"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, May 6, 2016

அனுபவ வைத்தியம்


அனுபவ வைத்தியம் - 1


வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .

இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம் .

வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம் ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.


அனுபவ வைத்தியம் - 2

நவீன உணவு கலாச்சாரம் அடிக்கடி ஓட்டல் சாப்பாடு போன்றவற்றால் செரிமானமின்மை புளித்த ஏப்பம் ,குமட்டல், பசிஇன்மை,போன்றவற்றை ஏற்படுத்துகிறது .அதற்கு என்று மாத்திரைகளை நாட வாலுபோயி ... கத்திவந்தது டும்...டும்....என்பது போல புதிய தொந்தரவுகள் இதற்கு எளிமையான மருந்து இஞ்சி.

100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி மெல்லியதாக நறுக்கவும். அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு இஞ்சி நனையும் வரை எலும்பிச்சை சாறு விடவும். சிறிது உப்பு போட்டுக் கிளறி வெயிலில் வைக்கவும் .(இந்துப்பு சேர்த்தால்கஊடுதல் நலம் ) சாறு சுண்டி உலர்ந்ததும் நன்கு காயவைதுப் பத்திரப் படுத்தவும்.

மேற்படி தொந்தரவு ஏற்படும் போது சிறிது வாயில் அடக்கிக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும் .


அனுபவ வைத்தியம் -3

மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்கும் தருணம்.இந்த பருவ நிலை மாற்றத்தின் பொது அதிகம் தாக்கும் நோய் வயிற்றுப்போக்கு .இதைக் காலரா என்றும் சொல்வதுண்டு.

இது மிகவும் கொடுமையான வியாதி.நீர்சத்து இழப்பால் பெரும் பதிப்பு ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து. அதே சமயம் துரித நிவாரணம் தருவது புளியம்பட்டை. முற்றிய புளிமரத்துப் பட்டையை நாலு விரக்கடை அளவு வெட்டி எடுத்து அடுப்பில் போட்டு நன்கு எரிக்கவும். தணலாக மாறியபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மூடிவிடவும்.சூடு ஆறியபின் திறந்தால் சாம்பலாக இருக்கும்.அதை தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட நன்கு குணம் தெரியும். ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு இரண்டுசிட்டிகை மருந்தை சிறிது தேனும் வெந்நீரும் கலந்து சங்கால் புகட்டலாம் .

அதன் கூடவே உப்பு -சர்க்கரை `கலந்த வெந்நீரை அடிக்கடிக் கொடுத்து வர நீர்சத்து இழப்பு சமன் செய்யப்படும் .

அனுபவ வைத்தியம் -4

சிறுநீரகக்கல்

தற்போது அனைவரையும் வாட்டும் நோய் இதற்குப் பலகாரணங்கள் உண்டு. முக்கியமாகக் குடிநீர் குறைபாடுகள். குடிநீர் சுத்திகரிப்பிற்காகப் பல கருவிகள், பாட்டில் குடிநீர் என பலதீர்வுகள் இருந்தாலும் சரியான தீர்வு அனைவரையும் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கு என்னதான் தீர்வு?

வாழைத் தண்டு! இதை இடித்து சாறு பிழிந்து அருந்தி வர கல் கரையும். இதை அனைத்து மருத்துவ முறைகளுமே ஏற்றுக் கொள்கின்றன. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி குடல் சுத்திகர்ப்புக்கு வழி வகுக்கும்.

வாழைத் தண்டை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டுவர சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். பொரியல்-கூட்டு-பச்சடி-சாம்பார் எனப் பல ஐட்டங்கள் மாற்றி மாற்றி செய்து சாப்பிடலாம். உணவையே மருந்தாக்கி உடல் நலம் காக்கணும்.

அனுபவ வைத்தியம் -5

உடல் வெப்பம்!

இது அதிகரித்தால் வயிறுவலி - வாய்ப்புண் - கண் எரிச்சல் முதலியவை தலைதூகும். இதற் அற்புத நிவாரணி அகத்திக்கீரை!

அகத்தீ எனப்படும் உட்கட்டைத் தணிப்பதால் இதற்கு அகத்தீ என்ற காரணப்பெயர். இதைப் வொரியல் கூட்டு - சூப் செய்து சாப்பிட வயிற்று வலி வாய்ப்புண் குணமடையும்.

அக்கி எனப்படும் சிரங்கு வந்தால் அகத்திக்கீரையை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பூசி வர அக்கித் தானே காய்ந்து உதிர்ந்து விடும்.

இதன் சாறும் தேங்காய் எண்ணையும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத்தடவிவர கூந்தல் செழித்து வளரும். குறிப்பாக இளநரை மறையும். மூளை உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மண்டையில் ஏற்படும் கொதிப்பு அதன் காரணமாக ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும்.

