ஆடாதோடை
ஆடாதோடை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | இருவித்திலைத் தாவரம் |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Acanthaceae |
பேரினம்: | Justicia |
இனம்: | J. adhatoda |
இருசொற் பெயரீடு | |
Justicia adhatoda L. |
- வேறு பெயர்: ஆடாதொடை, வாசை
- தாவரவியல் பெயர்:Adathoda zeylanica
- குடும்பம்: Acanthaceae
- இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது.
- பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர்.
- சுவை: கைப்பு
- தன்மை: வெப்பம்
- பிரிவு: கார்ப்பு
செய்கைகள்[தொகு]
- கோழையகற்றி
- நுண்புழுக்கொல்லி
- சிறுநீர் பெருக்கி
- வலிநீக்கி
முக்கிய வேதிப்பொருள்கள்[தொகு]
- வாசிசின்
- வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின்
- வைட்டமின் சி
- கேலக்டோஸ்
மருத்துவ பயன்பாடுகள்[தொகு]
இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.- "ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
- கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
- மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
- அகத்துநோய் போக்கு மறி."
-
- - (அகத்தியர் குணவாகடம்)
-
பயன்படுத்தும் முறைகள்[தொகு]
- சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
- இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க
- இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க
- இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
- இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்
- இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
- ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்