வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்சிறப்பு
குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால்உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூடத் தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவதுறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது.[1] 19 ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலும், மது சார்புள்ளமை என்ற நோய்டிப்சொமேனியா (மதுப் பித்து) என்று அழைக்கப்பட்டது; பிறகு அச்சொல்குடிப்பழக்கம் என்ற சொல்லால் மாற்றியமைக்கப் பெற்றது.[2] 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்புஇதனை மது சார்பு கூட்டறிகுறி எனக் குறிப்பிடலானது.[3]
குடிப்பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உயிரியல் கோட்பாடுகள் உறுதியற்றதாக இருப்பினும் சமூகச்சூழல், மனத்தகைவு[4], மன நலம்,மரபியல் முற்சார்பு, வயது, இனம்,பாலினம் ஆகியவை வாய்ப்பு அளிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.[5][6]நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை மற்றும் பொருண்மச்சார்பு போன்ற உடலியக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால்மூளையில் ஏற்படும் வேதியியல்மாற்றங்கள் விடாப்பிடியான மதுப்பழக்கத்தை வலுப்படுத்துவதோடு மது குடிப்பதை நிறுத்தும்பொழுது, மது நிறுத்த நோய்க் கூட்டறிகுறி ஏற்படுகிறது.[7] மது மூளை உட்பட, நமதுஉடலில் இருக்கும் ஏறத்தாழ அனைத்துஉறுப்புக்களையும், சேதமடைய வைக்கிறது; கடுமையான, தொடர் மது அருந்தும் பழக்கம் காரணமாக உடலில்நச்சுத்தன்மை ஏறிக்கொண்டே சென்று மது அருந்துவோர் பல விதமான மருத்துவ மற்றும் மன நல சீர்கேடுகளுக்கு ஆளாகிறார்கள்.[8]குடிப்பழக்கம் காரணமாக மதுப் பழக்கம் கொண்டவர்களுக்குச் சமுதாயத்திலும், அவர்களது குடும்ப மற்றும் நண்பர்களிடையேயும் அதீதமான பாதிப்புகள் ஏற்படும்.[9][10]
குடிப்பழக்கம் என்பது சகிப்புத்தன்மை, நிறுத்தம், பின் மிகையான குடியென மீள் சுற்றாகத் தொடர்வது; குடியின் கேடுகள் அறிந்திருந்தும் அதனை விட முடியாதிருப்பது, அளவைக் கட்டுப்படுத்த இயலாமை ஆகியவை மூலம் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதை அறியலாம்.[11]குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களையும் அவர்களது தன்மைகள் குறித்தும் அறிய கேள்வித் தொகுதிகள் பயனாகின்றன. .[12] ஒருவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மது நச்சு முறித்தல் மருத்துவமுறை முயல்கிறது; பொதுவாக எதிர் சகிப்புத்தன்மையுடன் கூடிய, எடுத்துக் காட்டாக 'பென்ஸோடியாஸெபைன்' வகையைச் சார்ந்த தூக்கமருந்துகளால்நிறுத்தல் விளைவுகளை மேலாண்மை செய்வதாகும்.[13] மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, குடிப்பழக்கத்திற்கு மீளாதிருக்க குழு மருத்துவம், அல்லது சுய உதவிக் குழுக்களின் உதவி போன்றவை தேவையாகும்.[14][15] சில நேரங்களில், மது அருந்துவோர் பிற மருந்துகளுக்கும் அடிமையாக இருக்கலாம், குறிப்பாகப் பென்ஸோடியாஸெபைன் வகைமருந்துகள். அவ்வாறாயின் கூடுதலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.[16]மது அருந்தும் பெண்கள், ஆண்களைவிட, மது சார்ந்த அதன் தீய பாதிப்புகளுக்கு அதாவது உடல் ரீதியான, மூளை பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு மற்றும் சமூகத்தில் அவரைப் பற்றிய தவறான மதிப்பீடுகள் போன்ற இடர்களுக்குக் கூடுதலாக ஆட்படுவர்.[17][18] உலக அளவில் சுமார் 140 மில்லியன் குடிகாரர்கள் இருப்பதாகஉலக சுகாதார அமைப்புமதிப்பிட்டுள்ளது.