"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, July 21, 2016

ஆரோக்கியப்பச்சா


ஆரோக்கியப்பச்சா

 
ஆரோக்கியப்பச்சா


மூலிகையன் பெயர் –: ஆரோக்கியப்பச்சா.

தாவரவியல் பெயர் – TRICHOPUS ZEYLANICUS.

தாவரக்குடும்பம் –: TRICHOPODACEAE.

பயன் தரும் பாகங்கள் –: இலை மற்றும் பழம்..

வளரியல்பு –:ஆரோக்கியப்பச்சா ஒரு சிறு மூலிகைச் செடி.இதில் இரு வகை மட்டும் உள்ளது.இலைங்கையில் இதற்கு வேறு பெயரில் அழைப்பர்இதன் இலை20 செ.மீநீள்ளது.இதன் இலைகள் மனிதனின் இதைய வடிவில் அமைந்திருக்கும்.இலைகள் இடத்திற்குத் தக்கவாறு மாறுபடும்.இது மணற்பாங்கான இடத்தில்,ஆற்றுப்படுகைகளில் நிழலில் வனங்களில் நன்கு வளரக்கூடிய மூலிகைச் செடிவருடம் முழுதும் பூக்கள் இருக்கும். பழங்கள் விடும்அதிகம் பழுத்தால் தண்ணீரில் மிதந்து செல்லும்பூக்கள் கரு நீலத்தில் தென்படும்.இலங்கையில் வெண்மையாக இருக்கும்.இதன் தாயகம் இந்தியா.ஆரோக்கியப்பச்சா மலேசியாசங்கப்பூர்,இலங்கை தாய்லேண்டு மற்றும் தென் இந்தியாவில் தென் மேற்கு மலைத் தொடரில் கேரளாவில் அகஸ்தியர் மலையில் காணி என்ற மலைவாழ் மக்களால் தொன்று தொட்டு மூலிக்கையாகப் பயன் படுத்தி வருகின்றனர்.விஞ்ஞானிகள் 1987 ல் தான் அது பற்றி ஆய்வு செய்துள்ளனர் அந்த மலைவாழ் மக்கள் அந்த மூலிகையை'ஆரோக்கியப்பச்சாஎன்று குறிப்பிட்டனர்அதற்குப் பொருள்'சக்தியைக்கொடுப்பது'என்று சொன்னார்கள்.இது இனவிருத்தி செய்ய விதை மூலமும்,பக்கக்கிழங்குகள் மூலமும் செய்யப்படுகிறது.வியாபார ரீதியாக கிழங்குகள் மூலமாதத்தான் செய்கிறார்கள்திசு வளர்ப்பு முறையிலும் முயற்சி செய்துள்ளனர்.

ஆரோக்கியப்பச்சாவின் மருத்துவ குணங்கள் ஆரோக்கியப்
பச்சா ஒரு வித சக்தியைக் கொடுக்கிறது.மனிதர்களின் 

எடையைக் குறைக்க இதைப்பயன்படுத்துகிறார்கள்இது ஈரல் 

சம்பந்தமான வியாதியைக் குப்படுத்தும்.
இது வயிற்றில் ஏப்படும் குடல் புண்ணைக் குணமாக்கும்காணி மலைவாழ் மக்கள் ஆரோக்கியப்பச்சாவின் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு 

ஒரு வாரம் கூட மலையினுள் செல்வர்,அப்போது அவர்களுக்கு 

பசி ஏற்படாது நல்ல சக்தியுடன்செயல்படுவர்மேலும் ஆண் பெண் 
உரவில் அதிக சக்தியைத் தூண்டுவதாகச்சொலிகிறார்கள்இவர்கள் கூற்றை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் சுண்டெலிகளுக்குக்  
கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் உண்மை என்று தெறிந்தனர்..