலா வரை அனைத்துமே பாக்கெட்களில் வந்துவிட்டன. ஆனால், இயன்றவரை இந்த பாக்கெட் பொருட்களைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏனெனில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கவர்கள், செயற்கைப் பதப்படுத்திகள், ஒவ்வாமையை ஏற்படுத்தி நம்மை நோயாளிகளாக்கும் ஆபத்து உள்ளது. மசாலா பொருட்களைத் தனித்தனியாக தரமானதா எனப் பரிசோதித்து வாங்கி, முறையாக அரைத்துப் பயன்படுத்தினால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் முதல் அதிமதுரம் வரை நாம் சமையலில் பயன்படுத்தும் மணமூட்டிகள், சுவையூட்டிகள், மசாலா பொருட்களின் பலன்களைச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.

#மஞ்சள்
மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும், வீக்கம் குறையும்.
மஞ்சளில் பாலிபீனாலிக் கூட்டுபொருட் களால் ஆன குர்குமின் என்ற சத்து இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் மருந்துகள் தயாரிப்பில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. அல்சைமர் எனும் மறதி நோய் வருவதைத் தடுக்கும்.
மஞ்சளை உணவில் சேர்த்துவரும்போது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது, எழும்புகள் உறுதியாகும். ஆர்த்ரைடிஸ் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.
மிளகு
மிளகுக்கு, 'கறுப்புத் தங்கம்' என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது. 'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்ற பழமொழி இதன் நச்சு நீக்கும் தன்மையைச் சொல்லும்.
மிளகில், பைப்பரின் (Pipirine) எனும் சத்து உள்ளது. மிளகின் வாசனைக்கு இதுதான் காரணம்.
மிளகைக் காயகற்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகுக்கும் இடம் உண்டு.

தும்மல், மூச்சடைப்பு, உடல் பருமன் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகுப்பொடியை அப்படியே சமையலில் பயன்படுத்துவதே சிறந்தது. தினமும் மிளகைச் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாதம் சாப்பிடலாம். மிளகு சூப், மிளகு ரசம் மழை மற்றும் குளிர் காலங்களில் பருகலாம்.
மிளகு காரமானது. எனவே, அல்சர் இருப்பவர்கள் மிளகைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.

#சீரகம்
சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.
உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
பித்தத்தைச் சரிசெய்வதால், 'பித்த நாசினி' என சித்த மருத்துவத்தில் சீரகத்தைப் புகழ்கிறார்கள்.

200 கிராம் சீரகத்தில், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை விட்டு, நன்றாகக் கலந்து காயவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதை அரைத்துப் பொடித்துவைத்து, தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டுவந்தால் ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.
சீரகம், சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும். சீரகத்தை வறுத்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்க, உயர் ரத்த அழுத்தம் குறையும். இருமல், சளி நீங்கும்.

#கருஞ்சீரகம்
மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

#பெருங்காயம்
பெருங்காயம் ஒரு பிசின். இந்தியாவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக மருத்துவப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றில் ஏற்படும் உப்புசம், கெட்ட காற்று, செரிமானக் கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்யும். எனவேதான் நம் முன்னோர்கள், சமையலில் பெருங்காயம் சேர்த்துவந்தனர்.
வயிற்று வலி, மார்பு வலி போன்றவை ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில், கால் தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதவிடாய் வலிக்கு, பெருங்காயத் தூள் மற்றும் பனை வெல்லம் சேர்த்துத் தயாரித்த சிறு உருண்டைகளைச் சாப்பிட்டுவர, வலி குறையும்.
மோரில் எப்போதுமே சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது.
பருப்பு வகைகளைச் சமைக்கும்போது, பெருங்காயம் சேர்த்துச் சமைத்தால், வாதப் பிரச்னைகள் குணமாகும்.

#காய்ந்த மிளகாய்
பித்தம், கப நோய் போன்றவற்றைச் சரிசெய்யும். ஆனால், மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
50 மி.லி நல்லெண்ணையில், 10 காய்ந்த மிளகாய் சேர்த்து, நன்றாகச் சூடுபடுத்த வேண்டும். பின்னர், மிளகாயை நீக்கிவிட்டு, எண்ணெயை மட்டும் எடுத்து, தலைக்குக் குளித்துவந்தால் தலைவலி நீங்கும்.
அல்சர், அழற்சி, வாய்ப்புண் போன்றவை இருப்பவர்கள், காய்ந்த மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

மிளகாய் காரமானது என்பதால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, சமைக்கும்போது இரண்டு பங்கு தனியா (மல்லி) சேர்த்துச் சமைக்க வேண்டும். எனவேதான், நம் முன்னோர்கள் ஒரு பங்கு மிளகாய்ப் பொடிக்கு, இரண்டு பங்கு மல்லிப் பொடி சேர்ப்பார்கள்.
காய்ந்த மிளகாய் வலியை நீக்கும் தன்மை கொண்டது. புளிச்சகீரை போன்றவற்றில் மிளகாய் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம்.

