"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, June 6, 2016

பருத்தி



மூலிகையின் பெயர் –: பருத்தி..

தாவரவியல் பெயர் -: GOSSYPIUM HERBACEUM.

;தாவரக்குடும்பம் -: .MALVACEA..

பயன்படும் பாகங்கள் -: இலை, மொட்டுகள், பூ மற்றும் விதை.

வளரியல்பு -: பருத்தி கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. பச்சையான அகலமான இலைகளை மாற்றடுக்கில் கொண்டது. மஞ்சளான பூக்களைக் கொண்ட செடி. இது சுமார் 4அடி முதல் 5 அடி வரை வளரக்கூடியது. . பூக்கள் முற்றி 3 அரை கொண்ட சப்பைகள் உண்டாகி பிஞ்சாக பச்சை நிறத்தில் இருக்கும். பிஞ்சுகள் முற்றி காய்ந்து பருத்திப் பஞ்சாக விரியும். பஞ்சு வெள்ளை நிறமாக இருக்கும்.. இது தமிழகமெங்கும் வளர்கிறது. பஞ்சிலிருந்து கொட்டையைப் பிறித்தெடுத்து எண்ணெய் எடுக்குவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் உபயோகிக்கிறார்கள். மருந்தாகவும் பயன் படுகிறது. பஞ்சிலிருந்து நூல் எடுத்து ஆடைகள் செய்யப் பயன்படுத்திகிறார்கள். இதில் பல ரகங்கள் உண்டு. நீர் பாய்ச்சியும், மானாவாரியாகவும் பயிர் செய்வார்கள். வரலச்சுமி என்ற ரகம் நல்ல மகசூல் கொடுக்கிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் – இது மலமிளக்கி, காமம் பெருக்கி, கோழையகற்றி மேலும் இரத்த கிரஹினி, முழங்கால் வலி, பெண் குறியில் வலி, சிறுநீர்தடை, நீர்ச்சுருக்கு, மாதவிடாய் தடை போன்றவறை குணமாக்க வல்லது.

பருத்துயின் இலை அல்லது மொக்கையாவது கால் பலம் அரைத்து, அரைஆழாக்குப் பசும்பாலில் கரைத்து உண்ணச் சீழ்ப் பிரமேகம், இரத்த பித்த ரோகம், இரண சோபை ஆகியவற்றை நீக்கும்.

இதன் கொழுந்து அதிசார பேதியையும், இதன் இலையைச் சாம்பலாக்கி இரணங்களில் போட ஆறும். பருப்பு லேகியங்களில் சேர்க்கத் தாது விருத்தி உண்டாகும்.

'பருத்தி பெரும்பாட்டைப் போக்கும்' –யோகர் நிகண்டு 1500

பருத்தி விதை, அரிசித் திப்பிலி, நெற்பொறி, ஏலக்காய், சர்கரையும், தேனும் மேற்படி சூரணத்துடன் கலந்துண்ண விக்கல், வாந்தி தீரும்.