"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, May 12, 2016

ஜோதி விருட்சம்




ஜோதி விருட்சம்
ஜோதிட விருட்சம் என்பது ஓர் அபூர்வ மரவகையை சேர்ந்தது, மூலிகை வளம் நிறைந்த கொல்லி மலையில் ஜோதி விருட்சம் மரம் இருந்துள்ளது தற்போது அம் மரம் ஒடிந்து விழுந்து விட்டதாகவும் அதன் அடிபகுதி மரம் மட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

இம் மரத்தின் இலைகள் நாவல் மரத்தின் இலைகளை போலவும், பூக்கள் நீலம் கலந்த வெண்மை நிறமாகவும் காணப்படும். மரம் முலுவதும் பட்டைகளில் வெடிப்புகள் உள்ளன அந்த வெடிப்பு பகுதிகளில் ஒருவகையான பிசின் போல பால் கசிந்து கொண்டே இருக்கும்.


ஜோதி விருட்சம்
இந்த பாலில் உள்ள ஈரம் காயும் வரை இரவில் மின்மினி பூச்சி அல்லது கடிகாரத்தில் உள்ள ரேடியன் போல ஒளிர்ந்து கொண்டே இருக்கும் இரவில் இந்த வெளிச்சத்தை கொண்டு ஜோதி விருட்சத்தினை அடையாம் காண்பது எளிது. பாலின் ஈரப்பதம் காய்ந்த பிறகு ஒளிரும் தன்மை மறைந்து விடும்.

ஜோதி விருட்சம் மரத்தினை இரவில் காண்போருக்கு அதன் ஜோதி பிரகாசமகவும் மனதில் ஒருவகையான அமைதியும் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

100 ஆண்டுகள் வலிமையோடு வாழ

ஜோதி விருட்சம் பட்டையைத் நன்கு தட்டி சாறு பிழிந்து அதில் செம்பை உருக்கி சேர்த்தால் செம்பு களிம்பு அற்ற பொன்னாகும். பட்டையை உலர்த்தி குழித்தலைம் எடுத்து சிறு கண்ணாகத்தை உருக்கி ஏழுதடவை சாய்த்தால் நாகம் புகையாது கட்டும் கட்டிய நாகத்தை குகையில் வைத்து உருக்கி அதன் எடைக்கு நிகர் எடை தங்கம் சேர்த்து எடுத்து கல்வத்திலிட்டு அதற்க்கு இரண்டு பங்கு பாதரசம் சேர்த்து அரைத்து உருட்டி வெண்ணை போல் செய்து எடுத்து கொள்ளவும்.
கந்தகம் இரண்டு பங்கு தாளகம் ஒரு பங்கு கூட்டி ஜோதி விருட்சம் பிசின் விட்டு அரைத்து ரச உருண்டை மேல் கவசம் போல் பூசி, அதன்மேல் சீலை மண் செய்து உலர்த்தி, 50 எருவில் புடம் போட்டு ஆறியபின் எடுத்தால் செந்தூரம் ஆகும். அதைக் கல்வத்திலிட்டு அரைத்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப் படுத்தவும்.

இதில் அரிசி எடை அளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் அருணனை யொத்த தேஜசும் யானையை நிகர்த்தமான வலிமையைப் பெற்று 100 ஆண்டுகள் வாழலாம் என்று காலாங்கி நாதர் கூறியுள்ளார்.
சோதி விருட்ச்சம், விருட்சம், சோதிட விருட்சம், ஜோதிட விருட்சம், விருச்சம், ஜோதிட விருட்சம் மரம் படம். கொல்லி மலை.