"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, May 22, 2016

சிறுநீர் பிரிய

சிறுநீர் பிரிய
* முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
* புதினா இலையை ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.
* வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கி சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.
* முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
* கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.
* சதகுப்பைக் கீரையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். கால் வீக்கமும் குணமாகும்.