"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, June 30, 2016

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரை வகைகள்; நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழவகைகள்;

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரை வகைகள்;
1.முருங்கைக்கீரை 2.அகத்திக்கீரை
3.பொன்னாங்கண்ணிக்கீரை 4.சிறுகீரை
5.அரைக்கீரை 5.வல்லாரைக்கீரை
7.தூதுவளைக்கீரை 8.முசுமுசுக்கைக்கீரை
9.துத்திக்கீரை 10.மணத்தக்காளிக்கீரை
11.வெந்தயக்கீரை 12.கொத்தமல்லிக்கீரை
13.கறிவேப்பிலை
கீரைகளில் பெரும்பான்மையாக், கால்சியம், புரதம், இரும்புச்சத்துகள் கிடைக்கிறது. கீரைகளில் மாவுப்பொருள் மிகவும் அரிது. எனவே கீரைகள் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழவகைகள்;
  1.விளாம்பழம் -50கிராம்
2.அத்திப்பழம் -3எண்ணிக்கை
3.பேரிச்சம்பழம் -4 எண்ணிக்கை
4. பெரிய நெல்லிக்காய் -5 எண்ணிக்கை
5.அருநெல்லிக்காய் -100 கிராம்
6.நாவல் பழம் -100கிராம்
7.மலை வாழை -30 கிராம்
8.அன்னாசிப்பழம் -40கிராம்
9.மாதுளம்பழம் - 90கிராம்
10. எலுமிச்சை -1 எண்ணிக்கை
11.ஆப்பிள் -75 கிராம்
12.பப்பாளிப்பழம் -75கிராம்
13. கொய்யாப்பழம் -75கிராம்
14.திராட்சை -100கிராம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழங்களில் ஏதேனும் ஒன்று மட்டும் தினசரி சாப்பிடலாம். கொடுக்கப்பட்ட எடையளவு மற்றும் எண்ணிக்கையை மனதில் கொண்டு சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயின் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் நேரடி இனிப்பு சாப்பிட நேர்ந்தால் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு, பிற உணவு பொருட்களையும் மாவுப்பொருட்களையும், தவிர்ப்பது நல்லது. அப்படி இருக்கும் பட்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட குளுகோஸ் எளிதில் ஜிரணிக்கப்படுகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும் சாறு வகைகள்;
1.எலுமிச்சை சாறு -200மில்லி
2.இளநீர் -200மில்லி
3.வாழைத்தண்டு சாறு -200மில்லி
4.அருகம்புல் -100மில்லி
5.நெல்லிக்காய் சாறு -200மில்லி
6.கருவேப்பிலை சாறு -100மில்லி
7கொத்தமல்லி சாறு -100மில்லி
(கொடுக்கப்பட்டுள்ள சாறுகளில்) ஏதேனும் ஒன்று மட்டும் எடையளவு மீறாமல் தினசரி சேர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை நோயாளிகள் இளநீர் சாப்பிடக்கூடாது என்ற தவறான் அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகிறது.
இளநீரில், இளமைத்தன்மையுள்ள கால்சியம் காணப்படுகிறது.அதாவது மருத்துவ குணம் கொண்ட கால்சியம் இதனால் இளநீர் உள்ரணம் ஆற்றுவதிலும், எலும்புகளைப் பலப்படுத்துவதிலும், மூத்திரை தாரைகளை சுத்தப்படுத்துவதிலும்,சிறுநீரகங்களை நன்கு இயங்கச் செய்வதிலும் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒன்று அல்லது இரண்டு இளநீர் சாப்பிடலாம் தவறில்லை.
இயற்கை உணவும் நீரிழிவும்;
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும், நிரந்தர குணம் தருவதிலும் இயற்கை உணவின் பங்கு மிக இன்றியமையாதது, இயற்கை உணவுகளில் கார்போஹைட்ரேட் மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகிறது.இதனால் இயற்கை உணவை உணவாக கொண்டால் நீரிழிவுக்கு நிரந்தர குணம் விரைவில் காணப்படும்.
ரத்த சிவப்பணுக்களைப் பெருக்கி உடம்புக்கு எதிர்ப்புத்திறன் தருகிறது. ரத்தத்தில் கலந்துள்ள கார்4பன் மூலக்கூறுகளை வெளியேற்றுகிறது .ரத்தத்தில் பிராண சக்தி அதிகரிக்கிறது.
இதனால் இதயம், மூளை, நரம்பு,எலும்பு,சிறுநீரகம் பலப்படுறது.
ஒரு காயை சமைத்தாலோ, அல்லது எண்ணேயிலிட்டு வறுத்தாலோ,அதில் கார்பன் மூலக்கூறுகள் மிகுந்து விடுகிறது.ருசிக்கு அடிமைப்பட்ட மனித தேகம் தான் நித்தம் ஒரு வியாதியில் விழ்ந்து கிடக்கிறது.