"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, March 21, 2016

சித்தா மற்றும் ஆயூர்வேதம்


மனபாரம் குறையனுமா அழுவது நல்லது!
வாய்விட்டு சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணீர் விட்டு அழுவதும் மிகவும் ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதன் மூலம் மனதில் உள்ள அழுத்தம் கண்ணீர் மூலம் வெளியேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உடலுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணீர் வகைகள்
சோகத்தில் அழுவது, சந்தோஷத்தில் அழுவது, எரிச்சலில் அழுவது, உணர்ச்சி வசப்பட்டு அழுவது என கண்ணீர் பலவகைப்படும். மனிதர்களைப்போல விலங்குகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத்தேவையில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணீர் உருவாகக் காரணமான லாக்ரிமல் சுரப்பி காய்ந்து போனால் கண் உலர்ந்து விடும். கண்ணீரின் அளவு குறைந்து விடுவதால் கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்தது போன்ற கடுமையான எரிச்சலா கவும் இது இருக்கக்கூடும். வலி அதிகமாகும். கவனித்து சரி செய்து கொள்ளாமல் நீண்ட காலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரை யில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான். கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும்.
உலர்கண்களை தடுக்க
கண்ணில் உள்ள மூன்று வெவ்வேறு படலங்களின் கூட்டு முயற்சிதான் கண்ணீர். இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமை யில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலமான லாக்ரிமல் சுரப்பி களில் நீர் சுரக்கிறது. கண்ணீரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதி செய்துகொள்கிறது. கண் தொற்றுகளுக்குஎதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணீருக்கு உண்டு. உள்ளே இருக்கும் படலம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது செயற்படா விட்டாலும் விழித்திரை உலர்ந்துவிடும்.
மனபாரம் குறையும்
வயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண் ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. சிலவகை ஆண்டியாடிக் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதும் இப்படி நேரலாம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருக்கு அதனாலேயே கண்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது அந்த லென்ஸ்கள் கண்ணீர்த் திவலைகளை உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே உலர்கண் கொண்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சந்தோசமென்றால் மகிழ்ச்சியை சிரிப்பாக வெளிப்படுத்துவதைப்போல துக்கமென்றால் அழுது வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் மனபாரம் குறையும், ஆரோக்யம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்