"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Showing posts with label பாட்டி வைத்தியம். Show all posts
Showing posts with label பாட்டி வைத்தியம். Show all posts

Thursday, July 21, 2016

மருத்துவ குறிப்ப

தலைவலிக்கு

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

கைநடுக்கம் தீர

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

சூட்டுக்குத் தைலம்

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

உடல் எடை கூட

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

பசி உண்டாக

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

இரத்த விருத்தி

காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் சுத்த தேன் கலந்து பருகிவர புது இரத்தம் உண்டாகும்

பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இரத்தம் ஊறும்

தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்

சம அளவு பொன்னாங்கண்ணி கீரை,கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து,அதில் நெல்லியளவு எடுத்து பாலில் தினசரி இரவு அருந்தி வந்தால் இரத்த சோகை குறையும்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

உடல் குளிர்ச்சி பெற

நெருஞ்சில் விதை , கோதுமை , கொத்த மல்லி , சுக்கு, ஏலம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து சர்க்கரை சேர்த்து அருந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் .வள்ளைக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும் அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு காலை/மாலை 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வசம்பைக் கரியாக்கி தூளாக்கி துணியில் சலித்து, குளித்தவுடன் குழந்தையின் கால்களின் அடியில், தொப்புளை சுற்றி தடவிவர நோய் அணுகாது.

முகப்பரு குறைய

சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை தடவினால் முகப்பரு குறையும்.

வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

மூட்டு வலி

முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும். 

அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.

செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.

வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

தொப்பையை குறைக்க

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வந்தால் இவ்வாறு 40 நாட்கள் செய்ய வேண்டும்.                                                                                                                      

ஜலதோஷம்,மூக்கடைப்பு

உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலை ச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக

கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் .

முகத்தின் கருமை நீங்க

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன்,எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும். 

முகத்தில் கரும்புள்ளிகள் போக

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

பொடுகு

வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

தூக்கமின்மை குறைய

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட‌ தூக்கமின்மை குறையும்.

ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும். 

ஜாதிக்காய் பொடியுடன் ஒரு மேஜைக் கரண்டியளவு நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்.

கால் ஆணி

இஞ்சிச் சாற்றுடன் நீர்த்த சுண்ணாம்பை கலந்து போட்டு வந்தால் கால் ஆணி குறையும்.

கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் தேய்த்து இரவு அப்படியே கட்டிவிட கால் ஆணி குறையும்.

மருதாணி வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி குறையும்.

பித்த மயக்கம் குறைய‌

துத்திக் கீரையை சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்த மயக்கம், வாந்தி போன்றவை குறையும்.

புதினா இலைகளை நீரில் வேக வைத்து, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.

பசலைக்கீரை சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு ஊற வைத்து, பொடியாக்கி சாப்பிட பித்தம் குறையும்.

புளிச்ச கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

சங்கன் இலைப் பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.                         

அசீரணம்

கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுக்ள போன்றவை சரியாகும்.

நரைமுடி

வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
குறைபாட்டை நீக்கும் முறைகள்: 

1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.
உணவு:
இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.
பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.

ஆடு தின்னாப்பாளை!

வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
வேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.
ஆங்கிலப் பெயர்: Aristolochia bracteata, Retz, Aristolochiaceae. 
மருத்துவக் குணங்கள்:

ஆடு தின்னாப் பாளையின் இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)
ஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.
இதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.
ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.
இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.
ஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.
ஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.
ஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.


ஆண்மை அதிகரிக்க

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.


பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்

.முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். 

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகியநோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்

.முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.
இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.

முடி அடர்த்தியாக வளர

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்
கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும்


கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி நன்கு வளரும்.


இவை தவிர மேற்கூறிய கருவேப்பிலை, காரட், தேங்காய், நெல்லிக்காய் போன்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவாக உட்கொண்டால் இன்னும் பயனாக இருக்கும்.

Friday, May 6, 2016

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை


நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை.

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து

எளிய பாட்டி வைத்தியம்



எளிய பாட்டி வைத்தியம்
1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.


9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

11. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
50. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

15. மெலிந்த உடல் பருக்க

i. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

ii.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

iii. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

iv. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

v. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

vi. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

vii. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.


16. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

17. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

18. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

19. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

20. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

21. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

22. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

23. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

24. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

25. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
28. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

29. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

30. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

31. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

32. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

33. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

34. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

35. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

36. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

37. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

38. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

39. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

40. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

41. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

42. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

43. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

44. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

46. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

47. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

48. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

49. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

50. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

51. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

52. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

53. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

54. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

55. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

56. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

57. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

58. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

59. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

60. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

61. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

62. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

63. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

64. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

இருமல் , சளி ,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்



சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்




தொண்டை எரிச்சல்

எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.



