"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, March 28, 2016

சீந்தில் கொடி

சீந்தில் கொடி!!!

மூலிகைகளின் பயன்களை இன்று உலகம் உணரத் தொடங்கிவிட்டது. மூலிகைகளின் ஆராய்ச்சி இன்று எங்குபார்த்தாலும் நடைபெறுகிறது. மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் இந்தியா மூலிகை ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. ஆனால் சீனாவோ மூலிகை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் தவப்பயனால் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து மக்களுக்கு மருத்துவத்தை செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் இந்த மூலிகைகளின் பயன்களை அறியாமல் மக்கள் ஆங்கில மருத்துவம் நோக்கி சென்றதால் மூலிகைகளைப் பற்றி ஒரு சந்ததியினர் அறிய முடியாமல் போனது. ஆனால் மேலை நாட்டினர் இந்த மூலிகைகளின் மருத்துவக் குணங்களை நம் ஏட்டுச் சுவடிகள் மூலம் கண்டறிந்து பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.

இப்படி அருகில் இருந்தும் அறியப்படாத மகத்துவமாய் மறைந்து கிடக்கும் மூலிகைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் இம்மாத மூலிகை என்ற பகுதியில் அறிந்துவருகிறோம். இந்த மாதம் எங்கும் நிறைந்து காணப்படும் அமிர்தவல்லி என்ற சீந்திலின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்வோம்.

இது கொடியினத்தைச் சேர்ந்தது. மலை அடிவாரங்களில் அதிகம் காணப்படும். இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.

இது அமிர்தவல்லி, சோமவல்லி,அமிர்தை, அமிர்தக்கொடி, குண்டலி என பல பெயர்களில் வழங்கப்படுகின்றது.

கூச்ட்டிடூ - குஞுஞுணtடடிடூ டுணிஞீடி
உணஞ்டூடிண்ட - எதடூச்ணஞிடச் tடிணண்ணீணிணூச்
கூஞுடூதஞ்த - கூடிணீணீச்-tஞுஞுஞ்ச்
Mச்டூச்தூச்டூச்ட் - அட்ணூடிtடத
குச்ணண்டுணூடிt - அட்டிணூtடச்
ஆணிtச்ணடிஞிச்டூ Nச்ட்ஞு - கூடிணணிண்ணீணிணூச் ஞிணிணூஞீடிஞூணிடூடிச்
சீந்தில் மூன்று வகைப்படும்.

1) சீந்தில், 2) பொற்சீந்தில், 3) பேய்ச்சீந்தில்

இதில் பேய்ச்சீந்தில் என்பது ஆகாசக் கருடன் அல்லது கொல்லன் கோவை எனப்படுகின்றது.

ஆறாத புண்கள் ஆற

இதன் இலைகளை அனலில் வாட்டி அதன் சாற்றை புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். சீந்திலின் முற்றிய கொடியே அதிக மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது.

புகலுஞ் சீந்திற் பற்படகம் பூசுஞ் சந்தம் விலாமிச்சந்
திகழ்வேர்க் கொம்பு மிருவேலி சிற்றாமுட்டியுடன் காசுந்
தகவே யொவ்வொன் றோர்கழஞ்சு தண்ணீ ரிரண்டு நாழியிட்டுச்
சுகமாய்க் காய்ச்சிக் கொடுத்தற்காற் சேரும் பித்தஞ் சுரந்தானே
(குணபாடம்)

சீந்தில் கொடி - 10 கிராம்

பொடி செய்தது பற்படகம் - 10 கிராம்

சந்தனம் - 10 கிராம்

விலாமிச்சவேர் - 10 கிராம்

சுக்கு - 10 கிராம்

வெட்டிவேர் - 10 கிராம்

சிற்றாமுட்டி - 10 கிராம்

கோரைக் கிழங்கு - 10 கிராம்

இவற்றை எடுத்து அரைத்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு சீந்தில் கொடி அருமருந்தாகும். இந்த மதுமேக நோய்க்கு அப்போதே தேரையர் தன் வெண்பாவில்

மேகமெனு மாதபத்தால் வெந்த புயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.

சீந்தில் கொடியை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினமும் காலை மாலை அருந்திவந்தால் உடலில் உள்ள சர்க்கரை சீராகி இந்நோயின் தாக்கம் குறையும்.

சீந்தில் கொடி - 34 கிராம்

கொத்துமல்லி - 4 கிராம்

அதிமதுரம் - 4 கிராம்

சோம்பு - 4 கிராம்

பன்னீர் பூ - 4 கிராம்

எடுத்து 300 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இரண்டு மணி நேரம் ஆறவைத்து பின்பு வடிகட்டி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் 25 மிலி முதல் 30 மிலி வீதம் அருந்தி வந்தால் உப்பிசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

சீந்தில் கொடியைக் கொண்டு சீந்தில் எண்ணெய், சீந்தில் நெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகையான உப்புக்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர்.

