ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
ஆரோக்கியமற்ற உணவுமுறை தான் ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கான முதல் காரணி ஆகும். பெரும்பாலும் பெண்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைபாடு தென்படுகிறது.
தலைசுற்றல், தலைவலி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற ஒருசில அறிகுறிகளை வைத்து உங்கள் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கண்டறிய முடியும். ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படாது.
பொதுவான அறிகுறிகள், அரிதான அறிகுறிகள், குழந்தைகளுக்கான அறிகுறிகள் என மூன்று வகைகளாக ஒருவரது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கண்டறியலாம்....
பொதுவான அறிகுறிகள்
காரணமின்றி அல்லது பெரிதாக எந்த வேலைகளும் செய்யாத போது தலை சுற்றுதல், உடல் சோர்வு, தலை வலி, மயக்கம் போன்றவை ஏற்படுவது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை வெளிகாட்டும் பொதுவான அறிகுறிகளாகும்.
அரிதான அறிகுறிகள்
அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, வாந்தி வருவது, நெஞ்செரிச்சல், கை, கால்களில் வீக்கம் ஏற்படுவது போன்றவை ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அரிதான அறிகுறிகள் ஆகும்.
குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறி
குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறிகள் சற்று கடுமையானதாக இருக்கும். அளவுக்கதிகமான இதயத்துடிப்பு, வெளிர்நிறத்தில் தோற்றமளிப்பது, ஓர் செயலில் கவனம் செலுத்த முடியாமல் போவது, நரம்பு மண்டல வலிமை இழப்பு, நடத்தையில் மாற்றம் போன்றவை குழந்தைகளிடம் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாக இருக்கின்றன.
பெண்கள் மத்தியில்
பெண்கள் மத்தியில் பிரசவ காலத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவது இயல்பு. சில பெண்களுக்கு அவர்களது வேலை காரணமாக கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படலாம்.
நோய்கள்
சிவப்பு இரத்த அணுக்கள் குறைபாடு கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய காரணியாக இருக்கிறது. இரத்த சோகை, புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவை கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய காரணிகளாக இருக்கின்றன.
இரும்புச்சத்து குறைபாடு
ஹீமோகுளோபின் உருவாக இரும்புச்சத்து மிகவும் அவசியம். உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது எனில், ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தான் அர்த்தம்.
வைட்டமின் குறைபாடு
வைட்டமின் பி 12, ஃபோலைட் போன்றவை உங்கள் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் புதியதாக உண்டாக உதவுகின்றன. எனவே, இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும் கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
பழங்கள், காய்கறிகள்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய முட்டைக்கோஸ், பட்டாணி, பீன்ஸ், கீரை, ப்ராக்கோலி மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளும், திராட்சைப்பழம், ஆரஞ்சு, வாழைப்பழங்கள், ராஸ்பெர்ரி, கிவி மற்றும் மாம்பழம் போன்ற பழங்களும் மிகவும் சிறந்தது.
வைட்டமின் சி
வைட்டமின் சி இரும்புச்சத்து அதிகம் உள்வாங்க உதவுகிறது, இதனால் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கலாம். எனவே, வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
மற்ற உணவுகள்
நட்ஸ், மீன் மற்றும் மெலிந்த இறைச்சிகள், கோழி, முட்டை, உறுப்பு இறைச்சிகள் போன்ற அதிக வலிமையளிக்கும் டயட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
மூலிகைகள்
ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் உணவில் சிறிதளவு வெந்தையம் மற்றும் துளசி போன்றவற்றி சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்.