இருமல்

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்

சளித் தொல்லை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ஜலதோஷம்

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.


சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

மார்புச் சளி

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.


தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர‌

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்

பாட்டி வைத்தியம்

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்(Grannytherapy)
பாட்டி வைத்தியம்:
முகம்பளபளப்பாக...வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம்ஆகியமூன்றையும்சேர்த்துவேகவைத்துவாரத்தில்
இரண்டுஅல்லதுமூன்றுவேளைசாப்பிட்டுவந்தால்உடல்குளிர்ச்சியடைவதோடுமுகம்
சுருக்கம்மறையும். மேலும்முகம்பளபளப்பாகமாறும். வாரத்தில்ஒன்றுஅல்லதுஇரண்டு
நாளாவதுஆரஞ்சுமற்றும்கேரட்ஜீஸ்குடித்துவந்தால்முகம்பொன்னிறமாகமாறும்.
தலைவலிகுறைய...1.மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை
ஆகியவற்றைஒன்றாகசேர்த்துஇடித்துப்பொடிசெய்துகொள்ளவேண்டும். அந்தபொடியை
காலை, மாலைஎனஇருவேளைஅரைதேக்கரண்டிஅளவுஎடுத்துதேனில்குழைத்துச்
சாப்பிட்டுவந்தால் தலைவலிகுறையும்.(or)
2. வெற்றிலையைசாறுஎடுத்துஅந்தசாற்றில்கிராம்பைஅரைத்துஎடுத்துஇரண்டுபொட்டுப்பகுதிகளிலும்கனமாகப்பூசிவந்தால்தலைவலிகுறையும்.
கண்வலிகுறைய...1.வில்வம்மரத்தின்இளம்தளிரைவதக்கிஇளஞ்சூட்டில்கண்ணில்ஒத்தடம்கொடுத்து
வந்தால்கண்வலிகுறையும்.(or)
2.கருவேலம்கொழுந்துஇலையுடன்சீரகத்தைசேர்த்துஅரைத்துவலியுள்ளகண்ணை
மூடச்செய்துஅதன்மேல்வைத்துபின்புஒருவெற்றிலையைஅதன்மேல்வைத்துசுத்தமானதுணியால்கட்டிவிடவேண்டும். இரவில்கட்டிகாலையில்அவிழ்த்துவிடவேண்டும்.
இவ்வாறுமூன்றுநரட்கள்செய்துவந்தால்கண்வலிகுறையும்.
சளிகுறைய...1.பூண்டு, தக்காளி, வெங்காயம்ஆகியவற்றைநன்றாகநசுக்கிதண்ணீர்விட்டுவேகவைத்து
சூப்செய்துசாப்பிட்டுவந்தால்சளிகுறையும்.(or)
2.வெற்றிலையைஇடித்துச்சாறுஎடுத்துக்கொள்ளவேண்டும். அந்தசாற்றைக்கொதிக்க
வைத்துபின்புஆறவைத்துநெற்றிபகுதியில்பற்றுப்போட்டுவந்தால்ஓயாதச்
சளிக்குறையும்.(or)
3.தூதுவளைச்சாறு, துளசிஇலைச்சாறுஆகியவற்றைஒன்றாகக்கலந்துவேளைக்குஒரு
அவுன்ஸ்வீதம்சாப்பிட்டுவந்தால்ஓயாதசளிக்குறையும்.
மூச்சுவாங்குவதுகுறைய...தும்பைஇலைச்சாற்றைமூன்றுதேக்கரண்டியளவுகாலைவேளையில்மூன்றுநாட்கள்
சாப்பிட்டுவாந்தால்மூச்சுவாங்குவதுகுறையும்.
காதுவலிகுறைய...1.கரிசலாங்கண்ணிசாறு, நெல்லிக்காய்சாறுஇரண்டையும்பால்மற்றும்அதிமதுரப்பொடி
சேர்த்துதைலம்செய்துதலைக்குதேய்த்துகுளித்துவரகாதுநோய்குறையும். கடுகை
அரைத்துகாதுக்குபின்புறம்பற்றுப்போட்டுவந்தால்குளிர்ச்சியினால்ஏற்படும்காதுவலி
குறையும்.(or)
2. கடுகைஅரைத்துகாதுக்குபின்புறம்பற்றுப்போட்டுவந்தால்குளிர்ச்சியினால்
ஏற்படும்காதுவலிகுறையும்.
