சாதிபத்திரி:Myristica Fragrans
இந்தியாவில் பல இடங்களிலும் நட்டு வளர்க்கப்படும் மரமாகும். இதில் வளரும் காயை ஜாதிக்காய் என்றும் , காயின் சுற்றிலும் உள்ள தோட்டை ஜாதிபத்திரி என்று கூறுவர். இரண்டும் மருத்துவ குணம் உடையது. கபம், வாதம், வயிற்று மந்தம், வயிற்று வலி ஆகியவை தீரும். சுக்ல நஷ்டம், அக்னி மாந்தம் ஆகியவை தீரும்.இதை தேங்காய் பாலில் அரைத்து சிறிது வெள்ளமும், அரிசி மாவும் சேர்த்து அந்த தேங்காய் பாலை சிறிது வேகவைத்து சாப்பிட மூத்திரத்துடன் விந்து வெளியேறுவது குணமாகும்.