"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, July 12, 2016

வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம்

வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம

பெண்களே வெள்ளைப்படுகிறதா உஷார் - கவனக் குறைவாக இருந்தால் கார்பப்பை இழக்க நேரிடும்.

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்று கூறுகிறார் சித்த மருத்துவர் டாக்டர் சங்கர்.

இது குறித்து மாமல்லன் சித்த மருத்துவமனையின் டாக்டர். சங்கர் இதோ விளக்குகிறார்.

இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.

இந்த நோய் வருவதற்கான காரணங்கள

* தவறான உணவுப் பழக்கங்கள
* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல
* சுகாதாரமற்ற உள்ளாடைகள
* சுய இன்பம் காணுதல
* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல
* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள
* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள

மேற்கூறிய காரணங்களாலேயே இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள

* இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.

* உடல் மெலிந்து இடுப்பு, ை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.

* உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.

* பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

* மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.

* இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.

வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம

* கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.

* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.

* தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறைகள

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

* மசாலா பொருட்கள், காபி, ீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல மருந்துகள் உள்ளன. என்னிடம் வரும் நோயாளிகளில் இந்த வெள்ளைப்படுதலை குணப்படுத்த வரும் பெண்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெள்ளைப்படுதலை அலட்சியப்படுத்தாமல் உடன் தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும். சித்த வைத்தியத்தில் வெள்ளைப்படுதலை கணப்படுத்த எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.