ஒற்றைதலைவலிகுறைய...1.ஒற்றைதலைவலிஏற்படும்போது 1 டம்ளர்கேரட்சாறில்சிறிதுவெள்ளரிகாய்சாறுமற்றும்பீட்ரூட்சாறுகலந்துகுடித்துவந்தால்ஒற்றைதலைவலிகுறையும்.(or)
2.முட்டைகோஸ்இலைகளைநன்குநசுக்கிஒருசுத்தமானதுணியில்கட்டி, அதைக்கொண்டுதலையின்மீதுஒத்தடம்கொடுத்தால்ஒற்றைத்தலைவலிகுறையும்.(or)இலவங்கப்பட்டைதூளைஎடுத்துநீர்விட்டுகுழைத்துசிறிதுதலையில்தேய்த்துவிட்டுசிறிதுநேரம்கழித்துகுளித்துவந்தால்மூக்கடைப்புகுறையும்.(or)
3. திப்பிலி, கஸ்தூரிமஞ்சள், சந்தனம்மற்றும்படிகாரம்ஆகியவற்றைபசும்பால், இளநீர்விட்டுதனித்தனியாகமுறைப்படிஊறவைத்துஅரைத்துஒன்றாககலந்துஉருண்டையாக்கிகாயவைத்துஇடித்துசலித்துமுகர்ந்துவந்தால்மூக்கடைப்பு, மூக்கெரிச்சல்குறையும்.
பல்வலிகுறைய...1.ஆலமரப்பட்டையைமைபோல்இடித்துபொடிசெய்துவைத்துக்கொள்ளவேண்டும். அந்தபொடியைவெந்நீரில்போட்டுகொதிக்கவைத்துஅதனுடன்சர்க்கரைசேர்த்துமூன்றுமாதங்கள்சாப்பிட்டுவந்தால்பல்நோய்கள்குறையும்.(or)
2.பல்வலிஏற்படும்போதுசிறிதுமிளகுத்தூளில்கிராம்புஎண்ணெய்கலந்துவலிஇருக்கும்பல்லில்தடவிவந்தால்வலிகுறையும்.
தொண்டைப்புண்குறைய...மிளகுத்தூள்மற்றும்கிராம்புத்தூள்எடுத்துவிட்டுசூடேற்றிதேன்கலந்துகுடித்துவந்தால்தொண்டைப்புண்மற்றும்தொண்டைவலிகுறையும்.
இருமல்குறைய...1.வெங்காயத்தைபொடியாகநறுக்கிஅரைத்துமெல்லியதுணியில்வடிகட்டிக்கொள்ளவேண்டும். அந்தசாற்றில்சர்க்கரைகலந்துபாகுபதமாககாய்ச்சிஇறக்கவேண்டும். வெங்காயப்பாகைஒருவேளைக்குஒருதேக்கரண்டிவீதம்சாப்பிட்டுவந்தால்இருமல்குறையும்.(or)
2.மணத்தக்காளிஇலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம்ஆகியவற்றைஒன்றாகசேர்த்துஒருமண்சட்டியில்போட்டுசிவந்துவரும்வரைநன்குவறுத்துக்கொள்ளவேண்டும். அதில்ஒருலிட்டர்தண்ணீர்விட்டு 1/8 லிட்டராகச்சுண்டக்காய்ச்சிக்கொள்ளவேண்டும். இந்தகஷாயத்தைமூன்றுவேளையும்சாப்பிட்டுவந்தால்இருமல்குறையும்.
கண்பார்வைஅதிகரிக்க...1.கேரட், துவரம்பருப்பு, தேங்காய்ஆகியவற்றைசோ்த்துசமைத்துக்கொள்ளவேண்டும். அதைசாதத்தில்கலந்துசாப்பிட்டுவந்தால்கண்பார்வைஅதிகரிக்கும்.(or)
2.சீரகம், கொத்தமல்லிவிதைமற்றும்வெல்லம்ஆகியமூன்றையும்எடுத்துநன்றாகஇடித்துபொடியாக்கிசலித்துகொண்டுகாலை, மாலைஇந்தபொடியைசாப்பிட்டுதண்ணீர்குடித்துவந்தால்கண்பார்வைதெளிவாகும்.(or)
3.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.(or)
4.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
இடுப்புவலிகுறைய...1.உளுந்தம்பருப்புஉணவுவகைகளைஉணவில்சேர்த்துசாப்பிட்டுவந்தால்இடுப்புபகுதிநரம்புகள்பலப்படும்.(or)
2.இலுப்பைஎண்ணெயைவெதுவெதுப்பாகச்சூடுசெய்துஆறியபின்நன்றாகதடவிவெந்நீர்ஒத்தடம்கொடுத்துவந்தால்இடுப்புவலி, நரம்புத்தளர்ச்சிஆகியவைகுறையும்.
கழுத்துவலிகுறைய...1.நொச்சிஇலையைஇடித்துசாறுபிழிந்துஅதனுடன்சமஅளவுநல்லெண்ணெய்சேர்த்துகாயவைத்து, அதைவலிஉள்ளஇடத்தில்தேய்த்துவெந்நீரில்வாரம்இருமுறைகுளித்துவந்தால்கழுத்துவலிகுறையும்.(or)
