. |
எலுமிச்சைப் புல்/தேசிப் புல் | |
---|---|
Lemon grass plant | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
பேரினம்: | Cymbopogon Spreng. |
Species | |
About 55, see text |
இதன் முக்கியத்துவம்[தொகு]
இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. இதனால் இதனை மக்கள் பொதுவாக உட்கொள்வது வழக்கம். புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை (புல்வெளி) மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன. இது இந்தியாவைச் சார்ந்ததாகக் கருதப்பட்டாலும் தெற்காசியா நாடுகள், தென்கிழக்காசியா நாடுகள் மற்றும் அவுத்திரேலியா போன்ற பகுதிகளிலும் வெவ்வேறு வகையான எலுமிச்சைப் புல் இனங்களைக் காணலாம்.இலங்கையின் மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் இது வர்த்தகத்திற்காகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இதன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் பயன்படுவதால் ஆயுர்வேத மருத்துவத்தில், குறிப்பாக தகர்வு, முறிவு போன்றவற்றுக்கு மருந்தளிப்பதில் இது முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.