"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

சித்தாமுட்டி

   
சித்தாமுட்டி
In Talakona forest, AP W IMG 8410.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:Plantae
பிரிவு:Tracheophyta
வகுப்பு:Magnoliopsida
வரிசை:Malvales
குடும்பம்:Malvaceae
பேரினம்:Pavonia
இனம்:Pavonia zeylanica
வேறு பெயர்கள்
Pavonia zeylanica var. afro-arabica Cuf.Pavonia rulingioides Ulbr.
Pavonia paolii Mattei
Pavonia digitata Hochst. ex Chiov.
Parita zeylanicus Scop.
Malache zeylanica Kuntze
Hibiscus zeylanicus Linné
Hibiscus arenarius Scop.
Diplopenta pedunculosa Alef.
Cancellaria zeylanica Mattei
சித்தாமுட்டி என்பது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் விஞ்ஞானப் பெயர் பவோனியா சைலனிகா (PAVONIA ZEYLANICA) என்பதாகும். இது மல்வசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். சேங்கன். மம்மட்டி, தெங்கைப் பூண்டு எனும் பெயர்களிலும் இது அறியப்படுகின்றது.

வளரும் இயல்பு[தொகு]

சித்தாமுட்டி மணல் கலந்த பாறையுள்ள இடங்களில் நன்கு வளரும். காடுகளில் புதர்கள் அதிகமாக உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். இது நேராக வளரும் செடி. தரிசு நிலங்களிலும், வேலியோரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும். இதன் இலைகள் ஓரங்களில் பல்லுள்ளவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். சுமார் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடியது. பூக்கள் சிறிதாக 5 இதழ்களுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்கள் தனியாக இருக்கும் 7 எம்.எம். நீளம். வெளிநாடுகளிலு பின்க் நிறத்திலும் கூட இருக்கும். இலைகள் 2.5 x 3 3-5 செ.மீ. அகலத்திலும், 3 – 4 செ.மீ .நீளத்திலும் இருக்கும். பூக்களும் காய்களும் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிகம் காணப்படும். பூக்கள் எல்லா நாட்களிலும் தென்படும். இதன் காய்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் இருக்கும். சித்தாமுட்டி இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளிலு காணப்படுகிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

பயன்கள்[தொகு]

  1. தாதுக்கிளின் எரிச்சலை தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிசவாதம், முகவாதம், போன்ற கடும் வாத நோய்களைத் தீர்பதற்குறிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடு பெற உதவுகிறது. கர்பிணிப் பெண்ணுக்ககு மருத்துவ உணவாகப் பயன்படுகிது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்ததும் மருந்தாகவும் பயன்படுகிறது.

ரோசு மேரி


தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோசு மேரி
Rosemary bush.jpg
ரோஸ்மேரி மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
தரப்படுத்தப்படாத:யூடிகாட்டுகள்
தரப்படுத்தப்படாத:ஆஸ்டெரிட்சு
வரிசை:லாமியாலஸ்
குடும்பம்:லாமியேசீ
பேரினம்:ரோசுமேரினஸ்
இனம்:ரோ. அஃபிசினாலிசு
இருசொற் பெயரீடு
ரோசுமேரினஸ் அஃபிசினாலிஸ்
கரோலஸ் லின்னேயஸ்[1]
ரோசு மேரி (ரோஸ் மேரி; Rosmarinus officinalis) என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
ரோசு மேரி எனும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்துத் தருவிக்கப்பட்டதாகும். இதற்கு கடல் துளி என்று பொருள்.[2] (marinus - கடல்; ros - துளி) பல இடங்களில் இத்தாவரமானது நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது. எனவே இப்பெயர் ஏற்பட்டது.