2.குப்பைமேனிசாறுஎடுத்துநல்லெண்ணெயுடன்கலந்துகாய்ச்சிவலியுள்ளஇடத்தில்தேய்த்துவரகழுத்துவலிகுறையும்.
முதுகுவலிகுறைய...1.வெட்டிவேரின்புல்லைஎடுத்துகற்கண்டுசேர்த்துநன்றாகஅரைத்துபாலில்கலந்துகுடித்துவந்தால்முதுகுவலிகுறையும்.(or)
2. மிளகு, கிராம்புமற்றும்சுக்குசேர்த்துநீர்விட்டுதேநீர்செய்துதினமும் 2 வேளைகள்குடித்துவந்தால்முதுகுவலிகுறையும்.(or)
3.பூண்டைநல்லெண்ணெய்சேர்த்து,கொதிக்கவைத்துவடிகட்டிமுதுகுவலியுள்ளஇடத்தில்தேய்க்கமுதுகுவலிகுறையும்.
தலைமுடிவளர...1.சதைப்பிடிப்புள்ளமூன்றுகற்றாழையைஎடுத்துஅதிலுள்ளசதைப்பகுதியைஒருபாத்திரத்தில்வைத்துஅதன்மீதுசிறிதுபடிகாரப்பொடியைதூவிவைத்திருக்கவேண்டும். இப்பொழுதுசோற்றுப்பகுதியிலுள்ளசதையின்நீர்பிரிந்துவிடும். இவ்வாறுபிரிந்தநீருக்குசமமாகநல்லெண்ணெய்அல்லதுதேங்காய்எண்ணெயைகலந்துசுண்டக்காய்ச்சவேண்டும். காய்ச்சியஅந்ததைலத்தைதினசரிதலையில்தேய்த்துவந்தால்தலைமுடிநன்றாகவளரும்.(or)
2. வேப்பம்பூவைஇலேசாகதணலில்காண்பித்துதாங்கக்கூடியசூட்டில்வேப்பம்பூவைஉச்சந்தலையில்வைத்துதேய்த்துவந்தால்தலைமுடிநன்றாகவளரும்.
வாய்ப்புண்கள்குணமாக...மணித்தக்காளிஇலைகளைநெய்யிலிட்டுவதக்கிமசித்துஉணவில்சேர்த்துஉண்டுவரவாய்ப்புண், உட்காய்ச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்சூட்டைக்குறைக்க.....எள்எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்குஒருமுறைதலையில்தேய்த்துவெந்நீரில்குளித்துவரக்கண்கள்குளிர்ச்சியடையும்;தலைப்பாரம், உடற்சூடுஆகியனகுறையும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடற்பலம்உண்டாக...சிறுகீரையைஉணவுடன்சேர்த்துஉண்டுவரஉடற்பலம்உண்டாகும் (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்பருக்க...கல்யாணப்பூசணிக்காயைவேகவைத்துஅரைத்துப்பால்,தேன்,நெய்கலந்துலேகியமாக்கிவைத்துக்கொள்ளவேண்டும். இதை 5 முதல் 10 கிராம்தினம்இருவேளைஉண்டுவரஉடல்பருக்கும்; உடற்சூடுநீங்கும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்இளைக்க...சந்தனத்தைச்சீவிகுடிநீர்செய்துகுடித்துவரபருத்தஉடல்இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பசியின்மை, செரியாமைஆகியனதீர...தோல்நீக்கியஇஞ்சியைசிறுசிறுதுண்டுகளாகநறுக்கிச்சுத்தமானதேனில்ஊறவைத்துத்தினம்இரண்டுதுண்டுகள்மட்டும்உணவிற்குமுன்உண்டுவரப்பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுப்புழுக்கள்நீங்க...சுண்டைக்காயைமோரில்ஊறவைத்துவெயிலில்காயவைத்துச்சுண்டைவற்றலாக்கிச்சூரணித்து 1 முதல் 2 கிராம்வெந்நீருடன்தினமும்இருவேளைஉட்கொள்ளவயிற்றுப்புழுக்கள்வெளிப்படும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுவலி, கண்ணெரிச்சல்தீர...அதிமதுரத்தைஒன்றிரண்டாகஇடித்துவிதிப்படிக்குடிநீர்செய்துஅத்துடன்தேவையானஅளவுசர்க்கரை, பால்ஆகியனசேர்த்துத்தீப்பிடிக்காமல்பாகுபதம்வரும்வரைகாய்ச்சிவைத்துக்கொள்ளவும். இரண்டுதேக்கரண்டிதினம்இருவேளைஉண்டுவரநீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்றுவலி,பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
