![]() |
![]() |
Add caption |
எழுத்தாணிப் பூண்டு, முத்தெருக்கன்
English : Launaea sarmentos
தமிழ் : எழுத்தாணிப் பூண்டு, முத்தெருக்கன்
மருத்துவ பயன் தரும் பாகங்கள் : செடியின் இலை மற்றும் வேர்
இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.
- நிலக் கடம்பு மூலிகை
ஆங்கில பெயர் : Asarabacca, Asara, Asarabácara, Snakeroot, Wild Ginger, Wild Nard
தாவரவியல் பெயர் : Asarum europaeum,
தமிழ் பெயர்கள் : நிலக்கடம்பு, மிட்டிருக்கன் செவி, நிலக் கடம்பு
நிலக் கடம்பு
நிலக்கடம்பு மலர்
நிலக்கடம்பு தாவர வரைபடம்
பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் தமது பாடலில் கூறியுள்ளார்.
"தேரையர் பாடல்"
"தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே"
தேரையர் பாடல் விளக்கம்
மார்பக வளர்ச்சி அற்ற பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களின் மீது தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிமார்பக வளர்ச்சிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும். மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை எடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துத்தில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி பெற்று உடல் மிக அழகாக ஆகும் என்கிறார் தேரையர்.
நிலக்கடம்பு மருத்துவ பயன்கள்
மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சு பிடிப்பு, மூச்சுக்குழாய் ஆஸ்த்துமா, நிமோனியா, நெஞ்சு வலி, ஒற்றைத் தலைவலி, கல்லீரல் நோய், நீர்ப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன் படுத்தப்படுகிறது.