"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, March 29, 2016

இரத்தஓட்டம் அதிகரிக்க

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள் - இயகை மருத்துவம்

உங்களுக்கு அடிக்கடி கால் மரத்துப் போகிறதா? குறிப்பாக இந்த பிரச்சனையை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் சந்திப்பார்கள். அதிலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தாலோ மரத்துப் போகும். இதற்கு காரணம், உடலின் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் இரத்தம் சரியாக வழங்காதது தான்.

பொதுவாக உடலில் கைகள், பாதம், விரல்கள், கால்கள் போன்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் தான் இந்த பிரச்சனை ஏற்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரக பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

க்ரீன் டீ :-

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள். ஏனெனில் அதில் உள்ள எபிகேலோகேட்டசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி உடல் முழுவதும் பாய உதவுகிறது

ரோஸ்மேரி :-

நறுமணமிக்க ரோஸ்மேரி மூலிகை, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்கு இதனை உலர்ந்த வடிவத்திலோ அல்லது பிரஷ்ஷாகவோ உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மிளகு :-

பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரத்திற்கும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதிலும் இதனை அன்றாடம் ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக பாயும்.

தக்காளி:-

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் சீராக்குகிறது.

இஞ்சி :-

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

பூண்டு :-

பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

வெங்காயம் :-

வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

நட்ஸ் :-

நட்ஸில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்து வளமாக நிறைந்துள்ளது.

ரன்னிங் :-

நாம் ஓடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற பலரும் கேட்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் ரன்னிங் மேற்கொண்டால், உடலில் இரத்த சுழற்சி அதிகரிக்கும். அதிலும் தினமும் தவறாமல் 20 நிமிடம் ரன்னிங் மேற்கொள்ள வேண்டும். மேலும் நாளுக்கு நாள் ஓட்டத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.