#புளி
புளி, பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும்.
குமட்டல் இருக்கும் சமயங்களில் புளியைக் கரைத்து, வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து, தண்ணீரில் கலந்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் 'டார்டாரிக் அமிலம்' உள்ளது. அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும்.
பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது.
அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. சிலர், அடிக்கடி புளி சாதம் சாப்பிடுகிறார்கள், இது தவறு. மாதம் ஒரு முறை வேண்டுமானால் சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடக் கூடாது.

#கொடம் புளி
'மலபார் புளி' என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.
கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.

#கடுகு
கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும்.
கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும்.

உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும்.

#சோம்பு
சோம்புக்கு, பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு.
சோம்பை வறுத்து, தண்ணீர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மாதவிடாய் ஆரம்பித்த இளம்பெண்கள் சோம்பு நீர் அருந்துவது மிகவும் நல்லது.
சோம்பு, செரியாமைக்கு மிகவும் சிறந்த தீர்வு. சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

சோம்பை அப்படியே மென்று சாப்பிடலாம். பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய்கள் காரணமாக, வயிற்றில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்கவே, பிரியாணி சாப்பிட்ட பின்னர் சோம்பைச் சாப்பிடுகிறார்கள்.
10 மி.லி சோம்புத் தீநீருடன் (சித்த மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தினால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

#தனியா
தனியாவை, மல்லி, கொத்தமல்லி விதை என்றும் அழைப்பார்கள்.
தனியா, கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். எனவே, இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.
பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டைப்பாய்டு காய்ச்சல் இருக்கும்போது, தனியாவைப் பொடி செய்து, நீரில் கலந்து குடிக்கலாம்.

வாயில் கெட்ட நாற்றம் வீசினால், சிறிது அளவு தனியாவை எடுத்து, நன்றாக மென்று, வாய் கொப்பளித்தால், துர்நாற்றம் நீங்கும். வியர்வையை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.
கர்ப்பகாலங்களில் பல பெண்களுக்குத் தலைசுற்றல் பிரச்னை இருக்கும். கொத்தமல்லி விதையுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, விழுதுபோல (பேஸ்ட்) ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த விழுதுடன், ஒரு டம்ளர் தண்ணீர், தேன் சேர்த்துக் கலந்து குடித்துவந்தால், தலைசுற்றல் நீங்கும்.

#சுக்கு
இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படு வதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.
சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.
பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.
சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

#ஏலக்காய்
ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப் பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்ப

சீரகம்

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டையை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

 

Wednesday, March 23, 2016

கொள்ளூ அல்லது காணம்

கொள்ளு அல்லது காணம்

இதன் விதை குதிரைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவாகவும் பயன்படுத்துவர். கல்லடைப்பு, இருமல் போன்றவற்றை கொள்ளு குணப்படுத்தும். இதை உட்கொள்ள உடலில் தேவையில்லாத சதைகள் குறவைதுடன் உடல் மெலியும்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்!



உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்

ஓமம்


ஓமம்

இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன.

சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்

பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்

பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?

சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்

-அகத்தியர் குணபாடம்

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாமையைப் போக்கும் தன்மை கொண்டது.

உடல் பலம் பெற

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

வயிறுப் பொருமல் நீங்க

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
மந்தம்

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

சுவாசகாசம், இருமல் நீங்க

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம் - 252 கிராம்

ஆடாதோடைச் சாறு - 136 கிராம்

இஞ்சி ரசம் - 136 கிராம்

பழரசம் - 136 கிராம்

புதினாசாறு - 136 கிராம்

இந்துப்பு - 34 கிராம்

சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.

மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கிய மானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.

Friday, March 18, 2016

மிளகு

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்
வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.
மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
மிளகில் உள்ள சத்துக்கள்:
தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு
வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்
சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
FILEபற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .
பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.