வகைப்பாட்டியல்[தொகு]

ரோசுமேரினஸ் என்ற பேரினத்திலுள்ள இரு சிற்றினங்களுள் ரோஸ்மேரினஸ் அஃபிசினாலிஸ் ஒன்றாகும். மற்றொரு சிற்றினம் ஆனது ரோஸ்மேரினஸ் எரியோகலிக்ஸ் ஆகும். இது ஆஃப்ரிக்காவின் வட பகுதியிலும் (மாக்ரெப்) ஐபீரியாவிலும் மட்டுமே இருக்கிறது. இம்மூலிகை ஆனது மிகப்பெரிய புதினா குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது.
இத்தாவரம் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்கையாளரான கரோலசு லின்னேயசால் பெயரிடப்பட்டது. அதன் பிறகு இதன் வகைப்பாட்டியலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.

விளக்கம்[தொகு]

தண்டுகள் மேல்நோக்கியோ சாய்வாகவோ வளரக்கூடியவை. மேல்நோக்கிய தண்டுகள் 1.5 மீ (5 அடி) என்ற உயரத்திற்கு வளரத்தக்கவை. அரிதாக 2 மீ (6 அடி 7 இன்ச்) என்ற அளவிலும் இருக்கும்.
இலைகள் பசுமைமாறாதவை ஆகும். 2-4 செ.மீ. என்ற நீளத்திலும் 2-5 மி.மீ. அகலமாகவும் இருக்கும். பச்சை நிறம் மேற்புறத்திலும் கம்பளி போன்ற முடிகள் கொண்ட அடர் வெண்ணிறம் கீழ்ப்புறத்திலும் இருக்கும்.
ரோசு மேரி ஆனது வட பகுதிகளில் கோடையிலும் மற்றபடி மிதமான குளிர் நிலவும் பகுதிகளில் பல்வேறு நிறங்களில் எப்போதும் பூத்தபடி இருக்கும். இதன் பூக்கள் வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் போன்ற நிறங்களை உடையவையாக இருக்கும்.[3]

புராணம்[தொகு]

கடல் துளி என்று மொழிபெயர்க்கப்படும் ரோஸ் மேரினஸ் என்ற சொல்லானது இலத்தீன் சொற்களிலிருந்து வருகிறது. உண்மையில் ஔரானாசின் விந்திலிருந்துப் பிறந்த அப்ரோடைட் ஆனவள் கடலிலிருந்து எழும்போது ரோசு மேரியையே உடுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அப்ரோடைட் கடவுள் ஆனது ரோசு மேரியுடன் கன்னி மேரியைப் போன்றே தொடர்புபடுத்தப்படுகிறது. கன்னி மேரி ஆனவள் ஓய்வெடுக்கையிலே ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அந்நிறமானது மேரியுடன் தொடர்புடையதானதாகக் கூறப்படுகிறது.

பயிரிடல்[தொகு]

இப்பயிரானது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது தோட்டங்களிலும் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது. அது தவிர பூச்சிக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது. இப்பயிரானது தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் வளருவதில்லை. இப்பயிர் வளர நல்ல நீரோட்ட வசதி இருக்க வேண்டும். மேலும் மண்ணின் pH மதிப்பானது 7-7.8 வரை இருக்க வேண்டும்.
பின்வரும் வகைகள் மட்டுமே பொதுவாக விற்கப்படுகின்றன. அவையாவன,
  • ஆல்பஸ் – வெண் பூக்கள்
  • ஆர்ப் – இலைகள் இளம்பச்சை நிறமுடையவை, எலுமிச்சை மணமுடையது
  • ஔரியஸ் – மஞ்சள் புள்ளிகளுடையது
  • பெனெடென் ப்ளூ – நேரான அடர் பச்சை இலைகள்
  • ப்ளூ பாய் – குள்ளமான சிறு இலைகள்
  • கோல்டன் ரெய்ன் – மஞ்சள் வரிகளுடன் கூடிய பச்சை இலைகள்
  • கோல்டு டஸ்ட் - கோல்டன் ரெய்னை விட அடர்வான மஞ்சள் வரிகளுடன் கூடிய அடர் பச்சை இலைகளையுடையது
  • ஐரீன் – தளர்வானது
  • லாக்வுட் டி ஃபாரஸ்ட்டஸ்கன் ப்ளூவிலிருந்து பெறப்பட்டது
  • கென் டேய்லர் – புதரானது
  • மெஜோரிக்கா பிங்க் – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
  • மிஸ் ஜெஸ்சோப்ஸ் அப்ரைட் – தடிப்பானது, உயரமானது
  • பிங்கீ – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
  • ப்ராஸ்ட்ரேட்டஸ்
  • பிரமிடாலிஸ் (a.k.a. எரக்டெஸ்) – இளநீல நிற மலர்கள்
  • ரோசியஸ் – இளஞ்சிவப்பு நிற மலர்கள்
  • சலேம் – இளநீல நிற மலர்கள், ஆர்ப்பைப் போன்றது
  • செவெர்ன் சீ – படரக் கூடியது, மலர்கள் ஆழ்ந்த ஊதா நிறம் உடையவை
  • டஸ்கன் ப்ளூ – நேராக வளரும்
  • வில்மாஸ் கோல்டு – மஞ்சள் இலைகள்

மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

ரோசுமேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது.[4]
ரோசுமேரியின் பொடியானது புற்றூக்கிகளுக்கு[5] எதிராகச் செயல்படுகிறது. இது எலிக்குக் கொடுக்கப்பட்டுச் சோதித்தறியப்பட்டுள்ளது.[6]
இது ரோசுமேரினிக் அமிலம் போன்ற எதிர் ஆக்சிசனேற்றிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கற்பூரமும் (உலர் இலைகளில் 20% வரை), கேஃபேயிக் அமிலம், உர்சாயிக் அமிலம், பிட்யூலினிக் அமிலம், ரோசுமாரிடிஃபீனால், ரோசுமனால் போன்றவையும் உள்ளன.

கொத்தமல்லி


தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொத்தமல்லி
Coriandrum sativum - Köhler–s Medizinal-Pflanzen-193.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:Apiales
குடும்பம்:Apiaceae
பேரினம்:Coriandrum
இனம்:C. sativum
இருசொற் பெயரீடு
Coriandrum sativum
L.
Coriander leaves, raw
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 20 kcal   100 kJ
மாப்பொருள்    4 g
- நார்ப்பொருள் (உணவு)  3 g  
கொழுப்பு0.5 g
புரதம்2 g
உயிர்ச்சத்து ஏ  337 μg37%
உயிர்ச்சத்து சி  27 mg45%
ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான,உட்கொள்ளல் பரிந்துரை .
கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

வரலாறு[தொகு]



கொத்தமல்லி பூக்கள்
இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.

பயன்கள்[தொகு]

உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.

பயிரிடல்[தொகு]

கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை தேவைப்படும். நிலத்தினை உழுது , தொழு உரம் இறைத்து, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தின், ஈர மண்ணில் கொத்துமல்லி விதைகளை தூவி, நிலத்தினை கீறி விட வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில்

கறிவேம்பு

 
 
 
கறிவேம்பு
Curry Trees.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
பிரிவு:பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத:Rosids
வகுப்பு:மெய்யிருவித்திலையி
வரிசை:Sapindales
குடும்பம்:Rutaceae
பேரினம்:Murraya
இனம்:M. koenigii
இருசொற் பெயரீடு
Murraya koenigii
(லி.) Sprengel[1]
இந்தியா, இலங்கை நாடுகளிலே சமைக்கப்படுகின்ற விதவிதமான உணவுப்பதார்த்தங்கள் சுவைக்குப் பிரசித்தி பெற்றவையாகும். மிகச் சுவையாகச் சமைப்பதற்காக பல்வேறு சுவையூட்டிகள் சமையலில் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது கறிவேப்பிலையாகும். கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது பலமருத்துவ குணங்கள் மிக்கதும் ஆகும். அதன் தாவரவியல் பெயர் முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியாகும்.

தோற்றம்[தொகு]

வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல்  நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.  

மருத்துவ குணங்கள்[தொகு]



கறிவேப்பிலை
சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவு. நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்[சான்று தேவை].
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர். [சான்று தேவை]

சொல் விளக்கம்[தொகு]

கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
"கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.

இலங்கை மற்றும் பிறநாடுகளில்[தொகு]

கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.
இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.

பேச்சு வழக்கில்[தொகு]

"கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.