புண்கள்குணமாக...இலுப்பைப்பிண்ணாக்கைஇடித்துச்சூரணமாக்கிவைத்துக்கொண்டுஇளவெந்நீரில்குளித்து, இச்சூரணத்தைத்தேய்த்துக்கழுவ, அழுகிய, நாட்பட்டசீழ்கோர்த்தபுண்கள்குணமாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்அரிப்பு, சொறி, சிரங்குஆகியனநீங்க...குப்பைமேனிஇலைச்சாற்றுடன்மஞ்சள்சேர்த்துஉடலில்பூசிவரஉடல்அரிப்பு, சொறி, சிரங்குஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
இளநரைமாற...மருதோன்றி(மருதாணி) இலையைநீர்விட்டுஅரைத்துக்கற்கமாக்கித்தேங்காய்எண்ணெயில்இட்டுவெயிலில்வைத்து, ஈரம்வற்றியபின்வடித்துத்தலையில்தடவிவரஇளநரைமாறும், கண்குளிர்ச்சியடையும், நல்லதூக்கம்உண்டாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்'என்னும்நூலிலிருந்து)
முடிவளர...1.சடாமஞ்சிலைத்தேங்காய்எண்ணெயில்கலந்துதலையில்தேய்த்துவரகூந்தல்வளரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்'என்னும்நூலிலிருந்து).(or)
2. வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே. கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
சொத்தைப்பல்குணமாக...கண்டங்கத்தரிப்பழவிதையைக்காயவைத்துஅனலில்இட்டுவரும்புகையைவாயில்படும்படிசெய்யசொத்தைப்பல்குணமாகும்;பல்வலிகுறையும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பொடுகுகுணமாக, முடிஉதிர்வதைக்கட்டுப்படுத்த...பொடுதலைஇலைகளைநல்லெண்ணெயில்இட்டுவெயிலில்வைத்துஈரம்வற்றியபின்வடித்துத்தினமும்தலையில்தேய்த்துவரபொடுகுகுணமாகும்; முடிஉதிரல்கட்டுப்படும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பற்களின்கறைநீங்க...நாயுருவிவேரைச்சூரணம்செய்துவைத்துக்கொண்டுபல்துலக்கிவரப்பல்துப்புரவாகும்; பற்களின்கறைநீங்கும்; 1/2 முதல் 1 கிராம்வரைஉண்டுவரஉடல்வலுவாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
மூக்கடைப்புசரியாக...ஓமத்தைஇலேசாகவறுத்துப்பொடிசெய்து 2 கிராம்எடுத்துஅத்துடன் 1 கிராம்பச்சைக்கற்பூரம்சேர்த்துவெள்ளைத்துணியில்கட்டிநுகர,மூக்கடைப்பு, மூக்குநீர்பாய்தல், பீனிசம்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
முகப்பரு, கால்ஆணி, பித்தவெடிப்புசரியாக...1.அம்மான்பச்சரிசிச்செடியைநன்குகழுவிநீர்விட்டுஅரைத்து 20 கிராம்பாலில்கலக்கி, தினம்இருவேளைபருகிவரதாய்மார்களுக்குப்பால்சுரக்கும்; முகத்தில்பூசிவர, முகப்பரு, எண்ணெய்ப்பசைஆகியவைமாறும்; காலில்பூசிவரக்காலாணி, பித்தவெடிப்புஆகியனதீரும்; மருக்கள்மீதுபூசஅவைஉதிரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)(or)
2. சின்னவெங்காயத்தைஎடுத்துபாலில்வேகவைத்துமையாகஅரைத்துபருக்கள்மீதுதடவிவந்தால்பருக்கள்குறையும்.
விடியற்காலையில்நீர்அருந்துதல்....துளசி, வில்வம், அருகம்புல்ஆகியஏதாவதுஒன்றினைஎடுத்துஇரவில்ஒருலிட்டர்நீரில்ப