சித்தாமுட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Plantae |
பிரிவு: | Tracheophyta |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Malvales |
குடும்பம்: | Malvaceae |
பேரினம்: | Pavonia |
இனம்: | Pavonia zeylanica |
வேறு பெயர்கள் | |
Pavonia zeylanica var. afro-arabica Cuf.Pavonia rulingioides Ulbr. Pavonia paolii Mattei Pavonia digitata Hochst. ex Chiov. Parita zeylanicus Scop. Malache zeylanica Kuntze Hibiscus zeylanicus Linné Hibiscus arenarius Scop. Diplopenta pedunculosa Alef. Cancellaria zeylanica Mattei |
சித்தாமுட்டி என்பது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் விஞ்ஞானப் பெயர் பவோனியா சைலனிகா (PAVONIA ZEYLANICA) என்பதாகும். இது மல்வசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். சேங்கன். மம்மட்டி, தெங்கைப் பூண்டு எனும் பெயர்களிலும் இது அறியப்படுகின்றது.
வளரும் இயல்பு[தொகு]
சித்தாமுட்டி மணல் கலந்த பாறையுள்ள இடங்களில் நன்கு வளரும். காடுகளில் புதர்கள் அதிகமாக உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். இது நேராக வளரும் செடி. தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். இதன் இலைகள் ஓரங்களில் பல்லுள்ளவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். சுமார் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடியது. பூக்கள் சிறிதாக 5 இதழ்களுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்கள் தனியாக இருக்கும் 7 எம்.எம். நீளம். வெளிநாடுகளிலு பின்க் நிறத்திலும் கூட இருக்கும். இலைகள் 2.5 x 3 3-5 செ.மீ. அகலத்திலும், 3 – 4 செ.மீ .நீளத்திலும் இருக்கும். பூக்களும் காய்களும் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிகம் காணப்படும். பூக்கள் எல்லா நாட்களிலும் தென்படும். இதன் காய்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் இருக்கும். சித்தாமுட்டி இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளிலு காணப்படுகிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
பயன்கள்[தொகு]
- தாதுக்கிளின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்பதற்குறிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடு பெற உதவுகிறது. கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்தாகவும் பயன்படுகிறது.