கொலஸ்ட்ராலை குறைக்கும் "நட்ஸ் பிரியாணி"
கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ்.
சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
குறிப்பாக தினமும் 15- 20கிராம் வரை சாப்பிடலாம்.
பாஸ்பரஸ், தாது உப்புக்கள் அதிகம் நிறைந்துள்ள பாதாம் பருப்பை உட்கொண்டால் ஜீரண சக்தியை அதிகரித்து செரிமானத்தை துரிதப்படுத்துகிறது, இதயத்தின் நண்பனான பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
இப்படி பல்வேறான மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் மற்றும் முந்திரியை வைத்து சுவையான பிரியாணி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
முதலில் பாசுமதி அரிசியை (250 கிராம்) 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி (ஒரு சிறிய துண்டு), பூண்டு (8- 10பல்), மிளகாய் தூள்- தனியா தூள் (தேவையான அளவு), சோம்பு- பட்டை- கிராம்பு- ஏலக்காய் (தேவையான அளவு), தேங்காய் துருவல் (2 டீஸ்பூன்) போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் (ஒன்று), தக்காளி (இரண்டு) பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் இதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை போட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் நெய்யில் பொன்னிறமாக வறுத்த பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து கிளறினால் சுவையான பிரியாணி ரெடி.
பாதாம் மட்டுமின்றி உங்களுக்கு தேவையான நட்ஸ் வகைகளும் சேர்த்து பரிமாறலாம்!!!