கற்பூரவல்லி

    
 
 
கற்பூரவல்லி
IndianBorage.jpeg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:Lamiales
குடும்பம்:Lamiaceae
பேரினம்:Plectranthus
இனம்:P. amboinicus
இருசொற் பெயரீடு
Plectranthus amboinicus
(Lour.) Spreng.
வேறு பெயர்கள்
Coleus amboinicus Lour.Coleus aromaticus Benth.
கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

மருத்துவக் குணங்கள்[தொகு]

குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற பயன்படுகிறது.[சான்று தேவை]

பாடல்களில் கற்பூரவள்ளி பற்றி[தொகு]

அகத்தியர் குணபாடம்[தொகு]

காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு

தேரையர் குணபாடம்[தொகு]

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே

கற்ப மூலிகைகள்

    
 
 
திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்ப மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் -
  • "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
    • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
  • காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
    • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
  • கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
    • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
  • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
    • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
  • "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
    • 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
  • நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
    • நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
  • பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
    • பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
  • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
    • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
  • "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
    • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
  • கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
    • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
  • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
    • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
  • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
    • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
  • "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
    • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
  • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
    • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
  • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
    • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
  • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
    • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
  • "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
    • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
  • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
    • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
  • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
    • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
  • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
    • அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.
  • கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபடும் காலத்தில் கணவனின் வலதுநாசித் துவார வழியாக மூச்சு ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும்.
  • இட நாசித் துவாரத்தின் வழியாக ஓடினால் பெண் குழந்தை பிறக்கும்.
  • சுழுமுனை,அஃதாவது நடுவாக ஓடினால் அலி பிறக்கும்.
  • மூச்சு ஜம்பூதங்களில் தோன்றி முழுமையாக ஓடினால் குழந்தை நூறு வயது இருப்பதோடு,ஆரோக்கியமாக இருக்கும்.
  • குறைந்து ஓடினால் அதற்கேற்ற மாதிரி அதன் ஆயுள் குறையும்.
  • ஓடுகின்ற மூச்சு மெல்ல ஓடினால் குழந்தை குட்டையாய்ப் பிறக்கும்.
  • வளைந்து ஓடினால் முடமாகப் பிறக்கும்.இவைகள் எல்லாம் கலவி செய்கின்ற ஆண்களுக்கு.
  • பெண்களின் வயிற்றில் மலம் தங்கியிருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் விளங்கும்.
  • நீர் தங்கியிருந்தால் ஊமையாகப் பிறக்கும்.
  • மலம், நீர் ஆகிய இரண்டும் தங்கியிருந்தால் குருடாகப் பிறக்கும்.
  • இருவருக்கும் ஒரே மாதிரி நல்லமுறையில் சுவாசம் ஓடினால் பிறக்கின்ற குழந்தை அறிவோடும் அழகோடும் விளங்கும்.
சித்தர்கள் எவ்வாறு இதனை அறிந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வியாசருடன் அம்பிகை போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அம்பிகை கண்ணை மூடிக்கொண்டதால் குருட்டுக்குழந்தை பிறக்கும் என்றும்,அதே வியாசருடன் அம்பாலிகை போகத்தில் ஈடுபட்ட காலத்து அம்பாலிகை வியர்த்து,அருவருத்து இருந்ததால் வெண்மை நிறமுடைய குழந்தை பிறக்கும் என்றும் அதே வியாசருடன் பணிப்பெண் ஒருத்தி போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அப்பணிப்பெண் மன நிறைவுடன் போகத்தில் ஈடுபட்டதால்,அறிவுடைய குழந்தை பிறக்கும் என்று வியாசர் கூறியதற்கேற்றாற் போலவே,முறையே குருடனாக திருதாட்டிரனும்,வெண்மை நிறமுடைய பாண்டுவும்,அறிவும்,ஆற்றலுமிக்க விதுரரும் பிறந்தனர் என்று மகாபாரதம் கூறுகின்றது. சித்தர்களின் வைத்திய முறைக்கு ஒத்து வரும் இச்சம்பவத்தின்படி வியாசரும் சித்தரென்ற காரணத்தினால் இதனை அறிந்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருஞ்சீரகம்

    
 
 
கருஞ்சீரகம்
Nigella sativa 003.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
பிரிவு:பூக்குந்தாவரம்
வகுப்பு:மூவடுக்கிதழி
வரிசை:Ranunculales
குடும்பம்:Ranunculaceae
பேரினம்:Nigella
இனம்:N. sativa
இருசொற் பெயரீடு
Nigella sativa
லி.