இது அதிக சத்து உள்ளது. எனவே தான் ஏகாதசி அன்று பட்டினி கண் விழிப்பு செய்து மறுநாள் பாரணை செய்து விரதம் முடிக்கும் போது கட்டாயமாக அகத்திக்கீரையும் நெல்லிக்காயும் உணவில் சேர்ப்பது வழக்கம். பட்டினி கிடந்தகுடலின் உஷ்ணத்தைத் தணிக்கவும் முதல் நாள் பட்டினியால் ஏற்பட்ட சத்து இழப்புகளை ஈடுகட்டவும் இந்த ஏற்பாட்டினை நம் முன்னோர் கடை பிடித்தனர்.

அனுபவ வைத்தியம் -6

சூடு
உடம்பில் சூடு அதிகம் ஏற்பட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் வேக்காளம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் குறிப்பாக மூளையை அதிகம் பயன்படுத்தும் அலுவல் இருப்பவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் இதற்கு அற்புத நிவாரணி மணத்தக்காளி.

இந்தக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில் பானம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் கிட்டும். கீரையை வெற்றிலைப் பாக்குபோல் வெறும் வாயில் குதப்ப வாய்ப்புண் தீரும். கூட்டு செய்யலாம், இதன் காயை வற்றல் செய்து சாப்பிட இதய வலி குறையும், இந்த வற்றல் மிளகாய் இரண்டையும் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு சாதத்தில் எண்ணை விட்டுக் கலந்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலி குறையும். இதைப் பூண்டு சேர்த்துக் குழம்பு செய்து சாப்பிட நல்ல செரிமாணம் ஏற்படும். பசியைத் தூண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடக் கொடுத்தால் மூளைச் சூடு குறைந்து படிப்பில் நல்ல தெளிவு ஏற்படும்.

சளி
சளி பிடித்தால் சனியன் பிடித்ததுபோல என்பது பழமொழி. அதுவும் நெஞ்சுச் சளி என்றால் மிகவும் தொல்லை, இருமல், சுசாசிப்பதில் சிரமம் கூடவே மலச்சிக்கல்.

இதற்கு அற்புத நிவாரணி ஆடு தொடா இல்லை - ஆடு தொடா இலைக்கு வாசிகா என்று வடமொழியில் பெயர். சித்தமருத்துவத்தில் தெற்குத்தனி இடம் உண்டு. வாசாவா வாசகாகிஷ்டம் போன்ற மருந்துகளின் மூலப்பொருள் ஆடாதோடை தான்.

இதன் துளிர் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தி வர சளி தொல்லை நீங்கும். இதன் வேரை இடித்து சலித்து வைத்துக் கொண்டு சிறிதளவு எடுத்துத் தேன்விட்டுக் குழைத்துச் சாப்பிட துரித நிவாரணம் கிட்டும், சிறுவர் முதல் முதியவர் வரை தேனைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரிக்காம்ப்ளக்ஸ் அதாவது டி.வி.யின் ஆரம்பநிலை. இதற்கும் ஆடு தொடா இலை - வேர் அத்தனையும் சிறந்த மருந்து ஆகும்.

நோய்க்கு ஏற்ப ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். நிச்சயம் குணம் கிட்டும்.

அனுபவ வைத்தியம்-7

காய்ச்சல் வந்தபின் இருமல் வருவது வழக்கம். காய்ச்சல் வரும்முன்னே இருமல் வரும் பின்னே என்று புதுமொழி கூறலாம். இருமும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படுதித் தர்ம சங்கட நிலை. இதற்கு நிவாரணம் மா இலை. முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.

மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.

இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன் கலந்த நம் முன்னோர் எத்தனை சிறந்த அறிஞர்கள்.

அனுபவ வைத்தியம்-8

உடலில் பித்தம் - வாதம் - கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாகத் திகழும். ஏதாவது ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ வியாதிதான். பித்தம் அதிகரிக்கும் போது உபரியாக சுரக்கும் பித்த நீர் பித்தப் பையிலேயேத் தங்கினால் கற்களாக மாறும். குடலில் தேங்கினால் குடற்புண் ஏற்படும். இது தீவிரமாக மாறி புற்று நோயாக மாறும் அபாயமும் ஏற்படும். எனவேதான் பழங்காலத்தில் பேதி மருந்து சாப்பிடும் முறை இருந்தது. இது அதிகப்படி கபம் - வாயு - பித்தம் ஆகியவற்றை வெளியேற்றிவிடும். அது தற்போது சாத்தியமும் இல்லை. எனவே இதற்கு என்னதான் வழி?

நூறு கிராம் இஞ்சியை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கவும், அத்துடன் பத்து கிராம் இந்துப்பு சேர்த்து கலக்கவும். அதன்மீது நான்கு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வெயிலில் வைக்கவும். நீர் சுண்டி ஊறுகாய் பதத்தில் வந்ததும் பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிது சாப்பிட பித்தம் காரணமாக ஏற்படும் உபாதைகள் குறையும்.

அனுபவ வைத்தியம்-9

கோடையின் வெப்பம் ஆரம்பித்துவிட்டது. உடல் சூடு, கண் எரிச்சல், வயிற்றில் வலி என பல வெட்கை நோய்கள். இதைக் கட்டுப்படுத்துவது சோற்றுக் கற்றாழை.

இதைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் களிக்க மூளையில் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோ கலந்து உள்ளுக்கு சாப்பிட குடல் சூடு, மூலம், உடல்