"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, May 12, 2016

குமிழம் செடி


குமிழம் செடி படர்ந்து வளரும் முட்களை உடைய தாவரம். இதன் பூகள் தங்க நிறத்திலும், இலைகள் நீள்வட்டத்திலும், மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய முட்களைய தாவரம். மலை பாங்கான இடத்தில் குமிழம் மரமாகவே கணப்படுகின்றன. குமிழமரத்தின் வேர், பழம், பட்டைகள் மற்றும் இலைகள் மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகின்றன.
குமிழம் மருத்து தன்மை

மாதவிடாய் வலி
பெண்களுக்கு மாதவிடய் காலத்தில் ஏற்ப்படக் கூடிய வயிற்றுவலி போக்கும் மருந்தாக பயன்படுகிறது. குமிழம் இலையை கைப்பிடியளவு எடித்து அதில் சீரகம், நறுக்கிய சிறிய வெங்காயம் கைப்பிடியளவு சேர்த்து நங்கு இடிதெடுத்து அதில் சாறு பிழிந்து ஆழாக்களவு நீரகத்தில் விட்டு கலக்கி மாதவிடாய் ஆன மூன்றாம் நாள் சாப்பிட்டு வர அடுத்த விலக்கின் போது வலி ஏற்ப்படாது, மருந்து சாப்பிடும் காலத்தில் புளி சேர்க்க கூடாது.
வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி
குமிழம் இலை சாற்றுடன் பால், சக்கரை கலந்து காலை மாலை பருகிவர வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி ஆகியவை தீரும்.

தலைவலி
இலையை அரைத்து பற்று போட காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி தீரும் என மருத்துவ குறிப்பில் கூறப்பட்டுள்ளது.