Nigella sativa
கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. ஹிந்தி மொழியில் இதற்கு கொலொஞி எனப் பெயர். இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.
"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று இசுலாம் மதத்தின் நிறுவனரான நபிகள் நாயகம் அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் இன்றளவும் இதன் எண்ணை பயன்படுத்தப்படுகிறது.
பைபிளிலும் குறிக்கப்பெற்றுள்ள இது, அரபு நாடுகளில் பெரிதும் உணவோடு பயன்படுத்தப்படுகிறது.

இடம்பெற்றுள்ள சத்துக்கள்[தொகு]

இதன் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும் அவசியமான அமினோ அமிலங்கள், அவசியான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.

கரு ஊமத்தை


தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரு ஊமத்தை
Datura inoxia1SHSU.jpg
DaturaMetel-plant.jpg

'Fastuosa'
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:கத்தரி வரிசை
குடும்பம்:கத்தரிக் குடும்பம்
பேரினம்:Datura
இனம்:D. metel
இருசொற் பெயரீடு
Datura metel
லி.


ஊமத்தங்காய்
கரு ஊமத்தை (Datura metel) மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரமாகும். இது சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீன மூலிகை மருத்துவத்தின் 50 முக்கிய மூலிகைகளுள் ஒன்றாகும். திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும்.[1]

மருத்துவ குணங்கள்[தொகு]

  • தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு[2] உள்ளிட்டவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது[3]

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை


தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
False Daisy
Starr 030807-0168 Eclipta prostrata.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவர இனம்
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்பு:Magnoliopsida
வரிசை:Asterales
குடும்பம்:Asteraceae
பேரினம்:Eclipta
இனம்:E. alba
இருசொற் பெயரீடு
Eclipta alba


மஞ்சள் கரிசலாங்கண்ணி


வெள்ளை கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

காணப்படும் நாடுகள்[தொகு]

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.

மருத்துவ குணங்கள்[தொகு]

செடி முழுவதும் மருத்துவக் குணமுடையதாகும்.
  • மஞ்சள் காமாலை[1][2]
  • மகோதர வியாதி
  • சிறுநீர் எரிச்சல்
  • பெண்களின் பெரும்பாடு
  • குழந்தைகளின் சளி[3] உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.[4]

கண்டங்கத்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்டங்கத்தரி
Solanum Xanthocarpum.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:Angiosperms
தரப்படுத்தப்படாத:Eudicots
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:Solanales
குடும்பம்:Solanaceae
பேரினம்:Solanum
இனம்:S. xanthocarpum
இருசொற் பெயரீடு
Solanum xanthocarpum
வேறு பெயர்கள்
Solanum surattense [1]
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள
விளக்கத்தையும் காண்க!
கண்டங்கத்தரி அல்லது பிரகதி அல்லது கண்டகாரி (Yellow- Berried Nightshade, solanum xanthocarpum) பயனற்ற நிலங்களில் வளரும் - முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய ஒரு மூலிகைச் செடி. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்த்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி, காய் கத்திரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் இருக்கும்.

பெயர் காரணம்[தொகு]

  1. கண்ட எனும் சொல் முள் ஐ குறிக்கும் (கண்ட (nt) = முள) கண்டங்கத்தரி (முட்கத்தரி).[2]
  2. கண்டம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர்[3]

இயற்கை மருத்துவம்[தொகு]

  1. இளம் பிள்ளை வாத நோய் கண்ட சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.
  2. ஆஸ்துமா இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவாளை தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்ட காய்ச்சி உட்கொள்ள குணமாகும்.
இவை பின் விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும்