"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, May 12, 2016

அம்மான் பச்சரிசி


அம்மான் பச்சரிசி
ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டிவடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்

இலையைச் சமைத்து உண்ண வறட்சி அகலும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் தீரும்.

தூதுவேளை இலையுடன் துவையல்செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இருவேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

பூவுடன் 30 கிராம் அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய்ப்பால் பெரும்.

பாலைத்தடவி வர நகசசுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

இலையை நங்கு அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.