"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, March 21, 2016

ஜாதிகாய்

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.
இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.
இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது.
கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.

வெந்தயம் மோர்


உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்
தேவையான பொருட்கள் :
வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு
மோர் - 1 கப்
செய்முறை :
• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

செம்பருத்தி டீ

செம்பருத்தி டீ
குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்:
மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர். அதன் விவரம்:
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பிற மருத்துவக் குணங்கள்:
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.)
வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)
செம்பருத்திபூ தங்கபஸ்பம்
இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன.
இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்..
இருதய பலம்
இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும்.
250 கிராம் செம்பருத்திபூவை துண்டாக நறுக்கி ஒரு காண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, அதை காலையில் வெயிலில் வைக்கவும் பின்னர் மாலையில் எடுத்து பிசையவும் சிவப்பான சாறுவரும் அந்த சாறை ஒரு பாத்திரத்தில் உற்றி அதற்கு தேவையான சர்க்க்ரை சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றி வைத்துகொள்ளவும். இதில் இருந்து 2ஸ்புன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகவும்,இது போல தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சிரான முறையில் பரவும் இருதயம் பலம்பெறும்.
உடல் உஷ்ணம் குறைய
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.
இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.
பேன், பொடுகு தொல்லை நீக்கும்
இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.
பலகீனமான குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.
தலையில் பேன், பொடுகு நீங்க
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
செம்பருத்தி டீ போடும் முறை :
செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ்
தண்ணீர் 1 கப் -150 ml
சக்கரை -1 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும் .
ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது .

எலுமிச்சம் பழம்


எலுமிச்சை
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்
வயிறு பொருமலுக்கு
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க
தற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
இரத்தக் கட்டுக்கு
உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க
சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.
நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்
·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.
எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

சித்தா மற்றும் ஆயூர்வேதம்


மனபாரம் குறையனுமா அழுவது நல்லது!
வாய்விட்டு சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணீர் விட்டு அழுவதும் மிகவும் ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதன் மூலம் மனதில் உள்ள அழுத்தம் கண்ணீர் மூலம் வெளியேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உடலுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணீர் வகைகள்
சோகத்தில் அழுவது, சந்தோஷத்தில் அழுவது, எரிச்சலில் அழுவது, உணர்ச்சி வசப்பட்டு அழுவது என கண்ணீர் பலவகைப்படும். மனிதர்களைப்போல விலங்குகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத்தேவையில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ணீர் உருவாகக் காரணமான லாக்ரிமல் சுரப்பி காய்ந்து போனால் கண் உலர்ந்து விடும். கண்ணீரின் அளவு குறைந்து விடுவதால் கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்தது போன்ற கடுமையான எரிச்சலா கவும் இது இருக்கக்கூடும். வலி அதிகமாகும். கவனித்து சரி செய்து கொள்ளாமல் நீண்ட காலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரை யில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான். கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும்.
உலர்கண்களை தடுக்க
கண்ணில் உள்ள மூன்று வெவ்வேறு படலங்களின் கூட்டு முயற்சிதான் கண்ணீர். இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமை யில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலமான லாக்ரிமல் சுரப்பி களில் நீர் சுரக்கிறது. கண்ணீரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதி செய்துகொள்கிறது. கண் தொற்றுகளுக்குஎதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணீருக்கு உண்டு. உள்ளே இருக்கும் படலம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது செயற்படா விட்டாலும் விழித்திரை உலர்ந்துவிடும்.
மனபாரம் குறையும்
வயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண் ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. சிலவகை ஆண்டியாடிக் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதும் இப்படி நேரலாம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருக்கு அதனாலேயே கண்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது அந்த லென்ஸ்கள் கண்ணீர்த் திவலைகளை உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே உலர்கண் கொண்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சந்தோசமென்றால் மகிழ்ச்சியை சிரிப்பாக வெளிப்படுத்துவதைப்போல துக்கமென்றால் அழுது வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் மனபாரம் குறையும், ஆரோக்யம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்