கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பில் 1985 ல் மார்ச் 7ல் டாக்டர் ஜே.அன்பழகன் ஆர்ஐஎம்பி, ஏ.தேன்மொழி ஆகியோருக்கு இரண்டாவது மகனாய் பிறந்தேன்.சேத்தியாத்தோப்பில் அரசு பள்ளியில் தொடக்க கல்வி முடித்து , சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி முடித்தேன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருந்தாற்றியல் (டிபார்ம்) முடித்தேன்.பின்பு வேலூர் மாவட்டம் போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் (பிஇகெச்எம்எஸ்) அதாவது(எலக்ட்ரோ கோமியோபதி) முடித்துவிட்டு 2007ல் ஆம் ஆண்டு என்னுடைய பொது சேவை தொடங்கி தொடர்ந்து செய்து வருகிறேன்.
எனது தந்தையார் உயர்திரு டாக்டர் ஜே.அன்பழகன் ஆர்ஐஎம்பி, அவர்கள் சேத்தியாத்தோப்பில் கிளினிக் நடத்தி வந்தார். பல வித இன்னல்களால் தற்கொலைக்கு முயலும் விஷ மருந்து குடித்து தற்கொலைக்கு செல்பவர்களை சிறப்பாக காப்பாற்றி விடுவதில் கைதேர்ந்தவராக இருந்து வந்தார். ஆனால் அவரிடம் உள்ள துரதிஷ்டம் அவர் தினமும் மதுவுக்கு அடிமையாகிய நிலையில் வாழ்ந்து வந்தார்.அவர் மது குடித்திருந்தாலும் தன்னுடைய கிளினிக்கில் வைத்தியம் செய்யும்போது வெற்றிகரமாக செய்துவந்தவர். எதிர்பாராமல் ஒரு நாள் மதுவோடு உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்ல பேருந்தில் முன் படிக்கட்டில்தொங்கிகொண்டு சென்றவர் நிலை தடுமாறி பேருந்திலிருந்து விழுந்து பின்சக்கரம் ஏறி அவ்விடத்திலேயே உயிரைவிட்டார்.(1997).
அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன். இதனால் பல இன்னல்களை அனுபவித்து வந்தேன்.எனது உடன் பிறந்தோர் இருவர்.ஒரு அண்ணன், ஒரு தங்கை.இருவருமே மருத்துவ துறையில் இருக்கிறார்கள்.இதில் எனது அண்ணன் எனது தந்தையை போலவே மதுபோதையில் சில வருடங்களுக்கு முன்பு தன்னுயிரை மாய்த்துகொண்டார்.இதற்கு பிறகுதான் இனியாரும் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டதைபோல மதுவால் சீரழியக்கூடாது என்று அன்பு மருத்துவ அறக்கட்டளை என்பதை கடந்த 2013 ஆம் ஆண்டு துவக்கி என்னால் முடிந்தளவு போதையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிசெயல்பட்டு வருகிறேன்.இந்த போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தின்மூலம் சமூகத்தின் எளிய மக்கள் மற்றும் போதையினால் பாதிக்கப்பட்வர்களை காப்பாற்றுவதே எனது லட்சியம்.அதற்கு உங்களது ஆதரைவையும்கோருகிறேன்.
இப்படிக்கு நிர்வாகி
ஆனந்தபாபு