சிறியாநங்கை

சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata.
அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது.
மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி