"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, July 12, 2016

சோற்றுக் கற்றாழை பயன்படுத்தினால்

சோற்றுக் கற்றாழை பயன்படுத்தினால்…
கொழுப்பு கரைந்து உடல் மெலியும்!

–––––––––––––––––
கற்றாழை, நீர்நிலை இல்லாத இடங்களிலும் வளரும் மருத்துவக் குணம் கொண்ட மகத்தான தாவரம். கற்றாழையின் எல்லையில்லா பயன்களைப் பற்றி, சித்த மருத்துவர் சொல்வதைப் படித்தால் அது உங்களுக்கே புரியும்.
'எல்லோருக்கும் ஏற்ற எளிமையான, எல்லாவிதமான சத்துகளும் ஒருங்கே கொண்டது கற்றாழை. உரிய வயதில், பூப்பெய்யாத பெண்களுக்கு, கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் 'மூசாம்பர பெமுகைக் கொடுத்தால், ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரித்து, பூப்பெய்தல் எளிதாகும். வைட்டமின் ஏ, சி, இ மற்றும் வைட்டமின் பி1, பி6, பி12 இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அகரிக்க உதவும்.
மேலும், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இருப்பதால், வளர் இளம் பருவத்தினருக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஸ்லிம் ஆகும்.
நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, சோரியாசிஸ், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், கற்றாழையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
கற்றாழையில் ஆன்டி மைக்ரொபியல் என்ற ரசாயனம் இருப்பதால், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால் கருமை, கரும் புள்ளி ஏற்படாமல் காக்கும். இதன் தொடர்ச்சியை நாளையும் பார்க்கலாம்