சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்!
அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.
குழந்தைகள் பீட்ரூட்டை சாப்பிட மறுத்தால், அதனை கொண்டு விதவிதமான ரெசிபிக்கள் செய்து கொடுங்கள்.
பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 சதவீதம், புரதம் 17, கொழுப்பு 0.1, தாதுக்கள் 0.8, நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் 0.8 சதவீதமும், கால்சியம் 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 5.5, இரும்புச்சத்து 10, விட்டமின் 'சி' 10 மில்லி கிராமும் உள்ளன.
மருத்துவ பயன்கள்
பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.
அதோடு, விட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.
பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
பீட்ரூட் சாதம்
வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயைபொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகுபோட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்பு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டைநன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும்போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
பின்னர் கறிவேப்பிலை சேர்த்துபிரட்டி அடுப்பை அணைக்கவும்.
பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதேஅதில் சிறிது சிறிதாக சாதத்தைசேர்த்து நன்கு பிரட்டி விடவும்.