குட்டம் பதினெட்டும் குஞ்சரத்தின் றோற்சொறியுங்
கட்டம் பெரிதாங் கயநோயும் - பட்டவுடன்
செந்தீமுன் பஞ்செனவே சீத்தலுப் போடளைத்த
தந்தா வளநீர்க்குச் சாம்
(தேரன் வெண்பா)

இந்த சீந்தில் சர்க்கரையானது பதினொரு வகையான நோய்களை குணப்படுத்தும். யானைத் தோல் போன்ற சொறியும், கொடிய கபப் பிணிகளையும் போக்கும் குணமுண்டு.

பசியைத் தூண்ட

சீந்திற் கிழங்கருந்தக் தீபனமாம் மேகவகை
போந்தவுதி ரப்பிதம் பொஞ்குசுர-மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பலநோ யோடே
கதிவிடமுங் கெட்டு விடுங் காண்
(அகத்தியர் குணபாடம்)

சீந்தில் கிழங்கை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இரத்த சோகையைப் போக்கும். சுரம், மாந்தம் போன்றவற்றை நீக்கும்.

சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.
இலை, தண்டு உடல் பலத்தை அதிகரிக்கும். சிறுநீர் பெருக்கும். முறைக் காய்ச்சல் தீர்க்கும். அஜீரணம் குணமாகும்; வாதநோய்கள், கிரந்தி முதலியவை கட்டுப்படும்; காமம் பெருகும்.
பல்லாண்டு வாழும் ஏறு கொடி வகையைச் சார்ந்தது. கிளிப்பச்சை நிறமான இதய வடிவ இலைகள், 5-10 செ.மீ. வரை நீளமானவை, தெளிவான 7-9 நரம்புகளுடன் இருக்கும். தண்டு பச்சையானது, சாறு நிறைந்தது, தக்கையான தோலால் மூடப்பட்டிருக்கும்.
தண்டும், கிளைகளும் வெண்மையான சுரப்பிப் புள்ளிகளுடன் காணப்படும். கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் பூக்கள், மஞ்சளானவை, கொத்தானவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை.
காய்கள் உருண்டையானவை, கொத்தானவை, பச்சையானவை. பழங்கள் சிவப்பானவை, பட்டாணி அளவில் காணப்படும். இந்தியாவின் வெப்பமண்டலப் பிரதேசம் முழுவதும் வளர்கின்றது. காடுகளிலும் வேலியோர மரங்களிலும் படர்ந்து காணப்படும்.
பழங்கால இலக்கிய நூல்களில் பொற்சீந்தில் கொடி என்கிற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி, சஞ்சீவி, ஆகாசவல்லி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டுகள் அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.
சாதாரண சளியுடன் வரும் காய்ச்சலுக்கு ஒரு அடி நீளமான சீந்தில் தண்டிலிருந்து, அதன் மேல் தோலை அகற்றி, இடித்து, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் அளவாக இரசம் செய்யவும். ஒரு கோப்பை அளவு இந்த இரசத்தைப் பருக வேண்டும். இதேபோல் மூன்று நாட்களுக்கு, தினம் மூன்று வேளைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
நோயால் இளைத்த உடல் உறுதியடைய முதிர்ந்த கொடிகளை, தோல் நீக்கி, உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை வேளைகளில், ½ தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும்.
நாவறட்சி, தாகம் குணமாக மேல் தோல் நீக்கிய சீந்தில் தண்டு, நெற்பொரி, வகைக்கு 50 கிராம், நசுக்கி, ஒரு லிட்டர் நீரில் இட்டு, ¼ லிட்டராக சுண்டக்காய்ச்சி, வேளைக்கு 50 மி.லி. வீதம், 4 வேளைகள் குடிக்க வேண்டும்.
குறிப்பு:
ஈரல் வலுவடையும் உடலின் சக்தி அதிகரிக்கவும், தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் இதே இரசத்தை 7 லிருந்து 21 நாட்கள் வரை தினம் இரு வேளைகள் 30 மி.லி. அளவு பருகி வரலாம்.
சீந்தில் சர்க்கரை:
முதிர்ந்த, முற்றிய கொடியை, மேல் தோலை உரித்து, நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக இடித்து, தேவையான அளவு தூய்மையான நீரில் கரைத்து, 4 மணி நேரம் வைத்திருந்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டியது போக சிறிதளவு மாவு போன்ற பொருள் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் நீர்விட்டு இதனைத் தெளியவைத்து, வடிகட்டி எடுத்து நிழலில் உலர்த்தினால் வெண்மையான தூள் கிடைக்கும். இதுவே எளிய முறையில் தயாரிக்கப்பட்ட சீந்தில் சர்க்கரை ஆகும்.
இதனை, ஒரு கிராம் அளவில் உள்ளுக்குச் சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கை நீக்கும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.