.
இந்தக் கட்டுரையில் உசாத்துணைகள் இல்லை. நடுநிலையான உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
அமைப்பு[தொகு]
பொதுவாக நிகண்டுகள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து, குரு வாழ்த்து, அவையடக்கம் போன்றவற்றால் ஏதாவது ஒன்று நூலின் தொடக்கத்தில் அமைந்திருக்கும். இந்நிகண்டில் இவைகளில் ஒன்றும் காணப்படவில்லை. பெருநிகண்டு என்னும் நிகண்டு ஒன்றின், தொடர்ச்சியாக இந்நூல் அமைந்திருக்கலாமென்றுக் கருதப்படுகிறது.இந்நூல், எளிதில் மனனம் செய்வதற்கு ஏற்றவாறு 122 ஓரடி நூற்பாக்களைக் கொண்டுள்ளது. மரங்களின் பெயர்களையும், பிற தாவரங்களின் பெயர்களையும் கூறுகிறது. ஒவ்வொரு நூற்பாவும், ஒரு மரத்தைப் பற்றி என, 122 மரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்பாவும் ஆகும், எனப்படும், எனப்படுமே என்று முடிவதாக அமைந்துள்ளது.
உள்ளடக்கம்[தொகு]
ஒவ்வொரு மரத்துக்கும் பெரும்பான்மை 2 பெயர்களும் (தடவம், தணக்கு-56) சிறுபான்மை பெயர்கள் (பிசிதம், மந்தம், வெள்ளறுகு-68) என மூன்று பெயர்கள் வரை சுட்டியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், மருத்துவ குணமிக்க மரங்களையும், வாசனைப் பொருள் மிகுந்த மரங்களையும் குறிப்பிடுகிறதேயன்றி, அவற்றின் பயன்பாடு பற்றிக் கூறப்படவில்லை.பட்டியல் இடப்பட்ட தாவரங்கள்[தொகு]
மரங்கள்: பிரம்பு, சிறுமுன்னை, பெருமுன்னை, தென்னை, பனை, வெண்முருங்கை, மூங்கில், தகரை, ஈஞ்சு, நிலவேம்பு, ஆலம், மகிழ், கொன்றை, குரா, செருந்தி, சந்தனம், அரசு, கோங்கம், ஒதியம், புளி, குங்குமம், அனிச்சம், கொய்யா, ஆத்தி, தேறு, இரும்பிலி, தும்பிலி, கடம்பு, பிடா, ஊசிப்பாலை, பெருமரம், கருங்குன்றி ஆகியன.மூலிகைகள்: மூலிகை (ஒடதி, ஒடதம்), கருநாகதாளி, அறுகு, சித்திரமூலம், நஞ்சுமுறிச்சான், முடக்கற்றான், பச்சிலை, ஆவிரை, தான்றி, பல்லி, பொருதலை, குதம்பை, தணக்கு, செம்பு, பிரமி, ஈயுணி, வெள்ளறுகு, காக்கணம், கஞ்சாங்கோரை, கொறுக்கை, நன்னாரி, நெடுங்கோரை, கரும் பிரண்டை, திரிதளமூலி, பாற்சொற்றி, சிறுநெல்லி, செந்தூதளை, வெண்தூதளை, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில், துளசி ஆகியன மூலிகைச் செடிகள் ஆகும்.
கீரைகள்: சிறுகீரை, தொய்யா, கானாங்கீரை, பொன்னாங்கண்ணி ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளன.