"வர்மக்கலை அடிமுறை ரகசியம்"
'கொண்டக்கொல்லி வர்மம்'
வகையான தலைமுகிந்த கொண்டக் கொல்லி
வகுப்பாக கொண்டிடுகில் குணத்தைக்கேளு
துகையான கொண்டையது குழைந்து போகும்
தோகையரே ஸ்திரீபோகம் விழுந்து போகும்
பகையான சன்னி சீதங்கள் வந்து
பழிகேடு செய்திடுமே பாங்காய்க் கொண்டால்
தகையான பெரியோர்கள் வந்திட்டாலும்
தப்பாது மரணம்வரும் சார்ந்து கேளே.
பொருள்:-
சரியாக உச்சி நடுவில் கொண்டைகொல்லி வர்மம்.முறையாக அதில் தட்டோ,முட்டோ,அடியே பட்டால் தலை நிமிர்ந்து நிற்காது.லிங்கம் தளர்ந்து போகும்.உயிர்க்குப் பகையான சன்னி,குளிர்ச்சி இவை ஏற்பட்டு மரணமும் ஏற்படலாம்.மாசறக் கற்ற பெரியோர்கள் வந்து சிகிச்சை செய்தாலும் மரணம் வரும் என்பதை மேற்சொன்ன குறி குணங்களால் அறிந்துகொள்.