"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, June 16, 2016

இலந்தை இலை

இலந்தை இலைக்கு தசை மற்றும் நரம்புகளை சுருங்க செயும் தன்மை உள்ளது . இதற்கு கர்பப்பை கோளாறுகளை சரிசெயும் குணம் உண்டு .இதன் வேர் மற்றும் பட்டை இரண்டும் நல்ல பசி தூண்டியாகவும் உள்ளது. இதன் பழம் மலசிக்கலை சரியாக்கும் சளியை நீக்கும். உடல் வலி நீக்கும் மன அமைதி தந்து மன உளைச்சலை சரியாக்கும் .

இது ஆஸ்துமாவை குணபடுத்தும் . இருதய நோய் சரிசெயும். கண் பார்வை தெளிவாகும். ஜப்பான் சைனா கொரியா போன்ற நாடுகளில் இலந்தை இலையை டீ தயாரித்து குடிக்கின்றனர். பங்களாதேஷ் மேற்க்கு வங்காளம் போன்ற இடத்தில் ஊறுகாய் தயாரித்து உண்பர் . தமிழ்நாடுகளில் உப்பு இலந்தை பழம் மிளகாய் வற்றல், புளி சேர்த்து இடித்து வடையாக தட்டி வெயிலில் காயவைத்து உபயோக்கின்றனர்.

இதில் வைட்டமின் எ, பி2 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு சத்து, கால்சியம் உள்ளது . இதில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது.

ஒரு கை பிடி இலந்தை இலை,பூண்டு 4பல், மிளகு6 சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் மாதவிலக்கான முதல் இரண்டு நாள் உள்ளுக்கு கொடுக்க கர்பப்பை குற்றம் சரியாகி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இரத்ததை சுத்தம் செயும் குணம் இலந்தைக்கு உண்டு மற்றும் இரத்தில் உள்ள கழிவை அகற்றி இரத்தத்தை சீராக ஓட உதவி செய்கிறது. இது குளிர் காலத்தில் வரும் பழம் ஆகும். இதை சிறிய பேரிட்சை என்பர்.