"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, November 8, 2016

அழுகண்ணி காயகற்பம் மூலிகை .


நூறு வயது ஆயுளை தரும். அழுகண்ணி மூலிகை
அழுகண்ணி காயகற்பம் மூலிகை .
இது கத்தி- துப்பாக்கி- விபத்து- சர்க்கரை வியாதி புண்- அனைத்து வகையான ஆறாத காயங்களை - பாதிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைத்துப் புண் ஆகாமல் ஆற்றும் சத்தியுடைஞது: இதற்கு வட மொழியில் சாவல்யகரணி என்று பெயர்
.இது கடலை இலை போன்ற இலையுடன் ஒரு அடி உயரம் உள்ள குத்துச் செடியாக இருக்கும்.இதன் இலை தடிப்பாகவும் வழு வழுப்பாகவும் .இலையில் இருத்து பனித்துளிபோன்று நீர் கசிந்து சொட்டுவதால் இலையின் அடியில் ஈரமாகவும்.எறும்பு மொய்த்துக் கொண்டும் இருக்கும்.இது இனிபபு சுவையுடையது இதை முறைப்படி காப்பு கட்டி. சாபம் போக்கி எடுக்கவேண்டும்.
இதைக் கொண்டுவந்து நிழல்பாடம் செய்து உலர்ந்தபின் இடித்துத் தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து ஒரு சீசாவில் பதனம் செய்யவும் இதை திரிகடி பிரமாணம் தேனில் குழைத்துக் காலை மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் வேல். ஈட்டி. அம்பு. முதலிய கூரிய ஆயுதம் உடலில் தாக்கப்பட்டவுடன் தண்ணீர் பிரிந்து கூடுவது போல் கூடும். வெட்டு குண்டு முதலியன உடலைஒன்றும் செய்ய இயலாது மேலும் நரை திரை நீங்கி காயகற்பம் ஆகும் யானையைப் போன்ற வலிமையும் அருணனைப் போன்ற அழகும் உண்டாவதுடன்
(வெகு காலம் உடல் அழிவுறாது.)- என்று காலாங்கி நாத சித்தர் தனது ஓலைசுவடியில் கூறியுள்ளார் -
இதன் வடக்குப்போகும் வேரை எடுத்துத் தங்கத்தால் தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து. பூஜை செய்து வலது புஜத்தில் கட்டிக்கொண்டால் சகல காரிய சித்திவுண்டாகும். லட்சுமி கடாட்சம் தொழில் விருத்தி வியாபாரம் விவகார ஜெயம் முதலிய காரியசித்தி ஏற்படும்.